For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாருப்பா இந்த அம்புஜா சிமி? ஃபேஸ்புக்கே முடக்கிருச்சாம்ல...!

ஃபேஸ்புக்கில் போலி அக்கவுன்ட் மூலம் 2.7 ;அச்சம் ஃபாலோவர்ஸ் வைத்திருந்த அம்புஜா சிமி என்பவரை முடக்கியது ஃபேஸ்புக்!

|

ஃபேஸ்புக்கில் போலி அக்கவுன்ட்டுகள் பலவன இருக்கின்றன. முக்கியமாக பிரியா ஸ்வீட்டி என்ற போலி பெயர் மிகவும் பிரபலம். இந்த பட்டியலில் அம்புஜா சிமி என்ற அக்கவுன்ட் மிக பிரபலமாக இருந்து வந்தது.

இவர் பகிரும் செய்திகள், பதிவு செய்யும் செய்திகள் அனைத்தும் ஆயிரக்கணக்கில் ஷேர்கள் செய்யப்படும். இவர் போலி தான் என சிலருக்கு தெரியும் என்றாலும், பல ஆயிரக்கணக்கான ஆண்கள் அம்புஜா ரியல் கேர்ள் என நினைத்து அவரது பதிவுகளுக்கு "லவ்" ஸ்மைலிகளை பறக்கவிட்டுக் கொண்டிருந்தனர்.

லவ் ஸ்மைலி பறக்கவிட்ட அன்பர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அம்புஜா முடக்கம்!

அம்புஜா முடக்கம்!

போலி அக்கவுன்ட் மூலம் 2.7 லட்சம் ஃபாலோவர்களை கொண்டிருந்த அம்புஜா அக்கவுண்டை ஃபேஸ்புக் முடக்கிவிட்டது.

தேடல்!

தேடல்!

முடிக்கிய பிறகு தான் அம்புஜா அக்கவுன்ட்டை தெரியாதவர்கள் கூட தேடி வருகின்றனர். கிட்டத்தட்ட இப்போது வரை 81 ஆயிரம் பேர் தேடியுள்ளனர்.

எபௌட் அம்புஜா!

எபௌட் அம்புஜா!

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் ஊடகம் ஒன்றில் பணிபுரியும் பெண்ணாக உதயம் ஆனது அம்புஜா அக்கவுன்ட். இவர் தென்காசியை சேர்ந்தவர் என்ற குறிப்புடன் இந்த போலி அக்கவுண்டை ஆரம்பித்துள்ளார்.

சமூக அக்கறை!

சமூக அக்கறை!

அம்புஜா போலி அக்கவுன்ட்டாக இருப்பினும் நிறைய சமூக அக்கறை கொண்ட பதிவுகளை பதிவு செய்திருக்கிறார். இவரது ஃபாலோவர்களில் 90% மேலானவர்கள் ஆண்களே.

அம்புஜத்தின் கணவர்!

அம்புஜத்தின் கணவர்!

போலி என்ற சந்தேகங்கள் எழ, இவரது கணவர் ரகுவரன் என்ற பெயரில் மற்றுமொரு போலி அக்கவுன்ட் துவக்கப்பட்டுள்ளது. ஒரு நிஜமான குடும்பத்தை போலவே குழந்தை படம் எல்லாம் பதிவு செய்து நம்ப வைத்திருக்கிறார் அம்புஜா.

கண்டுபிடி!

கண்டுபிடி!

இவர் மீது சந்தேகப்பட்ட ஊடகவியலாளர் ஒருவர். அம்புஜா பணிபுரிவதாக கூறப்பட்டிருந்த ஊடகத்திற்கு கால் செய்து விசாரிக்க அம்புஜம் போலி என்பது தெரியவந்தது.

அவரும் ஒரு ஊடகவியலாளர்!

அவரும் ஒரு ஊடகவியலாளர்!

இந்த போலி அக்கவுன்ட்டை நடத்தி வந்தவரும் ஒரு ஊடகவியலாளர் தானாம். பெண் பெயரில் அக்கவுன்ட் இருந்தால் தான் நல்ல ரீச் கிடைக்கிறது என அவர் இந்த அக்கவுன்ட்டை யூஸ் செய்து வந்துள்ளார்.

வங்காளதேசம்!

வங்காளதேசம்!

அம்புஜா ஃபேக் ஐடி பயன்படுத்தி வந்த அந்த பெண் புகைப்படம் வங்காளதேசத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Who is Ambuja Shimi?

Who is Ambuja Shimi? Facebook blocked the fake ID User who has 2.7 Lakh Followers.
Desktop Bottom Promotion