இன்னும் பலரது மனதில் விருப்பமான நாயகியாக இருக்கும் ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் லுக்!

Posted By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் நடந்த மும்பை ஃபிலிம் திருவிழாவில் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் அட்டகாசமான உடைகளை அணிந்து வந்திருந்தனர். அதில் வயதானாலும் இன்னும் பலரது மனதில் விருப்பமான நாயகியாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் பச்சனும் கலந்து கொண்டார். பெரும்பாலும் ஐஸ்வர்யா நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது சப்யசாச்சி என்னும் டிசைனர் வடிவமைத்த ஆடைகளைத் தான் தேர்ந்தெடுத்து அணிந்து வருவார்.

அந்த வகையில் இந்த மும்பை ஃபிலிம் திருவிழாவிற்கும் ஐஸ்வர்யா ராய் சப்யசாச்சி டிசைன் செய்த நீல நிற புடவையை அணிந்து வந்திருந்தார். இந்த புடவை பார்ப்பதற்கு சிம்பிளாகத் தான் இருக்கும். இந்த புடவையைப் பற்றி சொல்ல வேண்டுமானால், அடர் நீல நிற புடவையில் சிவப்பு கலந்த ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலந்தவாறான பார்டர் இருக்கும்.

Aishwarya In Blue Sabyasachi Saree

மேலும் ஐஸ்வர்யா ராய் இந்த புடவைக்கு முழுக்கை கொண்ட ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். அந்த ஜாக்கெட்டில் ஆங்காங்கு தங்க நிற பூப்பிரிண்ட் போடப்பட்டிருப்பதுடன், கோல்டன் பார்டர் இருந்தது. சொல்லப்போனால் ஐஸ்வர்யா மிகவும் சிம்பிளாகத் தான் அணிந்து வந்திருந்தார்.

Aishwarya In Blue Sabyasachi Saree

அதுமட்டுமல்லாமல் ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்த புடவைக்கு ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். அத்துடன் ஆடம்பரமாக ஆபரணங்கள் எதுவும் அதிகம் அணியாமல், காதுகளுக்கு சிறிய கம்மல் அணிந்து வந்திருந்தார். மேலும் மேக்கப் கூட அளவாக போட்டு வந்திருந்தார்.

English summary

Aishwarya In Blue Sabyasachi Saree

Aishwarya Rai Bachchan was seen in a Sabyasachi saree at the Mumbai Film Festival 2015. To check out Aishwarya Rai's saree blouse design for this occasion.
Story first published: Monday, October 20, 2014, 15:57 [IST]