மங்களகரமான மஞ்சள் நிற புடவையில் நடிகை ஸ்ரீதேவி!

Posted By: Babu
Subscribe to Boldsky

வட இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுவது தான் கர்வா சவுத். இது எதற்கு கொண்டாடப்படுகிறது என்றால் திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுள் வேண்டி நிலவு வரும் வரை விரதமிருப்பார்கள். மேலும் மாலை வேளையில் திருமணமான பெண்கள் அனைவரும் ஒன்று கூடி பூஜை செய்வார்கள்.

அத்தகைய கர்வா சவுத் கொண்டாட்டத்திற்கு நடிகை ஸ்ரீதேவியும் பங்கு கொண்டார். அப்படி பங்கு கொள்ளும் போது அவர் டிசைனர் சப்யசாச்சி டிசைன் செய்த மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் கலந்த லேஸ் புடவையை அணிந்து வந்திருந்தார்.

Sridevi In Sabyasachi Saree

அதிலும் இந்த மஞ்சள் நிற புடவைக்கு அவர் அணிந்து வந்த எம்பிராய்டரி ஜாக்கெட், அந்த புடவையை இன்னும் அழகாக வெளிக்காட்டியது. மேலும் ஸ்ரீதேவி இந்த புடவைக்கு அற்புதமாக மேக்கப் போட்டு வந்திருந்தார். அதில் உதடுகளுக்கு அடர் மெரூன் நிற லிப்ஸ்டிக் அணிந்து, வட்ட வடிவில் பொட்டு வைத்து, கண்களுக்கு கண்மை போட்டு வந்திருந்தார்.

குறிப்பாக ஸ்ரீதேவி புடவைக்கு ஏற்றவாறு பெரிய காதணி, பச்சையான கற்கள் பதிக்கப்பட்ட பட்டையான நெக்லேஸ் போட்டு வந்தது அவரது தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டியது.

Sridevi In Sabyasachi Saree

அதுமட்டுமின்றி, ஸ்ரீதேவி இந்திய பெண்களின் பாரம்பரிய ஹேர் ஸ்டைலான கொண்டை போட்டு, அதனைச் சுற்றி மல்லிகைப் பூ வைத்து வந்தது, அவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.

English summary

Sridevi In Sabyasachi Saree

Sridevi attended Karva Chauth celebrations wearing an orange Sabyasachi sari with a green embroidered blouse. Take a look...