இயக்குனர்கள் நர்ஸ்களை ஒரு கிளாமர் டூலாக மட்டும் காட்சிப்படுத்துவது ஏன்?

Posted By:
Subscribe to Boldsky

நேற்று , இன்று என்றில்லை, கோலிவுட், பாலிவுட் என்றில்லை... பலகாலமாக, உலகின் பல்வேறு மொழிப் படங்களிலும் நர்ஸ் வேலை பார்பவர்களை ஏதோ கிளாமர் டூலாகவும், மருத்துவர்களிடம் கொஞ்சிக் குலாவும் நபர்களாகவும் தான் பெரும்பாலும் காட்சிப் படுத்துகின்றனர் திரைப்பட இயக்குனர்கள்.

எப்படி வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களை எப்போதும் ஒரு செக்ஸ் ஃபன் நபராக காட்சிப்படுத்துகிறார்களோ அப்படி தான் மருத்துவமனை காட்சிகளில் நர்சுகளை காட்சி படுத்துகின்றனர். இந்த கீழ்த்தரமான எண்ணத்திற்கு யார் தான் முற்றுப்புள்ளி வைப்பது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புனிதமான தொழில்!

புனிதமான தொழில்!

நர்ஸ் வேலை என்பது முற்றிலும் புனிதமான தொழில். உங்கள் அப்பாவிற்கோ, அம்மாவிற்கோ வீட்டில் அல்லது நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் போது நீங்கள் செய்ய தயங்கும் வேலைகளை கூட, சற்றும் அருவருப்பு இல்லாமல், தயக்கமின்றி செய்பவர்கள் தான் நர்ஸ். அவர்களை கிளாமர் ரோல்களில் காண்பித்து கொச்சைப் படுத்துவது என்பது அபத்தமாக தெரியவில்லையா?

நோயாளிகளின் மகள்!

நோயாளிகளின் மகள்!

சில சமயங்களில் உங்களது வயதான அப்பா, அம்மா திட்டினால் கூட உங்களால் தாங்குக் கொள்ள முடியாது, கோபப்படுவீர்கள். ஆனால், மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள் அவர்களது சொந்தமும் அல்ல, பந்தமும் அல்ல.

ஆயினும், நோய் காரணமாக, வலி காரணமாக அவர்கள் தங்களை திட்டினாலும் கூட பொறுத்துக் கொண்டு, முகம் வாடாமல் வேலை செய்பவர்கள் தான் நர்ஸ்.

சமூகத்தின் தீய எண்ணம்...

சமூகத்தின் தீய எண்ணம்...

நமது சமூகத்தில் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வேலை செய்தால் அவர்கள் உடல் ரீதியான உறவில் இணைந்திருப்பார்கள் என்ற எண்ணம் மறைமுகமாக ஆழப்பதிந்துள்ளது. அதன் காரணமாக தான், வேறு ஆண் வீட்டில் ஏழை பெண் வேலைக்கு சென்றாலும், மருத்துவமனையில், மருத்துவருடன், ஒரு பெண் நர்சாக பணிபுரிந்தாலும், நமது கெட்ட புத்தி, கண்டதை எண்ணி, கற்பனை செய்து புரளியை பரப்புகிறது.

இயக்குனர்களுமா?

இயக்குனர்களுமா?

சாதாரண மக்கள் தான் எந்த சமூக அக்கறையும் இல்லாமல் புரளி பேசுவதாக இருக்கிறார்கள் என்றால், சமூக பொறுப்பு உடைய, பல கோடிக்கணக்கான மக்களுடன் தங்கள் படைப்பு மூலமாக நேரடியாக தொடர்புக் கொள்ளும் இயக்குனர்கள், குருட்டுத்தனமாக நர்ஸ் வேலை செய்பவர்களை கிளாமர் டூலாக பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?

முற்றுப்புள்ளி வைக்க போவது யார்?

முற்றுப்புள்ளி வைக்க போவது யார்?

யார் எவர் என்று தெரியாத நபர்களுக்கு ஒரு மகளாக, தாயாக இருந்து உதவி புரியும் இவர்களை ஒரு கிளாமர் டூலாக திரைப்படங்களில் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

வாழ்வில் ஒருமுறையாவது மருத்துவமனையில் உடல்நல குறைபாடு காரணமாக அவசர சிகிச்சை பெற்று வந்த நபர்களுடன் நீங்கள் தங்கியிருந்திருந்தால், நர்ஸ் வேலை செய்பவர்கள் எவ்வளவு புனிதமானவர்கள் என்பது தெரிந்திருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Filmmakers Visualizing Nurse Profession as Glamour Tool?

Why Filmmakers Visualizing Nurse Profession as Glamour Tool?
Story first published: Wednesday, October 12, 2016, 11:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter