சச்சினின் பிறந்தநாள், "தல"அஜித்தின் திருமண நாள்!! வேற என்னெல்லா இன்னிக்கு ஸ்பெஷல்'னு தெரியுமா!!!

Posted By:
Subscribe to Boldsky

வருடத்தின் சில நாட்கள் பொங்கல், தீபாவளி என்று அனைவருக்கும் சிறப்பான நாளாக அமையும். இதுப்போக, ரசிகர்களுக்கு அவரவருக்கு பிடித்த பிரபலங்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சிறப்பான நாளாக கொண்டாடுவார்கள்.

தமிழ் புத்தாண்டு நாளான இன்று நடந்த திகைக்க வைக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள்!!!

இப்படி வருடத்தில் ஒவ்வொரு நாளிலும் ஏதேனும் ஒரு சிறப்பு இருக்கத் தான் செய்கிறது. ஆனால், ஒரே நாளில் சச்சினின் பிறந்தநாள், "தல" அஜித்தின் திருமண நாள் என்று தமிழக ரசிகர்களுக்கு, ஏப்ரல் 24 ஓர் குட்டி தீபாவளி நாள்.

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முட்டாள்கள் தினத்தன்று நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள்!!!

இது மட்டுமல்ல, இன்னும் நிறைய சுவாரஸ்யமான நிகழ்வுகளும், தருணங்களும் ஏப்ரல் 24 தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது, அவை எல்லாம் என்னவென்று இனி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

"தல" திருமண நாள்...

அமர்க்களம் படத்தில் நடித்த போது, காதல் வயப்பட்ட அஜித்தும், ஷாலனியும் கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாளன்று திருமணம் செய்துக் கொண்டனர்.

 சச்சினின் பிறந்தநாள்...

சச்சினின் பிறந்தநாள்...

கிரிக்கெட்டின் கடவுள் என்று புகழாரம் சூட்டப்பட்ட சச்சின் ரமேஷ் டெண்டுல்கருக்கு இன்று 42 வயது பூர்த்தியடைகிறது. கிரிக்கெட்டை விட்டு ஓய்வு பெற்ற பிறகும் கூட ரசிகர்கள் கொண்டாடும் தலைசிறந்த வீரராக திகழ்கிறார்.

ஜெயகாந்தனின் பிறந்தநாள்...

ஜெயகாந்தனின் பிறந்தநாள்...

சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர், ஜெயகாந்தன் அவர்கள் பிறந்தநாள் இன்று.

ஜி. யு. போப் பிறந்தநாள்...

ஜி. யு. போப் பிறந்தநாள்...

கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இன்று இவரது 195வது பிறந்தநாள் ஆகும்.

கன்னட நடிகர் ராஜ்குமார் பிறந்தநாள்...

கன்னட நடிகர் ராஜ்குமார் பிறந்தநாள்...

பரவலாக அறியப்பட்ட‌ கன்னட திரைப்பட நடிகரான நடிகர் ராஜ்குமார் அவரது பிறந்தநாள் இன்று. இவர் அவரது ர‌சிக‌ர்க‌ளால், "டாக்ட‌ர் ராஜ்", "ந‌ட‌ச‌ர்வ‌புமா", "அன்னாவரு" போன்ற செல்ல‌ப் பெய‌ர்க‌ள் கொண்டு அழைக்கப்பட்டார்.

அமெரிக்காவின் முதல் செய்தி பத்திரிக்கை

அமெரிக்காவின் முதல் செய்தி பத்திரிக்கை

ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப் பத்திரிக்கையான "தி பொஸ்டன்" நாளிதழ் கடந்த 1704 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

முதல் ஐ.பி.எம் கணினி...

முதல் ஐ.பி.எம் கணினி...

கடந்த 1981 ஆம் ஆண்டு இதே நாளில் தான், ஐ.பி.எம்-ன் முதலாவது தனி மேஜைக் கணினி அறிமுகமானது.

பஞ்சாயத்து அரசுத் திட்டம்...

பஞ்சாயத்து அரசுத் திட்டம்...

இந்தியாவில் பஞ்சாயத்து அரசுத் திட்டம், கடந்த 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாளன்று தான் அமைக்கப்பட்டது.

 டிஸ்கவரி விண்ணோட்டம்...

டிஸ்கவரி விண்ணோட்டம்...

இன்றைய தினத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு, டிஸ்கவரி விண்கலம், ஹபிள் தொலைக்காட்டியை (The Hubble Space Telescope) விண்ணுக்குக் கொண்டு சென்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Special Moments That Happened In April 24

Do you about the special moment that happened in april 24? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter