பல மதங்களில் அசைவ உணவு, மது, வெங்காயம் மற்றும் பூண்டை சாப்பிட ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது?

By: Srinivasan P M
Subscribe to Boldsky

ஒருவருடைய மனதில் மாயையின் மூன்று அம்சங்கள் (சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்) பல்வேறு நிலைகளில் வியாபித்திருக்கும். சத்வ குணம் அடக்கம், மன அமைதி, கட்டுப்பாடு மற்றும் தூய்மை ஆகியவற்றை உள்ளடக்கியது. ரஜோ குணம் மாயையிலுள்ள இன்பங்களான தனி மனித விருப்பங்கள் மற்றும் சுகங்களைக் குறிக்கும். தமோ குணம் பெரும்பாலும் கேடான நிலைகளான கோபம், எதிர்புணர்வு, மிருகத்தனம் மற்றும் அழிவு போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. ஒருவர் இறைவனைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டுமென்றால், ரஜோ மற்றும் தமோ குணங்களை அடக்குவதும் சத்வ குணத்தை நிலை நிறுத்துவதும் அவசியமாகிறது.

பல்வேறு உணவுகள் மற்றும் பானங்கள் ஒருவருடைய மனதின் நிலையை பாதித்து அவர்களின் சத்வ, ரஜோ மற்றும் தமோ குணாதிசயங்களை மாற்றியமைக்கக் கூடியவை. எடுத்துக்காட்டாக, மது விழிப்புணர்வைக் குறைத்து, ஆசை போன்ற ரஜோ குணங்களை ஊக்குவிக்கிறது. இதேப்போல் வெங்காயம், பூண்டு, பெருங்காயம் ஆகியவை கோபம் போன்ற தமோ குணங்களை அதிகரிக்கக்கூடியவை. இறைவனை துதிப்பவர்கள் ரஜோ அல்லது தமோ குணங்களைக் கொடுக்கவல்ல எந்த உணவையோ அல்லது பானத்தையோ உண்ணாமல் இருப்பது அவசியமாகிறது. ஏனெனில், இறை வழிபாட்டிற்கு இவை தடையை ஏற்படுத்தும்.

Why is it forbidden to eat meat, alcohol, onions, garlic in many religions?

ரஜோ மற்றும் தமோ குணங்கள் மேலோங்கி இருக்கும் போது ஒருவருடைய மனமானது அமைதியின்றி காணப்படும். எனவே, இந்த சூழ்நிலைகளில் ஒருவர் இறைவனை துதிக்க இயலாது. சத்வ குணம் நிறைந்திருக்கும் போது, தியானம் மற்றும் நம்பிக்கை மிகுந்த இறைவழிபாடு சாத்தியமாகிறது. எனவே இறைவனின் சீடர்கள், அனைத்து நேரங்களிலும் ரஜோ மற்றும் தமோ குணங்களை தொடர்ந்து அடக்கி, சத்வ நிலையை எய்த முயல வேண்டியது அவசியம்.

ஒருவர் சுவை போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி தூய்மையுடன் இருந்து மனதையும் தூய்மையாக வைக்க வேண்டியது அவசியம். மனம், செயல் மற்றும் பேச்சில் தூய்மையை கடைப்பிடிப்பதன் மூலமே இறைவனை மகிழ்ச்சியுறச் செய்ய முடியும்.

English summary

Why is it forbidden to eat meat, alcohol, onions, garlic in many religions?

The three qualities of Maya (satva, rajas, and tamas) exist in varying levels within one's mind. Various foods and drink can influence the state of one's mind and can therefore manipulate the levels of satva, rajas and tamas. 
Subscribe Newsletter