கால்கள் மட்டுமல்ல, பெற்றோரும் இல்லை, கூலி வேலை தான் - உதாரணமாக வாழ்ந்து காட்டும் அப்துல்லா!

Posted By:
Subscribe to Boldsky

முடியும் என்று நினைத்தால் முடியாதது எதுவுமில்லை என்பார்கள். ஆம், அதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தான் என்கிறார் முஹமது அப்துல்லா. கால்பந்தாட்டத்திற்கு நல்ல ஓட்டம் அவசியம், பந்தை லாவகமாக கால்களால் உதைத்து செல்ல வேண்டும்.

கால்கள் இல்லாமல் ஒருவர் கால்பந்தாட்டம் எப்படி ஆடுவார் என்று யோசிப்பவர்களது கண்முன் ஓடி, ஓடி பந்தை லாவகமாக தட்டி உதைக்கிறார் முஹமது அப்துல்லா. வாய்ப்பு கிடைக்கவில்லை, அதனால் தான் சாதிக்கவில்லை என்பவர்கள் எல்லாம் கண்டிப்பாக இவரை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும்...

Cover Image Courtesy: CAP

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாற்றாந் தாய் கொடுமை!

மாற்றாந் தாய் கொடுமை!

தன் தாயால் கைவிடப்பட்டு, தந்தையிடம் தஞ்சம் கொண்டிருந்தேன். எனது மாற்றாந்தாய் தன்னை அடித்து உதைத்து கொடுமை படுத்தியதால் வீட்டை விட்டு ஓடிவந்துவிட்டேன் என்கிறார் முஹமது அப்துல்லா.

சிறு குழந்தை!

சிறு குழந்தை!

தான் கால்களை இழந்த போது, அந்த நேரத்தில் தனது வயது 7 - 8 எட்டு தான் இருக்கும். ரயில் சக்கரத்தில் சிக்கி தான் தனது கால்களை இழந்ததாக அப்துல்லா கூறியிருக்கிறார்.

தனிமை!

தனிமை!

நான் வீட்டை விட்டு ஓடிவந்த போது, முற்றிலும் தனிமையில் தான் இருந்தேன். என் குடும்பத்தாருக்கு எனக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து தெரியாது.

கால்பந்து!

கால்பந்து!

நான் பரிசாலில் (என்.ஜி,ஒ) வாழ்ந்து வந்த போது தான் கால்பந்து ஆட துவங்கினேன். நான் என்றும் என்னால் கால்பந்து விளையாட முடியும், மற்றவர்களால் நடக்க முடியும் என எண்ணியது இல்லை.

அச்சம்!

அச்சம்!

உண்மையில் நான், எனது வாழ்நாள் முழுதும் ஒரு வீல்சேரில் அமர்ந்து கழிக்க போகிறேன் என்ற பெரிய அச்சத்தில் தான் இருந்தேன். ஒருநாள் ஒருபோதும் இனிமேல் இந்த வீல்சேரில் அமர கூடாது என முடிவு செய்து நடக்க முயன்றேன், என்கிறார் அப்துல்லா.

வேலை!

வேலை!

இப்போது சதர்காட் போர்ட்டில் கூலியாக வேலை செய்து வருகிறார் அப்துல். கால்கள் இல்லாமல் இவர் விளையாடுவதை மக்கள் வியந்து பார்க்கிறார்கள்.

கிறிஸ்டினோ ரொனால்ட்!

கிறிஸ்டினோ ரொனால்ட்!

தனக்கு மிகவும் பிடித்த கால்பந்து ஆட்டவீரர் கிறிஸ்டினோ ரொனால்ட் என அப்துல்லா தெரிவித்துள்ளார். எம்.பி.எ., இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பல பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலை கிடைக்கவில்லை என வீட்டில் முடங்கும் பட்டதாரிகளுக்கு முன் இவர் ஒரு சிறந்த முன்னுதாரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Football Player Without Foot

He is a great inspiration for all of us. Not even football, he plays with lilfe without legs.
Subscribe Newsletter