டைட்டனின் புதிய கலெக்ஷனை வெளியிட அற்புதமாக வந்த நர்கிஸ்!!!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் டைட்டன் கம்பெனியானது புதிய கலெக்ஷனை வெளியிட்டது. அந்த கலெக்ஷனை வெளியிட பாலிவுட் நடிகையான நர்கிஸ் அவர்களை அழைந்திருந்தனர். இந்த டைட்டன் கலெக்ஷனை வெளியிட வரும் போது நடிகை நர்கிஸ் அற்புதமான புடவையில் வந்திருந்தார்.

அதுமட்டுமின்றி, அந்த புடவைக்கு நர்கிஸ் மேற்கொண்டு வந்த ஸ்டைல் மற்றும் மேக்கப் அட்டகாசமாக இருந்தது. இப்போது அவர் டைட்டன் வாட்ச் கலெக்ஷனை வெளியிட வரும் போது மேற்கொண்டு வந்த ஸ்டைலைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

டைட்டன் வாட்ச்சின் புதிய கலெக்ஷனை வெளியிட வரும் போது நர்கிஸ் SVA புடவையை அணிந்து வந்திருந்தார். பெரும்பாலும் இவர் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது புடவையில் வரமாட்டார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு புடவையில் வந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. குறிப்பாக இந்த புடவைக்கு அவர் அணிந்து வந்த ஜாக்கெட் அவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.

என்ன தான் இருந்தாலும் நர்கிஸ் அவர்களுக்கு மார்டன் உடையை விட, புடவையே அற்புதமாக உள்ளது. மேலும் நர்கிஸ் புடவைக்கு ஏற்றவாறு கொண்டை போட்டு வந்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பிங்க் நிற பிளஷ் போட்டு வந்ததுடன், உதடுகளுக்கு லைட்டாக சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார். புடவையில் இவரை அழகாக வெளிக்காட்டியது அவர் அணிந்து வந்த ஆபரணங்கள் என்று கூட சொல்லலாம்.

Gorgeous Nargis Fakhri In SVA Sari

என்ன நண்பர்களே! உங்களுக்கு நர்கிஸ் மேற்கொண்டு வந்த ஸ்டைல் பிடித்துள்ளதா?

English summary

Gorgeous Nargis Fakhri In SVA Sari

Nargis Fakhri was recently spotted at the launch of Titan's all new watch collection. Read on...
Story first published: Tuesday, October 14, 2014, 16:14 [IST]
Subscribe Newsletter