For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காந்திஜி கூறிய அற்புதமான தத்துவங்கள்!!!

|

காந்தி, இந்தியாவின் தந்தை என புகழப்படும் விடுதலை போராட்ட வீரர் என்று கூறுவதைவிட, தியாகி என்று கூறலாம். நாடு முழுவதும் போராட்டங்கள், எதிர்ப்பு, சண்டைகள் என ஒரே களேபரமாக இருக்க, அமைதியின் மூலமும், அகிம்சையின் மூலமும் விடுதலை பெற முடியும் என்று நிரூபித்தவர்.

தேசப் பிதா காந்தி இப்படிப்பட்டவரா?? யாரும் அறியாத அரிய தகவல்கள்!!!

இந்தியாவின் விடுதலைக்கு காந்தி என்ற தனி நபர் மட்டுமே காரணம் அல்ல என்பது தான் உண்மை. ஒரு பக்கம் காந்தியின் அகிம்சையோடு சேர்த்து மற்றவர்களின் போராட்டமும் இந்தியாவின் விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்தது என்பது அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.

மகாத்மா காந்தியிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்!!!

ஓர் நாடு வளம்பெற வேண்டும் எனில், அந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் வளர வேண்டும். இது குறித்து காந்திஜி கூறிய அற்புதமான பொன்மொழிகள் பற்றி இனி காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பலம்

பலம்

பலம் உடல் வலிமையை சார்ந்தது அல்ல, வெல்ல முடியாத மன தைரியத்தை சார்ந்தது. மன தைரியத்தில் ஒருவர் நிலைத்து இருந்தாலே, எளிதாக வெற்றிபெற்று விடலாம்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

மகிழ்ச்சி உன் எண்ணத்தில் இருக்கிறது, உன் வார்த்தையில் இருக்கிறது. மற்றும் நீ செய்யும் நல்லிணக்கத்தில் இருக்கிறது.

எதிர்காலம்

எதிர்காலம்

உன் எதிர்காலம், உன்னுடைய இன்றைய செயலில் தான் சார்ந்திருக்கிறது.

வெற்றி

வெற்றி

முதலில் அவர்கள் உன்னை உதாசீனம் செய்வார்கள், பிறகு கேலி செய்வார்கள், அதன் பிறகு சண்டையிடுவார்கள், கடைசியில் நீ வென்றுவிடுவாய்.

பலன்

பலன்

நீ செய்ததற்கான பலன் என்னவாக வரப்போகிறது என்று உனக்கு தெரியாது, ஆனால் நீ எதுவும் செய்யாவிடில், எதுவுமே கிடைக்காது என்பதை உணர்.

படிப்பு

படிப்பு

நாளையே இறந்துவிடுவாய் என்றால் இன்றே வாழ்ந்துவிடு, வாழ்நாள் நிறைய இருக்கிறது என்றால் கற்றுக் கொண்டே இரு. உன் மனதில் இருக்கும் எண்ணங்கள் தான், உன் வாழ்க்கையை மாற்றும் வண்ணங்கள் என்பதை மறந்துவிடாதே.

தீர்வு

தீர்வு

பழிக்குப்பழி என்பது நாளை உலகை சுடுகாடாக்கி விடும்.

மாற்றம்

மாற்றம்

இவ்வுலகம் மாற வேண்டும் எனில், முதலில் நீ மாற வேண்டும்!

பேராசை

பேராசை

மனிதர்களை திருப்தி படுத்த அனைத்துமே உலகில் உண்டு, ஆனால் மனிதனின் பேராசையை திருப்தி படுத்த எதுவும் இல்லை.

நீ

நீ

உன்னை நீயே முழுதாய் தெரிந்துக் கொள்ள வேண்டும் எனில், மற்றவர்களுக்கு சேவை செய்வதில் உன்னை நீயே தோற்கடிக்க வேண்டும்.

சுதந்திரம்

சுதந்திரம்

தவறு செய்யும் அளவு சுதந்திரம் இருப்பது எப்படி உணமையான சுதந்திரமாகும்??

காயம்

காயம்

உனது அனுமதி இன்றி, யாரும் உன்னை காயப்படுத்த முடியாது.

மனிதம்

மனிதம்

மனிதனாக இருப்பது அல்ல மனிதம், மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும்

தியாகம்

தியாகம்

நீ செய்வது வலிக்கிறது எனில் அது எப்படி தியாகம் ஆகும்?, உண்மையில் நீ தியாகம் செய்கிறாய் எனில் அது உனக்கு மகிழ்ச்சியை மட்டுமே தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Great Thoughts Of Gandhiji

Do you know about the great thoughts of Gandhiji? read here.
Story first published: Thursday, October 1, 2015, 18:30 [IST]
Desktop Bottom Promotion