14 வயதிலேயே பேரரசரான அக்பரிடம் இருந்து ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

14 வயதில் முகலாய அரச சிம்மாசனத்தில் ஏற்றப்பட்ட பேரரசர் அக்பர் (எ) அபுல் ஃபத் ஜலாலுதீன் முஹம்மது அக்பர், வெகு விரைவில் ஏகாதிபத்திய பலத்தை பெற்று, முகலாய சாம்ராஜ்யத்தை தென் கிழக்கு ஆசியா முழுவதும் விரிவுப்படுத்தினார்.

உலக புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை சூழ்ந்திருக்கும் மர்மங்களும்.. வரலாற்று குறிப்புகளும்..

அவருக்கு முன்னும் பின்னும் இந்தியாவை படையெடுத்தவர்களைப் போல் அல்லாமல், இந்தியாவில் உள்ள மத மற்றும் கலாச்சார வேறுபாடுகளுக்கு மதிப்பளித்தார் அக்பர். அதேப்போல் அவருடைய ஆன்மீக தலைமை அமைதியையும், நிலைத்தன்மையையும் கொண்டு வந்தது. அதனால் அவருக்கு கீழ் முகலாய சாம்ராஜ்யத்தின் அளவும் சொத்தும் மூன்று மடங்கு பெரிதானது.

ஆயிரம் அலெக்சாண்டருக்கு சமமான இராஜேந்திர சோழனைப் பற்றிய அரியக் குறிப்புகள்!!!

முகலாய வரலாற்றில் மிகவும் போற்றப்பட்ட பேரரசராக விளங்கிய அக்பரின் புகழுக்கு பின்னணியாக உள்ள காரணங்களைக் கண்டு கொள்ள முகலாய சாம்ராஜ்யத்தின் உச்சிக்கே நாம் செல்ல வேண்டியிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பன்முகத்தன்மையைப் போற்றுதல்

பன்முகத்தன்மையைப் போற்றுதல்

தாராளமயமாக்குதல் என்பது இல்லாத காலத்தில் இத்தகைய ஒன்றை கூறுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அக்பர் மிகவும் பொறுமைசாலியாக இருந்தார். இந்தியாவின் பன்முகத்தன்மையை அவர் போற்றினார். நீங்கள் கையாளும் மக்களை ஆழமாக புரிந்து கொள்வதால் மட்டுமே வருவது அது. இது தான் ஒரு தலைவரை முதலாளி தன்மையில் இருந்து பிரிக்கும். நிர்வாகத்தின் பயனைப் பெற இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டிய அவசியமில்லை என அவர் கூறினார். இவருடைய இத்தகைய கொள்கைகள் தான் பெருவாரியான மக்களிடையே இவரின் புகழை உயர்த்தியது.

உயர்மதிப்பீடு திறமை

உயர்மதிப்பீடு திறமை

அக்பர் தன்னிடம் பணி புரிவதற்கு சிறந்த நபர்களை வேட்டையாடி கண்டுப்பிடித்தார். தன் அரசாட்சியில் இருந்து மிகவும் திறமை வாய்ந்த 9 நபர்களைத் தேர்ந்தெடுத்து தன் சபையில் அவர்களை அங்கம் வகிக்க செய்தார். இந்த நபர்கள் தன் பின்னாளில் 'அக்பரின் நவரத்தினங்கள்' என அழைக்கப்பட்டனர். தனக்கு ஒரு நபர் வேண்டும் என்றால் அவரிடம் என்ன இருக்க வேண்டும் என்பதை அக்பர் தெளிவாக தெரிந்து வைத்திருந்தார். இந்த தெளிவு, அவரை எப்போதும் சிறந்த நபர்களையே தேர்ந்தெடுக்க வைத்தது.

எதிர்நோக்குதல்

எதிர்நோக்குதல்

அற்புதமான தொலைநோக்கு பார்வையை கொண்டவராக விளங்கினார் அக்பர். தன் வருங்கால ஆற்றல்மிக்க எதிராளிகள் யாரென்பதை அவரால் கணிக்க முடிந்தது. அதே போல் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க தன் மென்மையான சாதுரிய திறன்களை அவர் பயன்படுத்தினார். ராஜ்புட் தான் தன்னுடைய மிக பலமான எதிராளிகள் என்பதை அவர் எதிர் நோக்கிய போது, ராஜ்புட் இளவரசியை மணம் புரிந்து, கடுமையான ஆனால் விசுவாசமான ராஜ்பு அரசர்களை வென்றார். இன்றைய கார்ப்பரேட் உலகத்தில் உங்கள் போட்டியாளரின் மகளை மணம் முடிப்பது கண்டிப்பாக உதவாது. நாங்கள் என்ன சொல்கிறோம் என்பது கண்டிப்பாக உங்களுக்கு புரியும்.

ஆர்வமிக்கவராக இருத்தல்

ஆர்வமிக்கவராக இருத்தல்

போர்களத்தின் வாள்களும், அம்புகளும் அவரை பேனா அருகிலேயே அண்ட விடவில்லை தான். ஆனால் படிப்பறிவு இல்லாத இந்த அரசர் 24,000 புத்தகங்களைக் கொண்ட நூலகத்தைக் கட்டினார். சமஸ்கிருதம், ஹிந்துஸ்தானி, பாரசீகம், கிரேக்கம், லத்தீன், அரபு மற்றும் காஷ்மீரி போன்ற மொழிகளில் எழுதிய புத்தகங்கள் இங்கே வைக்கப்பட்டது. வாழ்க்கை, மதம் மற்றும் நிர்வாகத்தின் மீதான தங்கள் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொள்ள புத்திஜீவிகளையும், மத தலைவர்களையும் அவர் ஆர்வத்துடன் அழைத்தார்.

புதுமை

புதுமை

அக்பரின் நிர்வாகச் சீர்திருத்தங்களோடு ராணுவ புதுமைகளும் துணை நின்றது. பீரங்கிகள், யானைகள், அரணமைத்தல், துப்பாக்கி போன்றவற்றை அவரின் கீழிருந்த முகலாயர்கள் திறம்பட பயன்படுத்தினார்கள். மேம்பட்ட துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்துவதில் திறமையை வளர்க்க ஓட்டோமேன் மற்றும் ஐரோப்பியர்களுடன் சாதுர்யமான உறவை வளர்த்துக் கொண்டார். அனைத்து துறைகளிலும் புதுமைகளை வரவேற்றார். இவருடைய ராணுவ பலமே இவருக்கு 'ஆயுத பலம் கொண்ட பேரரசர்' என்ற பட்டத்தை பெற்றுத் தந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Leadership Lessons from Akbar the Great

Here are some leadership lessons from akbar the great. Take a look...
Subscribe Newsletter