For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலருக்கு தெரியாத சிவபெருமானின் 5 காதல் கதைகள்!!!

By Ashok CR
|

நம் அனைவருக்கும் பார்வதி தேவியைப் பற்றி தெரிந்தாலும் கூட சிவபெருமானுக்கு பல மனைவிகள் உள்ளனர். அவர்கள் அனைவருமே பெண்மை சக்தியின் சின்னங்கள். இந்த அனைத்து கடவுள்களும் நன்கு அறியப்பட்டவர்களே. இவர்களை நாம் அனைவரும் வணங்கி கொண்டு தான் இருக்கிறோம். அவர்கள் யாரென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அவர்கள் தான் சக்தி, பார்வதி, உமா, துர்கா மற்றும் காளி.

பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!!

இந்த ஒவ்வொரு கடவுளும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவத்தை பெற்றுள்ளனர். பார்வதி தேவி - காதலை குறிக்கும் தேவி. உமா - தாய்மையை குறிப்பவர். துர்கா - நியாயத்தை நிலைநாட்டுபவர். நான்கில் கடைசியானவரான காளி - இறப்பை குறிக்கும் கடவுள். சரி, இவர்களின் காதல் கதைகளைப் பற்றி பார்க்கலாமா?

சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவபெருமானும் சக்தியும்

சிவபெருமானும் சக்தியும்

சரஸ்வதி தேவியை பிரம்ம தேவனும், லக்ஷ்மியை விஷ்ணு பகவானும் மணந்திருந்த போதிலும், சிவபெருமான் திருமணமாகாமலேயே இருந்தார். திருமணம் என்னும் உலகளாவிய பந்தத்தைப் பற்றி அவர் பெரிதாக கவலை கொள்ளவில்லை. வருடக்கணக்கில் தியானத்தில் ஈடுபட்டிருந்த அவர், யாரும் அவரை தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொண்டார். சிவபெருமானின் நலனை கருதி, எப்படி அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைப்பது என்று விஷ்ணு பகவானிடம் கலந்துரையாடினார். இப்படியே அவரை விட்டு விட்டால், அவர் தனிமையில் தான் இருப்பார் என கவலைப்பட்டனர். சிவபெருமானுக்கு ஏற்ற பெண் யாரேனும் உண்டா என பிரம்ம தேவனிடம் விஷ்ணு பகவான் கேட்டார். அதற்கு தன் மகனான தக்ஷாவிற்கு பிறந்த பெண்ணான சதியை பிரம்ம தேவன் பரிந்துரைத்தார்.

சிவபெருமானும் சக்தியும்

சிவபெருமானும் சக்தியும்

சிறு வயதில் இருந்தே சிவபெருமானின் பக்தையாவார் சதி. அவருக்கு பணிவிடை செய்யவும் அவரின் மனைவியாக வாழ்ந்திடவும் நினைத்தாள். தனக்கு பல இடங்களில் இருந்து வரன் வந்தாலும் கூட அவைகள் அனைத்தையும் நிராகரித்து சிவபெருமானை எண்ணி தவம் புரிய ஆரம்பித்தாள். தீவிர தவத்தில் இருந்த அவள், நாளடைவில் உணவு மற்றும் தண்ணீரையும் கூட துறந்து, இலைகளை மட்டுமே உட்கொண்டு, பின் அதையும் கூட துறந்தார். கடைசியாக அவள் முன் சிவபெருமான் தோன்றினார். அவள் மனதில் இருந்ததை அறிந்த சிவபெருமான் அவளை பார்த்து புன்னகைத்தார். தன் கோரிக்கையை அவள் கூறுவதற்கு முன்பாகவே, சிவபெருமான் அவளை மணக்க முன் வந்தார்.

சிவபெருமானும் பார்வதி தேவியும்

சிவபெருமானும் பார்வதி தேவியும்

பார்வதி என்றால் மலை என அர்த்தமாகும். சமஸ்கிருதத்தில் பார்வதியை பர்வத் என கூறப்படுகிறது. இள வயது முதலேயே சிவபெருமான் மீது காதல் கொண்டார் பார்வதி தேவி. அவரின் காதலையும் அன்பையும் பெறுவதற்காக, சிவபெருமான் தியானத்தில் ஈடுபட்டுள்ள குகைக்கு பார்வதி சென்று, அந்த இடத்தை சுத்தப்படுத்தி அலங்கரித்தார். பார்வதியின் அன்பு மற்றும் பக்திக்கு செவி சாய்க்காமல் அவர் அசையாமல் இருந்தார். அவருக்காக பழங்களை கொண்டு வந்தார் பார்வதி. அப்படியும் அவர் தீவிர தியானத்தில் தான் இருந்தார். பார்வதி தேவியின் கருமையான சருமத்தினால் தான் அவரை சிவபெருமான் தவிர்த்தார் என்றும் கதைகள் கூறுகிறது.

சிவபெருமானும் பார்வதி தேவியும்

சிவபெருமானும் பார்வதி தேவியும்

அவருடைய காதலையும் அன்பையும் வெல்லும் கடைசி முயற்சியாக, காட்டில் தவம் செய்ய பார்வதி தேவி முடிவு செய்தார். உணவு மற்றும் ஆடை ஏதும் இல்லாமல் மிகவும் கடுமையான தவத்தில் அவர் ஈடுபட்டார். அவரின் தவத்தால் மனம் இளகிய பிரம்ம தேவன் பார்வதி தேவிக்கு ஒரு வரத்தை அளிக்க வாக்களித்தார். தான் மிகவும் அழகான பெண்ணாக மாற வேண்டும் என்ற வரத்தை அவர் கேட்டார். அவருக்கு வரத்தை அளித்த பிரம்ம தேவன், அவரை மிகவும் அழகிய பெண்ணாக மாற்றினார். அழகிய மங்கையாக மாறிய அவர் மீண்டும் குகைக்குள் சென்றார். அவர் அழகில் மயங்கிய சிவபெருமான் அவர் மீது காதலில் விழுந்து, அவரை திருமணம் செய்து கொண்டார்.

சிவபெருமானும் உமாவும்

சிவபெருமானும் உமாவும்

சதி இறந்தவுடன் மீண்டும் உமாவாக அவதரித்தார் என கூறப்படுகிறது. சதியின் மறைவினால் உடைந்து போயிருந்தாராம் சிவபெருமான். சிவபெருமானுடன் மீண்டும் வந்து சேர்வதற்காகவே உமா மீண்டும் அவதரித்தார். அவருக்கு சிவபெருமானை ஞாபகம் இருந்தாலும் சிவபெருமானுக்கு இல்லை. போன ஜென்மத்தில் அவர் யார் என்பதும், சிவபெருமானுடன் தனக்கு நடந்த திருமணத்தைப் பற்றியும் அவர் அறிந்திருந்தார். மீண்டும் சிவபெருமானின் மனைவியாக வேண்டும் என்ற விதியை பெற்றிருந்த அவர், தடையை சந்தித்தார்; சிவபெருமான் தன் பாலியல் தன்மையை துறந்தார். அவர்களின் திருமணத்திற்கு பிறகு, குமரனை பெற்றெடுத்தார் உமா.

சிவபெருமானும் காளியும்

சிவபெருமானும் காளியும்

சிவபெருமான் மற்றும் காளி தேவிக்கு உள்ள சம்பந்தத்தை பற்றி இந்து மதம் பல விதமான கதைகளை கூறுகிறது. இவர்களின் தொடர்பை பற்றிய சரியான அளவு இன்னும் வாக்குவாதத்தில் தான் உள்ளது. இதில் பலரும் காளியை சிவபெருமானின் மனைவியாக கூறுகின்றனர். மகாபாகவத புராணத்தில் இதை ஆதரிக்கும் விதமான கதைகளையும் காணலாம். இந்த கதையில் காளியும் சதியும் ஒருவராகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

சிவபெருமானும் காளியும்

சிவபெருமானும் காளியும்

மகாபாகவத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல், மிகச்சிறந்த கடவுளான காளி தேவி தான் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனை படைத்தார். பின் காளியை தன் மனைவியாக்கி கொள்ள அவர்கள் அனைவருக்கும் ஒரு சோதனை வைக்கப்பட்டது. இந்த சோதனையில், அவர்கள் முன் காளி தேவி மிகவும் அகோரமாக காட்சியளிப்பார். அதை பார்த்த பிரம்மாவும் விஷ்ணுவும் பயந்து போய்விட்டனர். ஆனால் சிவபெருமானோ பயம் கொள்ளாமல் இருந்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற்று, தக்ஷாவின் மகளாக சதியாக காளி தேவி பிறக்கையில் அவரை மணந்தார் சிவபெருமான்.

சிவபெருமானும் துர்காவும்

சிவபெருமானும் துர்காவும்

வேதத்தில் உள்ள கடவுள்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர் சிவபெருமான். அதே போல் பெண் தெய்வங்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்றவர், சிவபெருமானின் மனைவியான துர்காவாகும். துர்கா என்பது தேவி அல்லது கடவுள்களின் தாய் (அனைத்து இறை சக்தியின் சின்னமாகும்) அவதாரமாகும். சைவர்களை பொறுத்த வரை, துர்கா சிவனின் மனைவியாவார். துர்காவை பார்வதியாகவும், சதியாகவும் பலர் பார்க்கின்றனர்.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Five Love Stories Of Lord Shiva

Most of us know about Parvati but Shiva has many wives, which are the symbols of feminine power. Let’s take a look at these love stories…
 
Desktop Bottom Promotion