For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராமர் தனது அவதாரத்தை எப்படி முடித்தார் என்பது தெரியுமா?

By Ashok CR
|

தன் பாதையில் எண்ணிலடங்கா தடங்கல்களும். சோதனைகளும் பரவியிருந்த போதிலும், தர்மத்தை நிலைநாட்டும் திடமான மற்றும் சக்தி வாய்ந்த குறிக்கோளை கொண்டிருந்த ராமபிரானின் வாழ்க்கைப்பாதை நமக்கு ஒரு உதாரணமாக விளங்கும். தர்மத்தின் பாதையை தொடர்ந்து பின்பற்றி அந்த பாதையிலிருந்து விலகி செல்லாமல் சென்றது அவரை ஒரு முழுமையான மனிதனாக மாற்றியது. ராமபிரானை பற்றி பல விஷயங்களும் அவர் கடந்து வந்த சோதனைகளை பற்றியும் நமக்கு தெரிந்திருந்தாலும், ராமபிரான் எப்படி இறந்தார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு: இராவணனின் மகள் சீதா தேவியா...?

இந்து மதத்தில் ராமபிரான் விஷ்ணு பகவானின் அவதாரமாக வர்ணிக்கப்பட்டுள்ளார். விஷ்ணு பகவானின் அவதாரங்கள் சாதாரண, மனித வழியில் இறப்பை சந்திக்காது. ராமபிரான் தானாக முன் வந்து சராயு நதியில் இறங்கி வைகுண்டத்தை அடைந்தார் என சிலர் நம்புகின்றனர். ராமபிரானின் இறப்பை விளக்க பத்மபுராணம் முயற்சி செய்துள்ளது. அதனை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

விஷ்ணு பகவானின் 10 அவதாரங்களும்... அதன் கதைகளும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தர்மத்தை நிலைநாட்டும் குறிக்கோள்

தர்மத்தை நிலைநாட்டும் குறிக்கோள்

ராமபிரான் 11,000 ஆண்டு காலமாக ஆட்சி புரிந்தார் என நம்பப்படுகிறது. தர்மத்தை நிலைநாட்டி உண்மையான சந்தோஷத்திற்கான பாதையை மக்களுக்கு வழிகாட்டுவது அவரின் குறிக்கோளாக விளங்கியது. அவர் ஆட்சி காலத்திற்கு பிறகு, அவர் புதல்வர்களான லவாவும், குசாவும், அவர்களின் தந்தையை போல் அதே குறிக்கோளுடன் ஆட்சி புரிந்தார்கள். அவருடைய ஆட்சி காலம் முடிவடைந்த போது, ராமபிரானின் மனைவியான சீதா தேவியை பூமா தேவி மீண்டும் பூமிக்கு அடியில் அழைத்து சென்று விட்டார் என நம்பப்படுகிறது.

காவல் காத்த லட்சுமணன்

காவல் காத்த லட்சுமணன்

இப்போது கூறப்போவது உங்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கும். ஒரு முறை, ராமபிரானை சந்திக்க வந்த ஒரு முனிவர், அவரிடம் தனிமையில் உரையாட வேண்டும் என கேட்டுக் கொண்டார். அந்த முனிவருடன் ஒரு அறைக்கு சென்ற ராமர், லட்சுமணனை அந்த கதவுக்கு காவல் இருக்க சொன்னார். மேலும் எந்த ஒரு ஆத்மாவையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

ராமபிராணின் காலம் முடிந்தது

ராமபிராணின் காலம் முடிந்தது

ராமபிரான் அந்த முனிவருடன் பேச சென்றதே அவருடைய கடைசி தருணம் என நம்பப்படுகிறது. அந்த முனிவர் வேறு யாருமின்றி, 'அவதாரம் முடிந்துவிட்டது என்பதை சொல்லும் காலமாகும்'. இந்த உலகத்தில் ராமபிரான் ஆற்ற வேண்டிய கடமை முடிவடைந்து விட்டதால், அவர் வைகுண்டத்திற்கு வர வேண்டிய நேரம் வந்து விட்டது என அந்த முனிவர் ராமரிடம் கூறினார்.

துர்வாசா முனிவரின் வருகை

துர்வாசா முனிவரின் வருகை

இந்த தருணத்தில், முன் கோபத்திற்கு பெயர் பெற்ற துர்வாசா முனிவர் ராமரை சந்திக்க விரும்பினார். லட்சுமணர் அனுமதிக்காததால், அயோத்யா நகரத்தின் மீது சாபம் விடுவதாக எச்சரித்தார். அயோத்யா மக்களை காக்க வேண்டி, தன் உயிர் ஆபத்தில் இருந்தாலும், துர்வாசா முனிவரை உள்ளே செல்ல அனுமதி அளித்தார் லட்சுமணன். அயோத்யாவை காப்பாற்ற தண்டனையை ஏற்று மரணத்தை தழுவ முன் வந்தார்.

அவதாரத்தை முடித்த ராமர்

அவதாரத்தை முடித்த ராமர்

அப்போது காலத்தின் பாத்திரத்தை ஏற்றுக் கொண்டு அந்த அறைக்குள் லட்சுமணரை செல்ல சொன்னார் துர்வாசா. அதனை உடனடியாக ஏற்றுக் கொண்ட லட்சுமணர் அந்த வடிவத்தை எடுத்தார். தன் தம்பியின் நோக்கம் நிறைவேறியதை அறிந்த ராமர், சராயு நதியில் இறங்க முடிவெடுத்து தன் அவதாரத்தை முடித்துக் கொண்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Did Lord Rama Die?

Some believe that Lord Rama voluntarily entered the Sarayu river and is believed to have left to Vaikunta. The Padma Purana tries to explain the death of Lord Rama. Read on to know more.
Desktop Bottom Promotion