உலகின் பெரும் எம்.என்.சி நிறுவனங்களை ஆட்டிப்படைக்கும் இந்தியர்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியர்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு இது ஒரு மிகப்பெரிய உதாரணமாக இருக்கும். செல்லுமிடமெல்லாம் புகழுக்கு வஞ்சனை இல்லாமல் திகழும் இந்தியர்களுக்கு ஏனோ இந்தியாவில் மட்டும் தான் மதிப்பில்லையோ என்ற எண்ணத்தையும் இது தூண்டுகிறது.

ஆயிரம் அலெக்சாண்டருக்கு சமமான இராஜேந்திர சோழனைப் பற்றிய அரியக் குறிப்புகள்!!!

இந்தியாவில் படிப்பை முடித்து சென்றவார்கள், அமெரிக்காவாழ் இந்தியர்கள் என இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள் எல்லாம் இந்தியாவின் மதிப்பை அதிகரித்துக் கொண்டிருக்கும் போதும், சில காரணங்களால் அவற்றை நாம் முழுவதுமாக கொண்டாட முடியாமல் போகிறது.

கப்பலோட்டி உலகை வென்ற இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்!!!

மைக்ரோசாப்ட் முதல் அடோப் வரையிலும் நமது இந்தியர்கள் நிறைய எம்.என்.சி பெரும் நிறுவனத்தில் அதிகார பொறுப்பில் இருந்து அந்நிறுவனங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஜய்பால் சிங் பங்கா - தலைவர் & நிர்வாக அதிகாரி, மாஸ்டர் கார்ட்

அஜய்பால் சிங் பங்கா - தலைவர் & நிர்வாக அதிகாரி, மாஸ்டர் கார்ட்

அஜய்பால் சிங் பங்கா நெஸ்ட்லே நிறுவனத்தில் தனது பயணத்தை தொடங்கினார். பிறகு பெப்சிகோ மற்றும் சிட்டி குரூப் போன்ற நிறுவனங்களில் பணியாற்றினார். கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாஸ்டர் கார்டு நிருவனந்தில் இணைந்தார். 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் நாள் இவர் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரியாக அமர்த்தப்பட்டார்.

அன்ஷு ஜெயின், டாய்ச்ச வங்கி (Deutsche Bank)

அன்ஷு ஜெயின், டாய்ச்ச வங்கி (Deutsche Bank)

நிதியியலில் மேலாண்மை படிப்பை முடித்தவர் அன்ஷு ஜெயின். கடந்த 1995ஆம் ஆண்டு டாய்ச்ச வங்கியில் (Deutsche Bank) இணைந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் இந்த வங்கியின் முதன்மை நிர்வாக ஆதிகாரியாக பொறுப்பேற்றார்.

சுந்தர் பிச்சை - முதன்மை நிர்வாக அதிகாரி, கூகுள்.

சுந்தர் பிச்சை - முதன்மை நிர்வாக அதிகாரி, கூகுள்.

கடந்த 2004ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார் சுந்தர் பிச்சை. இப்போது அந்நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருக்கிறார்.

சாந்தனு நாராயண் - முதன்மை நிர்வாக அதிகாரி, அடோப் சிஸ்டம்ஸ்

சாந்தனு நாராயண் - முதன்மை நிர்வாக அதிகாரி, அடோப் சிஸ்டம்ஸ்

சாந்தனு நாராயண், அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் முதன்மை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். டிஜிட்டல் துறையில் அடோப்பின் பங்கு மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுல் சிங் - ஆசிய குரூப் தலைவர், கொக்கோகோலா

அதுல் சிங் - ஆசிய குரூப் தலைவர், கொக்கோகோலா

கொக்கோகோலாவின், ஆசியாவில் உள்ள 38 நாடுகளில் 10 நாடுகளில் உள்ள தலைமை அலுவலகங்களுக்கு இவர் தலைவராக பணியாற்றி வருகிறார்.

அபிஜித் தல்வால்கர் - தலைவர் & முதன்மை நிர்வாக அதிகாரி, LSI

அபிஜித் தல்வால்கர் - தலைவர் & முதன்மை நிர்வாக அதிகாரி, LSI

லியர் சிஜியர் இன்கார்ப் (Lear Siegier Incorp.) நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரியாக இவர் பணியாற்றி வருகிறார். இந்நிறுவனம் நெட்வொர் மற்றும் ஸ்டோரேஜ் சார்ந்த உலகின் பெரும் நிறுவனம் ஆகும்.

தாமஸ் குரியன் - துணைத் தலைவர் ஆரக்கிள் (Oracle)

தாமஸ் குரியன் - துணைத் தலைவர் ஆரக்கிள் (Oracle)

கடந்த 1996ஆம் ஆண்டு ஆரக்கிள் நிறுவனத்தில் சேர்ந்தார் குரியன். ப்ராடக்ட் மேனேஜ்மெண்ட் மற்றும் டெவலப்மெண்ட் பிரிவுகளில் பணியாற்றி வந்தார். கேரளாவில் படித்த தாமஸ் குரியன் இப்போது ஆரக்கிள் நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

கெல்லி அஹுஜா - சீனியர் வி.பி, ஜி.எம். சிஸ்கோ.

கெல்லி அஹுஜா - சீனியர் வி.பி, ஜி.எம். சிஸ்கோ.

சிஸ்கோ நிறுவனத்தின் மொபைல் ப்ராடக்ட் துரையின் துணைத் தலைவர் மற்றும் ஜி.எம் பொறுப்பில் பணியாற்றி வருகிறார் இந்தியரான கெல்லி அஹுஜா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy

English summary

Lesser Known CXO Level Indians In Big MNCs

Do you know about the lesser known CxO Level Indians who rules big MNCs? Read here.
Subscribe Newsletter