நம்ம பாலிவுட் பிரபலங்கள் டென்சனை இப்படி தான் போக்குவாங்களாம்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும், அதில் அதிக வேலைப்பளுவின் காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடுகிறது. சாதாரண மக்களை விட, சினிமா துறையில் இருப்போருக்கு மன அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கும். நடிகர், நடிகைகளாக இருந்தாலும், அவர்களும் மனிதர்கள் தானே. அவர்களுக்கும் டென்சன், மன அழுத்தம் போன்றவை வராமலா இருக்கும்.

ஆனால் நம் பாலிவுட் நடிகர், நடிகைகள் தங்களுக்குள்ள டென்சன் மற்றும் மன அழுத்தத்தை, ஒருசில செயல்களின் மூலம் போக்கிக் கொள்கிறார்கள். அதை விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தான் டென்சனாக அல்லது மன அழுத்தத்துடன் இருக்கும் போது அதைக் குறைப்பதற்கு வீடியோ கேம்ஸ் விளையாடுவராம். சொல்லப்போனால் தனியாக இருந்தால் தான் ஒருவரை மன அழுத்தம் அதிகம் தாக்கும். ஆனால் இவர் எப்போதும் தன்னை கொஞ்சம் பிஸியாக வைத்துக் கொள்வாராம்.

சாரதா கபூர்

சாரதா கபூர்

நடிகை சாரதா கபூர் தன் மன அழுத்தத்தைக் குறைக்க வீட்டில் வளர்க்கும் செல்ல நாயுடன் விளையாடுவாராம். இல்லாவிட்டால் இசையைக் கேட்பது, புத்தகங்கள் படிப்பது மற்றும் திரைப்படம் பார்ப்பது போன்றவற்றில் ஈடுபட்டும் தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்வாராம்.

ஆயுஷ்மன் குரானா

ஆயுஷ்மன் குரானா

நடிகர் ஆயுஷ்மன் குரானா இசையை ரசிப்பது, நன்கு உண்பது மற்றும் நன்கு தூங்குவது என்று செய்து தன் டென்சனைப் போக்கிக் கொள்வாராம்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா சீஸ் பர்கர் உட்கொண்டு தன் மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்வாராம்.

அனில் கபூர்

அனில் கபூர்

நடிகர் அனில் கபூர் தனக்குள்ள மன அழுத்தத்தைப் போக்க உடற்பயிற்சி செய்வதோடு, நண்பர்கள், குடும்படுத்தினர் மற்றும் மனைவியுடன் நேரத்தை செவலழிப்பாராம். மேலும் டென்சனாக இருந்தால் தூங்குவாராம்.

ஏமி ஜாக்சன்

ஏமி ஜாக்சன்

நடிகை ஏமி ஜாக்சன் உடற்பயிற்சி செய்து தனது டென்சன் மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பாராம். அதுமட்டுமின்றி,
வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளான நாய், பூனை மற்றும் குதிரையுடன் நேரத்தை செலவழிப்பாராம். முக்கியமாக தன் அம்மாவுடன் மனம் விட்டு பேசி, மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வாராம்.

பூமி பெட்னேக்கர்

பூமி பெட்னேக்கர்

பூமி பெட்னேக்கர் பாடி மசாஜ் செய்து ரிலாக்ஸ் ஆவாராம். அதிகளவு டென்சன் அல்லது மன அழுத்தம் என்றால் பிடித்த இடத்திற்கு பயணம் மேற்கொள்வது அல்லது பிடித்த படத்தைப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவாராம்.

நேகா தூபியா

நேகா தூபியா

நடிகை நேகா தூபியா தனக்குள்ள மன அழுத்தத்தைப் போக்க ரன்னிங் அல்லது ஸ்விம்மிங் செல்வாராம். மேலும் விமானத்தில் நீண்ட தூர பயணம் மேற்கொள்வாராம். ஏனெனில் விமான பயணத்தின் போது மன அழுத்த மெஷினான செல்போனை ஆஃப் செய்து விடலாம் அல்லவா!

சோனு சூட்

சோனு சூட்

நடிகர் சோனுவிற்கு மன அழுத்தத்தின் போது பிடித்த இசையைக் கேட்டுக் கொண்டே வியர்வை நன்கு வெளிவர உடற்பயிற்சி செய்வாராம். மேலும் திருமணமாகிவிட்டதால், தன் துணைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவராம். இதனால் இவருக்கு மன அழுத்தம் குறையுமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Is How These Bollywood Celebrities Keep Stress At Bay!

This Is How These Bollywood Celebrities Keep Stress At Bay! Take a look...
Story first published: Tuesday, October 27, 2015, 15:51 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter