For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புத்தரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கையை மாற்றும் சில பாடங்கள்!!!

By Ashok CR
|

வாழ்க்கை, இறப்பு மற்றும் பிற விஷயங்கள் மத்தியில் வாழ்க்கையின் முடிவின்மை பற்றி புத்தர் நமக்கு ஆழமான உண்மை உளநிலையை அளித்துள்ளார். ஞானம் என்பது ஒவ்வொரு மனிதனாலும் அடையக்கூடிய ஒன்று தான் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த இடத்தில் ஞானம் என்பது மேம்படுத்த முடியாத சந்தோஷம், மனிதர்களால் அளவிட முடியாத அளவிலான உச்ச ஆனந்தம் மற்றும் மெய்யறிவு ஆகியவற்றையே குறிக்கிறது.

இன்று புத்தரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கையை மாற்றும் பாடங்களை தான் நாம் கற்க போகிறோம். புத்தரின் தவிர்க்க முடியாத சில முக்கிய புத்த மத கோட்பாடுகளை பார்க்கப் போகிறோம். அதில் புத்தர் என்ன கூற வருகிறார் என்பதையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

நாம் அனைவரும் அறிந்ததை போல், வாழ்க்கை என்பது கணிக்க முடியாத ஒரு இயற்பாடாகும். இறப்பு என்பது எப்போது வேண்டுமானாலும் நமக்கு ஏற்படலாம். மனிதர்களாக, ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள நாம் எடுக்கும் முயற்சி முரண்பாடானது; ஆம், இறப்பின் அர்த்தத்தை தெரிந்து கொள்ள நாம் முயற்சிப்பதில், நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தத்தை தெரிந்து கொள்ளாமல் போகிறோம். இருப்பினும் ஒரு கட்டத்தில் அந்த இடத்திற்கு விரைவில் வருவோம்.

இப்போதைக்கு, வாழ்க்கையை மாற்றும் சில பாடங்களைப் பற்றி புத்தரிடம் இருந்து தெரிந்து கொள்வோம். இந்த பாடங்கள் அனைத்தும் புத்தரின் சில அசைந்து கொடுக்காத கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்ததாகும். இந்த அனைத்தும் புத்த மதத்தின் அடிப்படை கொள்கையுடன் சம்பந்தப்பட்டிருக்கும். சரி, இப்போது வாழ்க்கையை மாற்றும் புத்தரின் சில பாடங்களைப் பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீங்கள் செய்வதை விட என்ன செய்கிறோம் என்பதே முக்கியம்

நீங்கள் செய்வதை விட என்ன செய்கிறோம் என்பதே முக்கியம்

வார்த்தைகளை விட செயல்களே அதிகமாக பேசப்படும். அதே போல் நாம் சொல்வதை விட நாம் என்ன செய்கிறோம் என்பது தான் நம் குணத்திற்கு சான்றாக விளங்கும். வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் பற்றிய புத்தரின் முக்கியமான பாடம் இது.

நல்ல ஆரோக்கியத்திற்கான ரகசியம்

நல்ல ஆரோக்கியத்திற்கான ரகசியம்

நல்ல ஆரோக்கியத்தை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், தற்போதுள்ள தருணத்தை வாழ்ந்திடுங்கள். மனதை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் முக்கியமானதாகும். நல்ல ஆரோக்கியத்தை அனுபவித்திட தற்போதைய தருணத்தை வாழ்ந்தால் தான் முடியும். புத்தர் சொல்வதை போல், "இறந்த காலம் அல்லது வருங்காலத்தில் வாழாதீர்கள், மாறாக நிகழ் காலத்தை உங்கள் வீடாக மாற்றிக் கொள்ளுங்கள்".

சில விஷயங்கள் போகட்டும்

சில விஷயங்கள் போகட்டும்

புத்தரின் கோட்பாடுகளில் நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமானவைகளில் இதுவும் ஒன்றாகும். சில விஷயங்கள் போனால் போகட்டும் என விட்டு விடவில்லை என்றால், துயரம் மற்றும் மனக்கசப்பு என்ற தப்பிக்க முடியாத சுழற்சியில் மாட்டிக்கொள்வோம்.

பகிர்ந்தால் குறையாதது சந்தோஷம்

பகிர்ந்தால் குறையாதது சந்தோஷம்

சந்தோஷத்தை பகிர்கையில் அது இரண்டு மடங்காகும். சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டால் அது குறைந்துவிடும் என்பதற்கு வாய்ப்பே இல்லை.

வெறுப்பிற்கும் இருளுக்கும் ஒரே தீர்வு - அன்பும் வெளிச்சமும்

வெறுப்பிற்கும் இருளுக்கும் ஒரே தீர்வு - அன்பும் வெளிச்சமும்

"எப்படி இருளை ஒளியால் மட்டுமே வெல்ல முடியுமோ அதே போல் அன்பை தவிர வேறு எதனாலும் வெறுப்பை வெல்ல முடியாது" என புத்தர் கூறுகிறார்.

கருணையும்... இரக்கமும்...

கருணையும்... இரக்கமும்...

புத்தரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கையை மாற்றும் பாடங்களில் மிகவும் முக்கிய பங்கை இந்த குறிப்பிட்ட ஒன்று வகிக்கிறது. நம் சொந்த புலன்களை தூய்மையாக வைத்திருக்க விரும்பினால், நாம் பின்பற்ற வேண்டியதெல்லாம் அன்பும் கருணையும் மட்டுமே.

உண்மை தானாக தன்னை வெளிப்படுத்தும்

உண்மை தானாக தன்னை வெளிப்படுத்தும்

மனிதர்களின் முயற்சி இல்லாமல் தானாக வெளிப்படும் மூன்று விஷயங்களைப் பற்றி புத்தர் கூறுகிறார் - சூரியன், சந்திரன், கடைசியாக உண்மை.

மனதை கட்டுப்படுத்தவில்லை என்றால், அது உங்களை சந்தோஷமற்ற வகையில் பயணிக்க வைக்கும்

மனதை கட்டுப்படுத்தவில்லை என்றால், அது உங்களை சந்தோஷமற்ற வகையில் பயணிக்க வைக்கும்

நம் மனது நம்மை கட்டுப்படுத்தாமல், மனதை நாம் கட்டுப்படுத்துவதை, மனிதர்களாக நாம் உறுதி செய்ய வேண்டும்.

இறந்த காலத்தோடு அமைதியை ஏற்படுத்துங்கள்

இறந்த காலத்தோடு அமைதியை ஏற்படுத்துங்கள்

இறந்த காலத்தோடு அமைதியை ஏற்படுத்தவில்லை என்றால், வருங்காலத்தில் நிம்மதியை தொலைத்து அலைய வேண்டி வரும். அதனால் இறந்த காலத்தோடு அமைதியை ஏற்படுத்தி, மன்னித்து வாழ்க்கையை தொடருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Life Transforming Lessons To Learn From The Buddha

Here are 8 life transforming lessons to learn from Buddha. These lessons are based on certain impregnable teachings of Buddha. Each one of these points is relevant to the basic principles of Buddhism. Read on.
Desktop Bottom Promotion