For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடன ராஜன் சிவனுக்கு உகந்த மாதம் ஆடி.. ஏன் என்று தெரியுமா?

By Ashok CR
|

இந்து நாட்குறிப்பின் படி, ஆடி மாதம் என்பது மிகவும் மங்களகரமான மாதங்களில் ஒன்றாகும். இந்த மாதத்தில் சிவபெருமான் பூமிக்கு அருகில் வருவார் என நம்பப்படுகிறது. அதனால் இந்த மாதத்தில் அவரை நினைத்து, முழு நம்பிக்கை மற்றும் பக்தியுடன் தவத்தில் ஈடுபட்டால் அவரின் அருளை நிச்சயமாக பெறலாம். ஆடி மாதம் என்பது குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும். நல்ல கணவன் அமைய வேண்டும் என்றும் குடும்பம் செழிப்புடன் விளங்க வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி விரதம் இருக்கும் பெண்களுக்கு இம்மாதம் முக்கியம் வாய்ந்ததாகும்.

சிவலிங்கத்திற்கும் வாடிகன் நகரத்திற்கும் உள்ள அதிர்ச்சியூட்டும் தொடர்பு!!!

ஆடி மாதம் என்பது சிவபெருமானுக்கு உகந்த மாதமாகும். ஆடி மாதத்தில் தான் பார்வதி தேவியுடன் சிவபெருமான் மீண்டும் இணைந்தார் என நம்பப்படுகிறது. அதனால் தான் நல்ல கணவன் வேண்டி சிவபெருமானை ஆடி மாதத்தில் பெண்கள் வணங்கினால், அதற்கான அருளை பெறுவார்கள் என நம்பபடுகிறது. ஆடி மாதம் சிவபெருமானுக்கு ஏன் உகந்த மாதமாக விளங்குகிறது என்பதற்கு இன்னும் பல காரணங்கள் இருக்க தான் செய்கிறது. அதனை பற்றி விவரமாக பார்க்கலாமா?

சுவாரஸ்யமான வேறு: சிவலிங்கத்தின் முக்கியத்துவம்!

சிவபெருமானுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் விளங்குவது ஏன்? அதனை பற்றி தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவல் அதிகரிக்கிறது தானே. ஆடி மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாக இருப்பதற்கான காரணங்கள், இதோ!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பார்வதி தேவியுடன் மீண்டும் இணைதல்

பார்வதி தேவியுடன் மீண்டும் இணைதல்

புராணங்களின் படி, சதி தேவி தன்னை தானே நெருப்பில் மாய்த்துக் கொண்ட பின்பு, பார்வதி தேவியாக மீண்டும் அவதரித்தார். சிவபெருமானை மணக்க கடும் தவம் புரிந்தார். நீண்ட தவத்திற்கு பிறகு, மனம் குளிர்ந்த சிவபெருமான், பார்வதி தேவியை மணக்க முன் வந்தார். இது நடந்தது, அதாவது ஆடி மாதத்தில் தான் சிவபெருமானும் பார்வதி தேவியும் இணைந்தனர் என நம்பப்படுகிறது. அதனால் தான் ஆடி மாதம் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

மாமனார் மாமியாரை சந்தித்தார் சிவபெருமான்

மாமனார் மாமியாரை சந்தித்தார் சிவபெருமான்

ஆடி மாதத்தில் தான் தன் மாமனார் வீட்டிற்கு சிவபெருமான் சென்றார் என சமயத் திருநூல்கள் கூறுகிறது. அங்கே மிகுந்த அன்பும் பாசத்துடனும் அவர் வரவேற்கப்பட்டார். அதனால் தான் ஆடி மாதம் அவருக்கு உகந்த மாதமாக விளங்குகிறது.

தண்ணீர் அபிஷேகம்

தண்ணீர் அபிஷேகம்

ஆடி மாதத்தில் தன் மாமனார் வீட்டிற்கு சிவபெருமான் வருகை தந்த போது, மிகுந்த அன்புடன் அவர் கவனிக்கப்பட்டார். தன் வருகையை பதிவு செய்யும் விதத்தில் தண்ணீர் அபிஷேக வடிவில் நீரில் குளித்தார். அதனால் தான் சிவலிங்கத்தை நாம் தண்ணீர், பால், தயிர் போன்றவைகளால் அபிஷேகம் செய்கிறோம்.

நம் அருகில் வருவார்

நம் அருகில் வருவார்

தன் மாமனாரின் வீட்டிற்கு வருவதற்காக பூமிக்கு சிவபெருமான் வந்ததால், ஆடி மாதத்தில் தன் பக்தர்களுக்கு மிகவும் நெருக்கத்தில் அவர் இருப்பதாக நம்பப்படுகிறது. அதனால் தான் இந்த நேரத்தில் சிவபெருமானை வழிபட்டால், வணங்கியவர் மிகுந்த சந்தோஷத்துடன் இருக்க அருளளிப்பார்.

பாற்கடலை கடைதல்

பாற்கடலை கடைதல்

சமுத்திர மந்தன் அல்லது பாற்கடலை கடைந்ததும் ஆடி மாதத்தில் தான் எனவும் கூட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

நஞ்சை அருந்திய சிவபெருமான்

நஞ்சை அருந்திய சிவபெருமான்

சமுத்திர மாந்தனின் போது, மிகவும் கொடிய நஞ்சை இந்த மாதத்தில் சிவபெருமான் பருகினார். விஷம் அருந்தியவுடன், சுய நினைவை இழந்தார் சிவபெருமான். பிரம்மரின் அறிவுறுத்தலின் படி, பக்தர்கள் அனைவரும் சிவபெருமானுக்கு தண்ணீர் அபிஷேகம் செய்து பல்வேறு மூலிகைகளை கொண்டு சிகிச்சை அளித்தார்கள். அதன் பின் தான் தன் சுய நினைவை மீண்டும் பெற்றார் சிவபெருமான். அதிலிருந்து தான் சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யும் பழக்கம் ஏற்பட்டது.

சிறந்த யோகி

சிறந்த யோகி

உலகத்தில் மிகச்சிறந்த யோகி சிவபெருமான். அவர் வருடத்தின் இந்நேரத்தில் யோகநித்ரா என்ற நிலையை அடைவார். அதனால் தான் ஆடி மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாக விளங்குகிறது.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Is Shravan The Favourite Month Of Lord Shiva?

What makes Shravan the favourite month of Lord Shiva? We are sure that all of you are curious to know about it. Take a look.
Desktop Bottom Promotion