Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
கவர்ச்சியான உடல் கட்டமைப்புடன் இருக்கும் 15 பிரபலங்கள்!!!
ஒவ்வொருவருக்கும் மனதிற்கு பிடித்த சினிமா நடிகை என்று ஒருவர் அல்லது பலர் இருப்பார்கள். பல ஆண்களுக்கு பல நடிகைகள் கனவுக் கன்னிகளாக விளங்குகின்றனர். ஏன் நமக்கு நடிகைகள் பிடிக்கிறது என்றால் அவர்களின் அழகு மற்றும் கவர்ச்சியே. அதிலும் அவர்களின் உடல் கட்டமைப்புக்கு பலர் சொக்கி போய் விடுகிறார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், சிம்ரனின் கவர்ச்சியான இடுப்பிற்காகவே, அவருக்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் இருந்தது நமக்கு தெரிந்தது தானே.
ஒரு சினிமா நடிகை அவர் அணிந்திருக்கும் செருப்பு, வைத்திருக்கும் கைப்பை, அணிந்திருக்கும் ஆடை, தன்னுடைய கவர்ச்சி என இவையனைத்தையும் மீறி, கவர்ச்சியான உடலுக்காகத் தான் அதிகமாக விரும்பப்படுகிறார்கள். கடின உழைப்பு இல்லாமல், இதனை அவர்கள் சுலபமாக அடைந்து விடுவதில்லை. பல நடிகைகள் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, பத்திய உணவுகளை உட்கொண்டு, தங்கள் உடலை பராமரித்து வருகின்றனர்.
அவர்களுக்கு இருக்கும் வேலைப்பளுவில் தினசரி இவ்வாறு கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது கஷ்டமே. ஆனால் அதையும் மீறி, அவர்கள் ஆர்வத்துடன் அவைகளை பின்பற்றி, அழகிய உடலை பெற்றிருப்பதால் தான், அவர்கள் நம் கனவுக் கன்னியாக திகழ்கின்றனர். அப்படிப்பட்ட தேவதைகளைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா?

கத்ரீனா கைப்
தன்னுடைய அழகிய உடலை கொண்டு கவர்ச்சியான நடன அசைவுகளால் 'சிக்னி சமேலி' என்ற பாடலுக்கு ஆடி நம்மை மயக்கியதை நாம் மறக்க முடியாது. இவ்வகை உடலை பெறுவதற்கு கடினமான பத்திய உணவை உட்கொண்டு, உடலை பராமரித்து வருகிறார் அவர். இதுப்போக நீச்சல், யோகா மற்றும் சைக்கிள் ஓட்டுவது போன்ற தேகப் பயிற்சியிலும் ஈடுபட்டு, தன்னை கட்டுக்கோப்பாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கிறார்.

கேட் மிடில்டன்
சமீபத்தில் தாயாகியுள்ள இவர் காம்ப்ரிட்ஜை சேர்ந்த டட்ச்சின் மனைவியாவார். அப்படி ஒன்றும் பேரழகியாக இல்லாமல் இருந்தாலும் கூட, தன் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்பவர் இவர். அதற்கு அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார் என்று டெய்லி மெயில் என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.

கரீனா கபூர்
'பெபோ' என்று செல்லமாக அழைக்கப்படும் நமது கரீனா கபூர், தன் உடலை ஒட்டு மொத்தமாக மாற்றியுள்ளார். அவர் சைஸ்-ஜீரோ உடலை பெற்றது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் வெகு விரைவிலேயே தன்னுடைய உடல் நெளிவு சுளிவுகளை பெற்று கவர்ச்சிகரமாக தன் உடலை மாற்றினார். அதற்காக சரியான உணவு, யோகா மற்றும் உடற்பயிற்சியில் அவர் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெனிபர் லோபஸ்
44 வயதாகியும் கூட, ஆளை கொல்லும் உடல் வளைவுகளை பெற்றுள்ளார் ஜெனிபர் லோபஸ். இத்தனைக்கும் அவர் ஒரு குழந்தைக்கு தாய் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட வியப்பிற்குரிய உடல் கட்டமைப்பை பராமரிக்க, அவர் இதய பயிற்சி மற்றும் தசைகள் சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்.

சித்ராங்கதா சிங்
'தேசி பாய்ஸ்' என்ற படத்தில் இவர் மிகவும் அழகாக காட்சி அளித்ததை நாம் மறக்க முடியாது. 36 வயதாகியும் கூட, சிக்கென உடலை கொண்டவர் இவர். அதனை அடைய கடுமையான உடற்பயிற்சிகள் செய்து, பத்திய சாப்பாடுகளை உட்கொள்கிறார்.

ஹாலே பெர்ரி
கடின உழைப்பிற்கு மத்தியில், ஐந்து அம்ச பத்திய உணவுகளை இவர் உட்கொள்கிறார். அதன் படி கலோரிகள் அதிகரிப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவற்றை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளையே உட்கொள்கிறார்.

பிபாஷா பாசு
நமக்கு போதையளிக்கும் இவர், தினமும் 15 நிமிடங்களுக்கு கார்டியோவாஸ்குலர் உடற்பயிற்சிகள் செய்து வருகிறார். இது போக ஓட்டப்பயிற்சி மற்றும் ஏரோபிக்ஸ் போன்றவற்றிலும் ஈடுபடுகிறார்.

தீபிகா படுகோன்
இறகுப் பந்தாட்டம் விளையாடும் தீபிகா, ஒரு மாடல் மற்றும் அற்புதமான நடிகையும் கூட. அழகிய நீண்ட கால்களை வரப்பிரசாதமாக கொண்ட இவர், தன்னுடைய உடல் கட்டமைப்பை பராமரிக்க தினமும் யோகா மற்றும் திடமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறார்.

பிரியங்கா சோப்ரா
பல அழகிப் போட்டியில் மகுடத்தை வென்ற இவர், இப்போது தன்னுடைய அழகான உடலமைப்பு மற்றும் கவர்ச்சிகரமான உடல் வளைவுகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறார். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் விருப்பப்படும் இவர், அதற்காக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மிச்செல் ஒபாமா
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிக நாட்டம் உடையவர் இவர். உடற்பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியத்தில் ஈடுபாடு உடைய இவர், தீவிரமான கார்டியோ வாஸ்குலர் மற்றும் ஸ்ட்ரெட்ச்சிங் உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்.

மலைக்கா அரோரா கான்
கவர்ச்சி தாயான இவர், வாரம் மூன்று முறையாவது ஜிம் செல்ல தவறுவதில்லை. மேலும் குத்துச் சண்டை மற்றும் ஏரோபிக்ஸ் போன்றவற்றிலும் ஈடுபடுகிறார்.

மடோனா
அருமையான பாடாகியான இவருக்கு இப்போது 55 வயது. இந்த வயதிலும் கூட, அருமையான உடலமைப்பை கொண்டுள்ளார் இவர். அதிலும் வெறும் உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுப்பழக்கமுமே இவரது உடல் அழகிற்கான இரகசியமாகும்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
சிறந்த உடலழகை கொண்ட பாலிவுட் திரையுலக நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார் நீண்ட கால்களை கொண்ட இந்த அழகி. இவரின் கவர்ச்சியான உடல் வளைவுகளுக்கு யோகாவும், ஆரோக்கியமான உணவுகளுமே காரணமாகும். எப்போதும் நற்பதமான பழங்கள், சாலட் போன்றவற்றை தான் இவர் உண்ணுகிறார். அதே போல் கடுமையான உடற்பயிற்சியிலும் ஈடுபடுகிறார்.

ஷில்பா ஷெட்டி
தன் மகன் வியானை பெற்றெடுத்தப் பின், கவர்ச்சி புயல் என்ற அந்தஸ்திலிருந்து இப்போது ஒரு தாயாக மாறியுள்ளார் இவர். இப்போது நல்ல உடல் கட்டமைப்புடன் விளங்குகிறார் இவர். யோகா என்றால் உயிரை விடும் இவர் ஆரோக்கியமான பத்திய உணவுகளையே உட்கொள்கிறார்.

லாரா தத்தா
புதிதாக அம்மாவாகியுள்ள இவரும் ஒரு உடற்பயிற்சி பைத்தியமாவார். தீவிரமாக யோகா செய்யும் இவர் தியானம் மற்றும் கார்டியோ உடற்பயிற்சிகளை தவறாமல் தினமும் செய்து வருகிறார்.



Click it and Unblock the Notifications











