For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்ல நாய்க்கு வயிறு சரியில்லையா?

By Maha
|

Pet Care
வீட்டில் ஆசைக்காக செல்லமாக வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு, மனிதர்களை போலவே உடலில் பிரச்சனைகள் வரும். அவ்வாறு வரும் போது அந்த பிரச்சனையை அவைகளால் சொல்ல முடியாது. அதிலும் நாய்கள் ஒரு சில உணவுகளில் மிகவும் சென்சிடிவ். அந்த உணவுகளை அவைகள் சாப்பிட்டுவிட்டால், அதற்கு வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படும். அவ்வாறு அவற்றிற்கு பிரச்சனைகள் ஏற்பட்டால், அதற்கான அறிகுறிகள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு. சில சமயங்களில் வயிற்றுவலி கூட ஏற்படும். ஆகவே இவ்வாறு வயிற்று பிரச்சனைகளில் பாதிக்கப்படாமல் இருக்க, செல்ல நாய்களை மிகவும் கவனமாக, அவற்றிற்கு கொடுக்கும் உணவை பார்த்துக் கொடுக்க வேண்டும். மேலும் செல்ல நாய்களுக்கு வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டால், அதனை வீட்டிலேயே சரிசெய்து விடலாம்.

* இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தண்ணீர் மிகவும் முக்கியமானது. அப்படிப்பட்ட தண்ணீரை செல்ல நாய்களுக்கு வயிற்றுப் போக்கின் போது அதிகம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் தண்ணீர் குறைந்து, வறண்டு விடும். இதனால் நாய்களுக்கு உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறி, ஆரோக்கியம் அடையும்.

* வயிற்று பிரச்சனையின் போது நாய்களுக்கு சாக்லேட், கோக், சிக்கன் மற்றும் காரமான காய்கறிகள் போன்றவற்றை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் இந்த நிலையில் அவைகளுக்கு உணவாக சாதம் மற்றும் தயிரை கொடுக்கலாம். செல்ல நாய்கள் இதை சாப்பிடவில்லையென்றால், அப்போது எலும்பில்லாத சிக்கனை வேக வைத்துக் கொடுக்கலாம். அதனால் விரைவில் செரிமானமாகிவிடும். வேண்டுமென்றால் வாழைப்பழத்தை மசித்தும் கொடுக்கலாம். இதனால் உடல் வறட்சியடையாமல் இருப்பதோடு, வயிற்றுப் பிரச்சனையும் சரியாகிவிடும்.

* சொல்லப்போனால் வயிற்றுப் பிரச்சனையின் போது நாய்களுக்கு இறைச்சியை கொடுக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் இறைச்சியில் இருக்கும் கொழுப்புள்ள பொருள், நாய்களின் வயிற்றுப் பிரச்சனையை மிகவும் மோசமாக்கிவிடும். அதிலும் வேக வைக்காத இறைச்சி ஆரோக்கியமற்றது. ஆகவே எந்த நிலையிலும் நாய்களுக்கு கொடுக்க வேண்டாம். மேலும் சர்க்கரை அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களையும் கொடுக்க வேண்டாம். அதனால் மார்பு மற்றும் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆகவே வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்களுக்கு வயிற்றுப் பிரச்சனையின் போது சர்க்கரை மற்றும் இறைச்சியை தவிர்க்க வேண்டும்.

* முதலில் செல்ல நாய்களுக்கு எதை சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனை ஏற்பட்டதென்று கண்டுபிடிக்க வேண்டும். அவ்வாறு திடீரென வயிற்றுப்பிரச்சனை ஏற்படுத்திய உணவுகளை செல்லங்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நிறைய முறை நாய்கள் என்னவென்று தெரியாமல் ஏதேனும் இலைகளை மென்று தின்ன, அதனால் அதற்கு அலர்ஜி மற்றும் வயிற்றுப் பிரச்சனை போன்றவை ஏற்பட்டுவிடுகின்றன. அந்த நிலையில் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் செடிகளில் கிருமிகள் மற்றும் பூச்சிகள் இருப்பதால் வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் நாய்களுக்கு உணவு முறையை மாற்றினாலும், அவற்றிற்கு வயிற்று பிரச்சனை ஏற்படும். ஆகவே அவ்வாறு நாய்களுக்கு புதுவித உணவுகளை கொடுக்கும் போது கொஞ்சமாக கொடுத்து பழக்கவும். இவ்வாறு செய்தால் விரைவில் அந்த உணவுமுறைக்கு பழகிவிடும்.

ஆகவே இவ்வாறெல்லாம் செய்து வந்தால், நாய்களது வயிற்றுப் பிரச்சனையை சரிசெய்வதோடு, அவற்றிற்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கலாம். இருப்பினும் சரியாகவில்லையென்றால் கால்நடை மருத்துவரை அணுகுவது நல்லது.

English summary

remedies to cure dog's upset stomach | செல்ல நாய்க்கு வயிறு சரியில்லையா?

Dogs are sensitive towards few food items. There are foods that can cause stomach problems for your dog. Vomiting and diarrhoea are some symptoms of an upset stomach. If your dog is having an upset stomach, you have to take care of your pet as they get really frustrated with the stomach pain. This can create havoc in your household. If your pet is suffering from an upset stomach, here are few simple home remedies that can provide relief to your dog.
Story first published: Friday, August 17, 2012, 13:51 [IST]
Desktop Bottom Promotion