For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ருத்ராட்சை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!!!

By Ashok CR
|

ருத்ராட்சையை பற்றி நீங்கள் கண்டிப்பாக கேள்விப்பட்டிருப்பீர்கள். ப்ரவுன் நிற மணிகளான இவைகளை, சிவபெருமானின் பக்தர்கள் கழுத்தில் அல்லது கையில் அணிவார்கள். ருத்ராக்ஷா என்ற வார்த்தையில் இருந்து ருட்ராட்சை அதன் பெயரை பெற்றது. ருத்ராக்ஷா என்பது 'ருத்ரா' (சிவன் என்று பொருள்) மற்றும் 'அக்ஷா' (கண்கள் என்று பொருள்) என்ற வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானதே ருத்ராட்சை மரம் என்று நம்பப்படுகிறது. அதனால் தான் அது ருத்ராட்சை என்ற பெயரை பெற்றது.

இமயமலை வட்டாரத்தில் இந்த ருத்ராட்சை மரங்கள் அதிகமாக காணப்படும். இந்த மரம் நீடித்து வாழ, குறைந்த தட்பவெப்ப நிலையும் மாசற்ற சுற்று சூழலும் இருந்தாக வேண்டும். அதனால் தான் நேபால் மற்றும் ஹிமாசல பிரதேச மலை வட்டாரங்களில் மட்டுமே இது காணப்படும். இந்த ருத்ராட்சை மரம் 100 ஆண்டு காலம் வரை நீடித்து நிற்கும்.

சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

ருத்ராட்ச மணிகளை மாலையாய் கோர்த்து தொடர்ச்சியான வழிபாடுக்கு அதனை பயன்படுத்தலாம். இந்த ருத்ராட்சை மணிகள் ஒரு முகம் முதல் 21 முகங்கள் வரை கொண்டுள்ளதாகும். இருப்பினும் 1-14 முகங்கள் கொண்ட ருத்ராட்சையை மட்டுமே மனிதர்கள் அணிகிறார்கள்.

ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உள்ளது. அதற்கு வியக்கத்தக்க சக்திகளும் உள்ளது. ருத்ராட்சை அணிவதால் பல வகையான நோய்கள் குணமடைந்து ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றலை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. ருத்ராட்சை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒருமுக ருத்ராட்சை

ஒருமுக ருத்ராட்சை

ஒரு முக ருத்ராட்சை என்பது சிவபெருமானின் மிக நெருங்கிய வடிவமாக பார்க்கப்படுகிறது. "ஓம் ஹ்ரீம் நமஹ" என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும். இந்த ருத்ராட்சையை அணியும் போது, இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இவ்வகை ருத்ராட்சையை அணிபவருக்கு அனைத்து வகையான சந்தோஷமும் செல்வ செழிப்பும் பெருகும்.

இரண்டு முக ருத்ராட்சை

இரண்டு முக ருத்ராட்சை

இரண்டு முக ருத்ராட்சை அனைத்து வகையான ஆசைகளையும் நிறைவேற்றும். இதனை அணியும் போது, "ஓம் நமஹ" என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மூன்று முக ருத்ராட்சை

மூன்று முக ருத்ராட்சை

அறிவை நாடுபவர்களுக்கானது இந்த மூன்று முக ருத்ராட்சை. இதனை அணியும் போது, "ஓம் கிளீன் நமஹ" என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

நான்கு முக ருத்ராட்சை

நான்கு முக ருத்ராட்சை

நான்கு முக ருத்ராட்சை என்பது பிரம்மனின் வடிவத்தை குறிக்கும். இவ்வகை ருத்ராட்சை ஒரு மனிதனுக்கு தர்மம், அர்தா, காமம் மற்றும் மோட்சத்தை அளிக்கும். "ஓம் ஹ்ரீம் நமஹ" என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

ஐந்து முக ருத்ராட்சை

ஐந்து முக ருத்ராட்சை

வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் மற்றும் தடங்களை நீக்க ஐந்து முக ருத்ராட்சை உதவி புரியும். "ஓம் ஹ்ரீம் நமஹ" என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

ஆறு முக ருத்ராட்சை

ஆறு முக ருத்ராட்சை

முருக பெருமானை குறிக்கிறது இந்த ருட்ராட்சை. இந்த ருத்ராட்சையை வலது கையில் கட்டிக் கொண்டால், பிரம்மஹத்தி பாவங்களை போக்கலாம். "ஓம் ஹ்ரீம் ஹம் நமஹ" என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

ஏழு முக ருத்ராட்சை

ஏழு முக ருத்ராட்சை

அளவுக்கு அதிகமான நிதி நஷ்டம் அல்லது போதிய அளவில் சம்பாதிக்க முடியாதவர்கள் இந்த ஏழு முக ருத்ராட்சையை அணியலாம். "ஓம் ஹம் நமஹ" என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

எட்டு முக ருத்ராட்சை

எட்டு முக ருத்ராட்சை

பைரவரை குறிக்கிறது எட்டு வகை ருத்ராட்சை. இவ்வகை ருத்ராட்சை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் துரதிஷ்டவசமான விபத்துகளில் இருந்தும் காக்கும். "ஓம் ஹம் நமஹ" என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

ஒன்பது முக ருத்ராட்சை

ஒன்பது முக ருத்ராட்சை

ஒன்பது வடிவிலான சக்தியை குறிக்கிறது இந்த ருத்ராட்சை. இவ்வகை ருத்ராட்சையை அணிபவர்களுக்கு அனைத்து விதமான சந்தோஷங்களும் வளமையும் வந்து சேரும். "ஓம் ஹ்ரீம் ஹம் நமஹ" என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

பத்து முக ருத்ராட்சை

பத்து முக ருத்ராட்சை

10 முக ருத்ராட்சை விஷ்ணு பகவானை குறிக்கும். இந்த ருத்ராட்சையை அணிபவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் கிட்டும். "ஓம் ஹ்ரீம் நமஹ" என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

பதினொன்று முக ருத்ராட்சை

பதினொன்று முக ருத்ராட்சை

வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றி கிட்டிட பதினொன்று முக ருத்ராட்சையை அணியவும். "ஓம் ஹ்ரீம் ஹம் நமஹ" என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

பனிரெண்டு முக ருத்ராட்சை

பனிரெண்டு முக ருத்ராட்சை

சந்தோஷத்திற்கும் ஆரோக்கியமான உடல்நலத்திற்கும் பனிரெண்டு முக ருத்ராட்சையை அணிய வேண்டும். "ஓம் க்ரோம் ஷ்ரோம் ரோம் நமஹ" என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

பதிமூன்று முக ருத்ராட்சை

பதிமூன்று முக ருத்ராட்சை

விஷ்வதேவர்களை குறிக்கிறது பதிமூன்று முக ருத்ராட்சை. அதிர்ஷ்டத்திற்காக அணியப்படுகிறது இந்த ருத்ராட்சை. "ஓம் ஹ்ரீம் நமஹ" என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

பதினான்கு முக ருத்ராட்சை

பதினான்கு முக ருத்ராட்சை

பதினான்கு முக ருத்ராட்சையும் சிவபெருமானையே குறிக்கும். இந்த ருத்ராட்சை உங்கள் நெற்றியை தொடுமாறு அணிய வேண்டும். உங்கள் பாவங்கள் நீங்க இதனை அணியலாம். "ஓம் நமஹ" என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts About Rudraksha

Wearing Rudraksha is said to heal many ailments and also bring positive energy into a person's life. Read on to know more interesting facts about Rudraksha.
Desktop Bottom Promotion