'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீட்டிற்கு பிங்க் நிற புடவையில் அம்சமாக வந்த ஸ்ருதிஹாசன்!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் தெலுங்கில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த வெளியீட்டு விழாவிற்கு நடிகர் கமல்ஹாசன், நடிகை கௌதமியுடன் வந்திருந்தார். அவர்களுடன் முன்னணி நடிகையும், கமலின் மகளுமான நடிகை ஸ்ருதிஹாசனும் வந்திருந்தார். இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் மார்டன் உடையில் வரும் ஸ்ருதி, தந்தை நடித்த படத்தின் இசை வெளியீட்டிற்கு அழகாக டிசைனர் கவுரங் ஷா வடிவமைத்த பட்டுப்புடவையில் அம்சமாக வந்திருந்தார்.

அதுமட்டுமின்றி, நடிகை கௌதமி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட வெள்ளை நிற புடவையில் பளிச்சென்று வந்திருந்தார். நடிகர் கமல்ஹாசன் எப்போதும் போன்று கோட் சூட்டில் வந்திருந்தார். இங்கு தெலுங்கில் வெளிவந்த 'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீட்டிற்கு நடிகை ஸ்ருதிஹாசன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிங்க் நிற பட்டுப் புடவையில் ஸ்ருதி

பிங்க் நிற பட்டுப் புடவையில் ஸ்ருதி

நடிகை ஸ்ருதிஹாசன் உத்தம வில்லன் படத்தின் இசை வெளியீட்டிற்கு டிசைனர் கவுரங் ஷாவின் பிங்க் நிற பட்டுப் புடவையில் அம்சமாக வந்திருந்தார். இது தான் அவர் அணிந்து வந்த பட்டுப் புடவை.

கமல் மற்றும் கௌதமியுடன் ஸ்ருதி

கமல் மற்றும் கௌதமியுடன் ஸ்ருதி

இது நடிகர் கமல்ஹாசன் மற்றும் கௌதமியுடன் ஸ்ருதிஹாசன் சேர்த்து உட்கார்ந்திருந்த போது எடுத்த போட்டோ.

ஸ்ருதியின் மேக்கப்

ஸ்ருதியின் மேக்கப்

ஸ்ருதி பிங்க் நிற பட்டுப்புடவைக்கு ஏற்றவாறு கண்களுக்கு அழகாக கண் மையும், உதட்டிற்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் மற்றும் கன்னகளுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து வந்திருந்தார்.

ஸ்ருதியின் ஹேர் ஸ்டைல்

ஸ்ருதியின் ஹேர் ஸ்டைல்

ஸ்ருதிஹாசன் புடவைக்கு ஏற்றவாறு பிரெஞ்சு ப்ளாட் ஹேர் ஸ்டைலை மேற்கொண்டு வந்திருந்தார்.

ஸ்ருதியின் ஆபரணங்கள்

ஸ்ருதியின் ஆபரணங்கள்

ஸ்ருதிஹாசன் வைரம் பதிக்கப்பட்ட கம்மல் மற்றும் நீளமான செயின் போட்டு வந்திருந்தது, அவரை பளிச்சென்று வெளிக்காட்டியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shruti Haasan Looks Beautiful In A Gaurang Shah Saree

Shruti Haasan looks amazingly cute in the heavy cotton silk saree by designer Gaurang Shah at the Uttama Villain Audio Launch. Take a look at this beauty. 
Story first published: Monday, March 30, 2015, 18:46 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter