அமிதாப்-தனுஷ் நடிக்கும் 'ஷமிதாப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு வந்த பிரபலங்கள்!!!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் அமிதாப் பச்சன், தனுஷ் மற்றும் அக்ஷரா ஹாசன் நடித்திருக்கும் 'ஷமிதாப்' என்னும் இந்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. மேலும் இசையமைப்பாளர் இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்ததற்காக பாராட்டு விழா போன்றும் இந்த விழா அமைக்கப்பட்டது. இந்த விழாவிற்கு நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தனுஷ் மற்றும் நடிகைகளான ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய், ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவிற்கு வந்த அனைவருமே மிகவும் அழகான உடைகளை உடுத்தி வந்திருந்தனர். அதிலும் ஐஸ்வர்யா ராய் மஞ்சள் நிற அனார்கலியிலும், அக்ஷரா ஹாசன் கருப்பு நிற உடையிலும் மற்றும் அவரது சகோதரி ஸ்ருதிஹாசன் கிரே நிற உடையிலும் வந்திருந்தார்கள். நடிகர் தனுஷ் மற்றும் அபிஷேக் பச்சன் எப்போதும் போன்று கருப்பு கலந்த கோட் சூட் அணிந்து வந்திருந்தனர்.

இங்கு 'ஷமிதாப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு வந்த பிரபலங்களின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன்

ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன்

இவ்விழாவிற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் மஞ்சள் நிற அபு ஜனி சந்தீப் கோஷ்லா என்னும் டிசைனர்கள் வடிவமைத்த அனார்கலியிலும், நடிகர் அபிஷேக் பச்சன் கருப்பு நிற கோட் சூட்டிலும் வந்திருந்தனர்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப் பச்சன் கருப்பு நிற பிரிண்ட்டட் பந்த்கலா ஜாக்கெட் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்து வந்திருந்தார்.

தனுஷ்

தனுஷ்

தென்னிந்திய நடிகர் தனுஷ் கருப்பு கலந்த கிரே நிற சூட்டில் அழகாக மீசை மற்றும் தாடி வைத்துக் கொண்டு வந்திருந்தார்.

அக்ஷரா ஹாசன்

அக்ஷரா ஹாசன்

நடிகை அக்ஷரா ஹாசன் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் தை ஹை ஸ்லிட் கவுன் அணிந்து, கால்களுக்கு ஹை ஹீல்ஸ் போட்டு, சற்று செக்ஸியாக வந்திருந்தார்.

கமல் மற்றும் ஸ்ருதிஹாசன்

கமல் மற்றும் ஸ்ருதிஹாசன்

அக்ஷராவின் தந்தை நடிகர் கமல் மற்றும் அக்கா ஸ்ருதிஹாசன் கூட இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். இதில் கமல் கருப்பு நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்து, கிரே நிற கோட் அணிந்து வந்திருந்தார். நடிகை ஸ்ருதிஹாசன் மின்னும் ஷீர் டாப்ஸ் மற்றும் கிரே நிற சாட்டின் ஸ்கர்ட் அணிந்து வந்திருந்தார்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி சப்யசாச்சி என்னும் டிசைனர் வடிவமைத்த புடவையில் சிம்பிளாக வந்திருந்தார்.

ஸ்ரேயா கோஷல்

ஸ்ரேயா கோஷல்

பாடகி ஸ்ரேயா கோஷல் பிங்க் நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட பச்சை நிற அனார்கலியில் வந்திருந்தார்.

இளையராஜா

இளையராஜா

இது இசையமைப்பாளர் இளையராஜாவை மேடையில் கௌரவிக்கும் போது எடுத்தது. மேடையில் நடிகர் ரஜினி எப்போதும் போல சிம்பிளாக கருப்பு நிற குர்தா மற்றும் வெள்ளை நிற பேண்ட் அணிந்து வந்திருந்தார்.

ஐஸ், ரஜினி மற்றும் கமல்

ஐஸ், ரஜினி மற்றும் கமல்

இது ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் ரஜினி பேசிக் கொண்டிருக்க, நடிகர் கமல் காபி குடித்துக் கொண்டிருக்கும் போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities At 'Shamitabh' Music Launch

Shamitabh music launch was another gala event after Sonakshi Sinha's brother Kush's wedding. Here is a look at the celebrities who attended 'Shamitabh' music launch.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter