விஷ்ணு பகவானின் சாபம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

By Ashok Cr
Subscribe to Boldsky

பல கோவில்களிலும் விஷ்ணு பகவனை ஒரு கருமையான கல்லின் வடிவத்தில் வழிபட்டு வருவதை நாம் காண நேரிட்டிருக்கலாம். இந்துக்களின் வீட்டில், சத்ய நாராயண பூஜை நடத்தும் சமயத்தில், இந்த கல்லை பூசாரிகள் தங்களுடன் தூக்கிக் கொண்டு வருவதை நாம் காணலாம். அதனை சாமி சிலைக்கு அருகில் வைத்து மந்திரங்களும் ஜெபிப்பார்கள். இந்த கருப்பு கல்லை தான் சாலிகிரம் கல் என அழைக்கின்றனர்.

ஒரு சாபத்தின் காரணமாக விஷ்ணு பகவான் கல்லாக மாறினார். இந்த சாபம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால், மும்மூர்த்திகளின் ஒருவரான, மிகவும் சக்தி வாய்ந்த கடவுளான விஷ்ணு பகவானால் கூட அதனை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. தன் தீவிர பக்தரான வ்ரிந்தாவிடம் இருந்து இந்த சாபத்தை விஷ்ணு பகவான் பெற்றார்.

ராமர் தனது அவதாரத்தை எப்படி முடித்தார் என்பது தெரியுமா?

இந்த சாபத்தால் கல்லாக மாறினார் விஷ்ணு பகவான். இந்த கல்லை சாலிகிரம் என அழைக்கின்றனர். இதனை கண்டகி நதிக்கரையில் மட்டுமே காண முடியும். கருப்பு, சிகப்பு அல்லது நிறங்களின் கலவையாக காணப்படும் இந்த கல்லை ஒரு பெட்டியில் வைத்திருப்பார்கள். சாலிகிரம் கல்லை வீட்டில் வைத்திருந்தால் சுத்தம் மற்றும் வழிபடுதலில் கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

சாலிகிரம் கல்லின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானதாகும். சில நேரம் சோகத்தையும் அளிக்கும். அகந்தை, பக்தி, காதல் மற்றும் துரோகம் அடங்கிய கதையாகும் இது. தன் மீது அதிக விசுவாசம் கொண்ட பக்தையை சோதிக்க தந்திரம் செய்த விஷ்ணு பகவான், அதன் பிரதிபலனாக ஒரு சாபத்தையும் பெற்றார். சாலிகிரம் கல்லை பற்றியும், விஷ்ணு பகவானின் சாபத்தை பற்றி அறியவும் தொடர்ந்து படியுங்கள்.

விஷ்ணு பகவானின் 10 அவதாரங்களும்... அதன் கதைகளும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜலந்தர்: சிவபெருமானின் ஒரு அங்கம்

ஜலந்தர்: சிவபெருமானின் ஒரு அங்கம்

ஒரு முறை ஜலந்தர் என பெயரில் ஒரு அசுர அரசன் வாழ்ந்து வந்தான். சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பிழம்பில் இருந்து பிறந்தவன் இவன். அதனால் தான் என்னவோ மிகவும் சக்தி வாய்ந்த போர் வீரனாக திகழ்ந்தான். அசுர குல இளவரசியான வ்ரிந்தாவை அவன் திருமணம் முடித்தான். ஜலந்தரை அதிகமாக விரும்பிய வ்ரிந்தா, ஒரு பக்தி மிகுந்த மனைவியாக திகழ்ந்தாள். அவளுடைய பக்தி, விசுவாசம் மற்றும் கற்பு, ஜலந்தரை வெல்ல முடியாதவனாக மாற்றியது.

சிவனை சந்தித்த ஜலந்தர்

சிவனை சந்தித்த ஜலந்தர்

தேவர்களுக்கு எதிராக நடந்த ஜலந்தர் அவர்களை சொர்க்கத்தை விட்டு விரட்டினான். தனக்கென்று சொந்தமாக தனி அரசாட்சி ஒன்றை உருவாக்கினான். உதவியை நாடி விஷ்ணு பகவான் மற்றும் சிவபெருமானை நாடி சென்றனர் தேவர்கள். சிவனின் ஒரு பகுதியாக ஜலந்தர் கருதப்பட்டதால், தன்னால் அவனை வீழ்த்த முடியாது என சிவபெருமான் அறிந்திருந்தார். இருந்தும் கூட அவனை எதிர்த்து போரிட சிவபெருமான் சென்றார். வருடக்கணக்கில் இந்த போர் தொடர்ந்தாலும் கூட, சிவபெருமானால் அவனை வீழ்த்த முடியவில்லை. அதற்கு காரணம் அவனை பாதுகாத்தது, கணவன் மீதான வ்ரிந்தாவின் பக்தியும், கற்பும் தான்.

வ்ரிந்தா: விஷ்ணு பகவானின் மிகப்பெரிய பக்தை

வ்ரிந்தா: விஷ்ணு பகவானின் மிகப்பெரிய பக்தை

அசுர குல இளவரசியாக இருந்து, அசுர அரசனின் மனைவியாக இருந்தாலும் கூட, விஷ்ணு பகவானின் தீவிர பக்தையாக விளங்கினால் வ்ரிந்தா. விஷ்ணு பகவானை மிகவும் தீவிரமாக வழிபட்டு வந்த வ்ரிந்தா, அவரின் மிகப்பெரிய பக்தையாக விளங்கினார்.

விஷ்ணு பகவானின் துரோகம்

விஷ்ணு பகவானின் துரோகம்

ஜலந்தரை சிவபெருமானால் கூட வீழ்த்த முடியவில்லை என்பதை கண்ட தேவர்கள், விஷ்ணு பகவானின் உதவியை நாடினர். வேறு வழி அறியாத விஷ்ணு பகவான், வ்ரிந்தாவின் கற்பில் களங்கம் விளைவிக்கும் சூழ்ச்சியை கையில் எடுத்தார். ஜலந்தராக வேடம் அணிந்து கொண்ட விஷ்ணு பகவான், வ்ரிந்தாவின் முன் போய் நின்றார். விஷ்ணு பகவான் என அடையாளம் தெரியாத வ்ரிந்தா, தன் கணவரான ஜலந்தர் தான் திரும்பி விட்டான் என எண்ணினாள். அவன் கைகளை பற்றிய அவள், விரைவிலேயே அது ஜலந்தர் இல்லை என்பதை உணர்ந்தாள். அவள் கற்பு களங்கமடைந்தது ஜலந்தரின் மீது இருந்து பாதுகாப்பும் நீங்கியது. அதன் விளைவாக, நொடி பொழுதில், ஜலந்தரை கொன்றார் சிவபெருமான்.

வ்ரிந்தாவின் சாபம்

வ்ரிந்தாவின் சாபம்

தன் தவறை உணர்ந்த வ்ரிந்தா, தன் நிஜ தோற்றத்தை வெளிப்படுத்த விஷ்ணு பகவானை கேட்டுக் கொண்டாள். தன்னை ஏமாற்றியது விஷ்ணு பகவான் என்பதை அறிந்தவுடன் உடைந்து போனால் வ்ரிந்தா. தன் கணவர் வடிவத்தில் விஷ்ணு பகவான் தோன்றி தன் கற்பை களங்கப்படுத்தியதன் காரணமாக கல்லாக மாற வேண்டும் என்று விஷ்ணு பகவானுக்கு சாபம் அளித்தாள். இந்த சாபத்தை ஏற்ற விஷ்ணு பகவான் சாலிகிரம் கல்லாக மாறினார். மனம் உடைந்த வ்ரிந்தாவும் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தாள்.

துளசியின் வரம்

துளசியின் வரம்

தன் மிகப்பெரிய பக்தைக்கு துரோகம் புரிந்த குற்ற உணர்வு இருந்ததால், சாபத்தை ஏற்றுக் கொண்டார் விஷ்ணு பகவான். தன் அஸ்தியில் இருந்து துளசி என்ற செடி உருவாகும் என்ற வரத்தை அவளுக்கு அளித்தார். இந்த செடி சாலிகிரம் கல்லை மணக்கும் எனவும் கூறினார். இதன் மூலம் இழந்த கற்பு மீண்டும் சீராகும். மேலும் விஷ்ணு பகவானுடன் அவள் காலம் முழுவதையும் கழிக்கலாம். துளசி இல்லாமல் தான் எப்போதும் உணவருந்த மாட்டேன் எனவும் விஷ்ணு பகவான் கூறினார். அதனால் தான் விஷ்ணு பகவான் பிரசாதத்துடன் துளசி இலையும் சேர்த்து வழங்கப்படுகிறது.

துளசியுடனான சாலிகிரம்மின் திருமணம்

துளசியுடனான சாலிகிரம்மின் திருமணம்

தேவ் பர்போதினி ஏகாதேசி அன்று துளசி செடிக்கும் சாலிகிரம் கல்லுக்கும் திருமணம் நடைபெற்றது. எனவே இதே நாளன்று திருமணம் செய்யும் தம்பதிகளின் திருமண வாழ்வானது எப்போதும் சந்தோஷமாகவும், வளமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Tale Of The Shaligram: Why Was Vishnu Cursed?

    The tale of the Shaligram stone is interesting and sad at the same time. Read on to find out the whole story of the Shalimar stone and why Lord Vishnu was cursed.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more