வெள்ளையாவதற்கு சர்ஜரி செய்து கொண்ட நடிகைகள்!!!

By: Babu
Subscribe to Boldsky

கருப்பாக இருப்பது பிரச்சனை இல்லை, கருப்பு தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று எவ்வளவு தான் வெளியே பந்தாவாக சொல்லிக் கொண்டாலும், உண்மையில் ஒவ்வொருவருக்கும் தாம் வெள்ளையாக இருப்பது தான் பிடிக்கும். அதிலும் நடிகைகளாகிவிட்டு கருப்பாக இருந்தால் எப்படி? ஆம், பல ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த பிரபல நடிகைகளின் உண்மையான நிறம் கருப்பு தான்.

நம்ம ஊர் நடிகைகளை மேக்கப் இல்லாம பாத்திருக்கீங்களா..?

ஆனால் அவர்கள் ஒருசில சிகிச்சையை மேற்கொண்டு, தங்கள் சருமத்தின் நிறத்தை வெள்ளையாக்கிக் கொண்டுள்ளனர். இவர்கள் பாலிவுட்டில் மட்டுமின்றி, தமிழிலும் மிகவும் பிரபலமான நடிகைகள். அவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

பாலிவுட் நடிகைகளை மேக்கப் இல்லாம பாத்திருக்கீங்களா...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கஜோல்

கஜோல்

அழகான கண்கள் மற்றும் புன்னகையால் பல ரசிகர்களைக் கவர்ந்த நடிகை கஜோலின் உண்மையில் மாநிறம் தான். ஆனால் இவர் ஸ்கின் மெலனின் சர்ஜரியை மேற்கொண்டு, தன் சருமத்தில் உள்ள நிறமூட்டும் நிறமியான மெலனின் அளவை ரசாயன சேர்மங்களின் உதவியுடன் குறைத்து, வெள்ளையாகியுள்ளார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா தன் அழகை அதிகரிப்பதற்கு ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். அதில் ஒன்று தான் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் சிகிச்சை. இவர் உலக அழகியாக இருந்த போது எடுத்த போட்டோக்களையும், தற்போதைய போட்டோக்களையும் ஒன்றாக வைத்துப் பார்த்தால், நல்ல மாற்றம் தெரியும்.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டியும் கருப்பு தான். ஆனால் தன் சரும நிறத்தை அதிகரிப்பதற்காக இவரும் சிகிச்சை மேற்கொண்டதாக வந்த வதந்திகளை அவர் புறக்கணித்து, பிரசவ காலம் தான் தன் சரும நிறத்தை அதிகரித்ததாக கூறியுள்ளார். அப்படியெனில் வெள்ளையாக வேண்டுமானால் கர்ப்பமானால் போதுமா என்ன? ஆச்சரியமாக உள்ளது தானே!

பிபாசா பாசு

பிபாசா பாசு

2005 மற்றும் 2007 ஆம் ஆண்டில் ஆசியாவிலேயே மிகவும் செக்ஸியான பெண் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிவுட் நடிகை பிபாசா பாசுவும் கருப்பு நிறம் தான். இதை இவர் வெளிப்படையாக அடிக்கடி சொல்வார். இருப்பினும் இவரும் சரும நிறத்தை அதிகரிக்கும் சிகிச்சையை மேற்கொண்டார்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

சொன்னால் நம்பமாட்டீர்கள். நடிகை ஸ்ரீதேவி கூட நிறம் குறைவு தான். வேண்டுமெனில் ஸ்ரீதேவியின் ஆரம்ப கால போட்டோக்களையும், திரையுலகில் நன்கு பிரபலமான பின் எடுத்த போட்டோக்களையும் பார்த்தால், நல்ல வித்தியாசத்தைக் காணலாம்.

ரேகா

ரேகா

நடிகை ரேகாவும் மாநிறம் தான். ஆரம்பத்தில் சற்று மங்கலான நிறத்தில் காணப்பட்ட இவர், தற்போது வெள்ளையாக பளிச்சென்று காணப்படுவதற்கு காரணம், இவர் சரும நிறத்தை அதிகரிக்க மேற்கொண்ட சிகிச்சை தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Famous Actresses Who Went For Skin Lightening Treatment

Here are some famous actresses who went for skin lightening treatment. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter