நடிகைகள் ஸ்லிம்மாக இருப்பதற்கான இரகசியங்கள்!!!

By Super

எந்தவொரு பிரபலத்தை அணுகி, அவர்களிடம் உடல் கட்டமைப்புடனும், மேலும் அழகாக இருப்பதற்கான காரணத்தைப் பற்றிக் கேட்டால், அவர்களிடமிருந்து வரும் உடனடி பதில் என்னவாக இருக்கும் தெரியுமா? " நான் விரும்புவதை நான் சாப்பிடுகிறேன். எனது உடல் இயற்கையாகவே இப்படி அமைந்துள்ளது. தனியாக நான் ஒன்றும் செய்வதில்லை." என்பதாகத் தான் இருக்கும்.

ஆனால் உண்மையில் இப்படித் தான் இருக்குமா? இயற்கையான உடலமைப்பு என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஒருவரின் உடலமைப்பு செதுக்கியது போல கட்டுக்கோப்புடன் திகழ தினமும், பல மணி நேரம் பயிற்சி தேவை. ஒரு பிரபலத்தின் தினசரி உடற பயிற்சிகளில் யோகாவும் இடம்பெற்றுள்ளது.

சுவாரஸ்யமான வேறு: தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பிரபலங்கள்!!!

முந்தைய காலங்களில் ஆன்மீகம், ஒழுக்கம் மற்றும் மன ஒருமைப்பாட்டுக்கான பயிற்சியாகக் கருதப்பட்ட யோகா, தற்போது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கான ஒரு பயிற்சியாகவும் மாறிவிட்டது. இப்போது உடலைக் கட்டுக்கோப்பாகப் பேணுவதற்கு தினசரி யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்ளும் 12 பிரபலங்களைப் பற்றிப் பார்ப்போமா!!!

'சிக்'கென்று மாறிய சோனாக்ஷியின் 'வெயிட் லாஸ்' ரகசியங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோனம் கபூர் (Sonam Kapoor)

சோனம் கபூர் (Sonam Kapoor)

சோனம் கபூர் தமது உடல் ஆரோக்கியத்தில் மிகவும் அக்கறையுள்ளவர். தினமும் பிக்ரம் (Bikram) யோகாவைப் பயிற்சி செய்கிறார். மேலும் தனது ட்வீட்டர் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு "அனைவராலும் கவர்ச்சியான யோகாசனம் என்று சொல்லப்படும் பிக்ரம் யோகாவை இன்று முதல் செய்யத் தொடங்கிவிட்டேன். கவர்ச்சியாகத் தோற்றமளிப்பதற்கு எனது தந்தை அளித்த அறிவுரை தான் இது." என்று குறிப்பிட்டுள்ளார்.

மேக் ரியான் (Meg Ryan)

மேக் ரியான் (Meg Ryan)

அமெரிக்க நடிகையும் தயாரிப்பாளருமான மேக் ரியான், தினமும் வீட்டில் யோகாசனம் செய்கிறார். அவரது உள்ளார்ந்த ஆற்றலை வலுப்படுத்தி, வாழ்க்கையைப் பகுத்துக் கொண்டு நடத்திச் செல்வதற்கு, யோகாவின் மிக முக்கிய அம்சமான தியானம் தான் உதவுகிறது என்கிறார். மேலும் அவரது வாழ்வில் மன அமைதியை அளித்து வாழ்க்கையின் சரியான வழியைக் காண்பதற்கு உதவியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty)

ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty)

பாலிவுட்டின் வனப்பான உடலமைப்பைக் கொண்டவர்களில் ஒருவரான ஷில்பா ஷெட்டி, யோகாவின் பயன்களையும் சக்தியையும் பற்றி அடித்துக் கூறுகிறார். ஜூன் 2008 இல் "ஷில்பாவின் யோகா" என்னும் தலைப்பிலான சிடியை வெளியிட்டார். மேலும் தமது கழுத்தில் ஒரு பிரச்சனை இருந்ததாகவும், கடுமையான ஸ்பாண்டிலைட்டிஸ் (spondylitis) நோயால் அவஸ்தைப்பட்டதாகவும், வல்லுநர்களிடம் பயிற்சி பெற்று, யோகா செய்யத் தொடங்கியதாகவும், தற்போது உண்மையிலேயே பயனடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொங்கனா சென் சர்மா (Konkana Sen Sharma)

கொங்கனா சென் சர்மா (Konkana Sen Sharma)

தனது எழிலார்ந்த உடலமைப்புக்கு யோகாதான் காரனம் என்று கூறுகிறார் பாலிவுட் நடிகையான கொங்கனா சென் சர்மா. 'ஏக் தீ தாயன்' என்னும் திரைப்படத்தில் முற்றிலும் புதிய வனப்புடன் கூடிய தமது உடலுடன் காட்சியளித்தார். அவரிடம் உடல் வனப்பை பற்றி கேட்ட போது " நான் யோகா செய்கிறேன். நெடுங்காலமாகத் தொடர்ந்து யோகா பயிற்சிகளைச் செய்துவருகிறேன்." என்று பதில் அளித்தார்.

மடோன்னா (Madonna)

மடோன்னா (Madonna)

தனது வாழ்க்கை முறையில் யோகாவைச் சேர்த்துக் கொண்ட பிரபலங்களில் பாப் தேவதையான மடோன்னாவும் ஒருவர். அவர் அஷ்டாங்க (asthanga) யோகா மற்றும் ஹதா (hatha) யோகாவின் தீவிர பிரியர். தமது மனதையும், ஆன்மாவையும் அமைதியாக வைத்திருந்து, தமது வாழ்க்கையை சுறுசுறுப்புடன் நடத்திச் செல்ல உந்து சக்தியாக இருப்பது யோகா என்று அடிக்கடி சொல்கிறார்.

லாரா தத்தா (Lara Dutta)

லாரா தத்தா (Lara Dutta)

பாலிவுட் அழகியும், கவர்ச்சியான அன்னையர்களில் ஒருவருமான 'லாரா தத்தா' குழந்தை பேறுக்குப் பின்னர், பெண்கள் இழந்த உடலழகை மீண்டும் பெறுவது குறித்த டிவிடியை வெளியிட்டுள்ளார். உடற்பயிற்சியும், கட்டுப்பாடான தினசரி பணிமுறையும் அவர் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த பின்னரும், தனது உடல் அமைப்பைக் கட்டுக்கோப்புடன் பேணுவதற்கு உதவியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிஃபர் அனிஸ்டன் (Jennifer Aniston)

ஜெனிஃபர் அனிஸ்டன் (Jennifer Aniston)

அமெரிக்க நடிகையான ஜெனிஃபர் அனிஸ்டன், வாரத்தில் 5 நாட்களாவது யோகா பயிற்சி செய்கிறார். தனது உடல் கட்டுக்கோப்பிற்கும், மன இறுக்கத்தைக் குறைப்பதற்கும் காரணம் யோகா என்று கூறுகிறார். அவர் புகைப்பிடிப்பதிலிருந்து விடுபட்டதற்கும் யோகா தான் காரனம் என்றும் கூறுகிறார் (நோட் திஸ் பாயிண்ட் மை லார்டு). ஜெனிஃபர் அனிஸ்டனின் கருத்துப் படி, மன இறுக்கத்தைக் குறைத்து ரிலாக்ஸ் செய்வதற்கு யோகா சிறந்த வழியாம்.

ரிக்கி மார்ட்டின் (Ricky Martin)

ரிக்கி மார்ட்டின் (Ricky Martin)

உலகமெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட ரிக்கி மார்ட்டின், தமது மன அமைதியைப் பேணுவதற்கும், ரிலாக்ஸ் செய்வதற்கும் யோகா பெருமளவு உதவுகிறது என்று கூறுகிறார். குறிப்பாக ஹதா (hatha) யோகாவை விரும்பும் ரிக்கி மார்ட்டின், வீட்டில் நிறைய யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்வதில் விருப்பமுள்ளவராக இருக்கிறார். " இதயம், மனம் மற்றும் உடலில்" நிலைத்தன்மையைப் பெறுவதற்கு யோகா உதவிகரமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கங்கனா ரனாவத் (Kangana Ranawat)

கங்கனா ரனாவத் (Kangana Ranawat)

கங்கனா ரனாவத் மற்றொரு தீவிர யோகா பிரியர். தனது "ஷூட் அவுட் அட் வடாலா" திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த கவர்ச்சிக்கன்னியான இவர், "நான் தினமும் யோகா செய்கிறேன். சம விகித உணவை உண்கிறேன்" என்கிறார்.

கரீனா கபூர் (Kareena Kapoor)

கரீனா கபூர் (Kareena Kapoor)

"நான் முழுமையாக யோகாவினுள் புகுந்துவிட்டேன். எனது வாழ்வை யோகா மாற்றிவிட்டதாக உணர்கிறேன். தினசரி காலையில் ஒன்றரை மணி நேரம் நான் செய்யும் யோகாசனப் பயிற்சிகளே எனது நாட்களை வழி நடத்திச் செல்கின்றன. நான் யோகாசனம் செய்யாத நாட்கள் மகிழ்ச்சியாக, நான் நினைத்தவாறு செல்வதில்லை. அந்நாட்களில் நான் நினைத்த வேலைகள் நான் நினைத்தவாறு முடிவதில்லை" என்று ஒரு நேர்காணலில் கரீனா கபூர் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்டி டர்லிங்டன் (Christy Turlington):

கிறிஸ்டி டர்லிங்டன் (Christy Turlington):

அமெரிக்காவின் மிகப் பிரபலமான மாடலான இவர் தீவிர யோகா பிரியரும் கூட. பழமையான இந்திய வழக்கங்களில் தீவிர நம்பிக்கை கொண்டுள்ள இவர், அவரது வாழ்வில் வாஸ்து, ஆயுர்வேதம், போன்றவற்றை உட்புகுத்திக் கொள்வதை விரும்புகிறார். மேலும் யோகாவின் ஆன்மா, உடல் மற்றும் மனம் சார்ந்த கருத்துக்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவராக இருக்கிறார். அவரது 18 வயதிலிருந்தே தொழில்முறையில் யோகா வகுப்புகளை நடத்திவருகிறார்.

ராணி முகர்ஜி (Rani Mukherjee):

ராணி முகர்ஜி (Rani Mukherjee):

தினந்தோறும் இரண்டு மணி நேரம் யோகா செய்து வருவதன் மூலம் ராணி முகர்ஜி தனது உடல் எடையைப் பெருமளவுக்குக் குறைத்து, தனது உடலமைப்பை மெருகேற்றியுள்ளார். திரைப்படத்திற்காகத் தனது உடல் எடையைக் குறைத்துள்ளார். "உடல் எடையைக் குறைக்கும் பயிற்சிகளுடன், யோகாவினையும் இணைத்துப் பயிற்சி மேற்கொண்டேன். இந்தப் பயிற்சி உண்மையிலேயே எனக்கு பலனளித்துள்ளது" என்கிறார் நடிகை ராணிமுகர்ஜி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion