பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமா அவர்களது வாழ்க்கை வரலாறு!

Posted By:
Subscribe to Boldsky

ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்கள், ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து கின்னஸ் சாதனை புரிந்த பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமா அவர்கள் ஓர் சிறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை. கோடிக்கணக்கான மக்களை மகிழ வைத்த மனோரமா அவர்களது வாழ்க்கை வரலாறு நாம் நினைப்பது போல அவ்வளவு மகிழ்வானது அல்ல.

ஆச்சி மனோரமா என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவரது தனிப்பட்ட வாழ்க்கை கொஞ்சம் சோகம் சூழ்ந்த வானமாகவே இருந்தது. கடைக் காலக்கட்டத்திலும் கூட இவர் மிகவும் கடினமான வாழ்க்கையை தான் வாழ்ந்தார். மனம் மட்டுமின்றி போக போக உடலும் இவரை சோதிக்க ஆரம்பித்தது. கால் மூட்டு வலியால் வெளியிடங்களுக்கு கூட சென்று வர முடியாத அளவு உடல்நலம் குன்றி போயிருந்தார் மனோரமா.

இனி இவரது ஆரம்பக் காலக்கட்ட, காதல், சினிமா போன்றவற்றைக் கடந்து வந்த பாதையை காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தங்கத்தட்டில் பிறந்தவர்

தங்கத்தட்டில் பிறந்தவர்

இவரது இயற்பெயர் கோபிசாந்தா. இவரது பெற்றோர் காசி 'கிளாக்' உடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜமன்னார்குடியில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.

திடீர் திருப்பம்

திடீர் திருப்பம்

தந்தை காசி கிளாக்குடையார் மனோரமாவின் தாயின் தங்கையை இரண்டாம் தாரமாகத் திருமணம் புரிந்தார். இதனை அடுத்து கணவனால் புறக்கணிக்கப்பட்ட இராமாமிருதம் மனோரமாவுடன் வறுமையின் காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார்.

மனோரமா பெயர் காரணம்

மனோரமா பெயர் காரணம்

தனது 12ஆவது வயதில் நடிப்புத் தொழிலில் இறங்கினார். "பள்ளத்தூர் பாப்பா" என அழைக்கப்பட்ட அவர்[8] நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு "மனோரமா" எனப் பெயர் சூட்டினர்.

எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றத்தில் சேர்ந்தார்

எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றத்தில் சேர்ந்தார்

ஆரம்பத்தில் "வைரம் நாடக சபா" நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அக்காலத்தில் புதுக்கோட்டையில் எஸ். எஸ். ராஜேந்திரன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி. ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட இராசேந்திரன் தனது "எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்" சேர்த்துக் கொண்டார்.

காதல் திருமணம் முறிவில் முடிந்தது

காதல் திருமணம் முறிவில் முடிந்தது

மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். இராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி எனும் மகன் பிறந்தார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார்.

ஐந்து முதல்வர்களுடன் நடித்தவர்

ஐந்து முதல்வர்களுடன் நடித்தவர்

இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக ஆச்சி மனோரமா அவர்களுக்கு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் கிடைத்தது.

விருதுகள்

விருதுகள்

பத்ம ஸ்ரீ - 2002, தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை (புதிய பாதை - 1988), தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, வாழ்நாள் சாதனையார் விருது - 2015, புதிய தலைமுறை (தொலைக்காட்சி) சக்தி விருதுகள், மற்றும் பல திரைத்துறை சார்ந்த விருதுகளை வென்றவர் மனோரமா அவர்கள்.

முன்னோடி

முன்னோடி

நகைச்சுவை வேடம் ஏற்று நடிப்பதில் ஆண்களின் ஆதிக்கம் இருந்த காலக்கட்டத்தில் தனித்து, தனித்துவமாய் தனது திறமையை நிரூபித்து சாதித்தவர் ஆச்சி மனோரமா. இவரது இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாதது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Life History Of Actress Manorama

Here We have discussed about the life life history of legendary actress manorama, in tamil. take a look.
Subscribe Newsletter