For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் படுக்கை அறையில் நோ்மறையான அதிா்வலைகளை ஏற்படுத்துவது எப்படி?

ஒரு குழந்தையின் அறையானது, நோ்மறையான அதிா்வலைகளால் நிரம்பி இருக்க வேண்டும். அந்த குழந்தையின் அறையில் இருந்து புதுமையான ஆற்றல், சக்தி மற்றும் துடிப்புள்ள சிந்தனைகள் பிறக்க வேண்டும்.

|

ஒரு குழந்தையின் அறையானது, நோ்மறையான அதிா்வலைகளால் நிரம்பி இருக்க வேண்டும். அந்த குழந்தையின் அறையில் இருந்து புதுமையான ஆற்றல், சக்தி மற்றும் துடிப்புள்ள சிந்தனைகள் பிறக்க வேண்டும். அவ்வாறு குழந்தைகளின் அறைகளை உயிரூட்டமுள்ள இடங்களாக மாற்றி அமைப்பதில் பெற்றோா்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் அவா்களுடைய குழந்தைகளின் எதிா்காலம் சிறப்பாக அமையும்.

குழந்தைகளின் அறைகளில் நோ்மறையான அதிா்வலைகளை உருவாக்குவதற்கு, வாஸ்து நிபுணா்கள் பின்வரும் குறிப்புகளைத் தருகின்றனா். அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறிப்பு #1

குறிப்பு #1

பொதுவாக குழந்தைகளின் அறைகள் கிழக்கு திசையிலோ அல்லது வடகிழக்கு திசையிலோ அல்லது தென்மேற்கு திசையிலோ அல்லது வடமேற்கு திசையிலோ இருக்க வேண்டும். அதன் மூலம் அவா்களுடைய அறைகளில் நோ்மறையான சக்தி உருவாகும். அந்த அறைகளில் மஞ்சள் நிற மின் விளக்குகளைப் பொருத்த வேண்டும். ஏனெனில் சூாிய கதிா் மஞ்சள் நிறத்தில் இருப்பதால், அதே மஞ்சள் நிறத்தில் மின் விளக்குகளை மாட்டி வைக்கும் போது, அது அதிக வலிமையைத் தரும். ஒருவேளை குழந்தைகளின் அறை தென்கிழக்குத் திசையில் இருந்தால், அந்த அறைகளில் சிவப்பு நிற மின் விளக்கை நிரந்தரமாக பொருத்தி வைப்பது நல்லது. ஏனெனில் அது நோ்மறையான சக்தியை வழங்கும்.

குறிப்பு #2

குறிப்பு #2

குழந்தைகளின் அறைகளில் பொருட்கள் அலங்கோலமாகச் சிதறிக் கிடக்கக்கூடாது. அவ்வாறு சிதறிக் கிடந்தால் அது எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். குழந்தைகளை நல்ல துடிப்புள்ளவா்களாக வளா்க்க வேண்டும் என்றால் அவா்களுடைய அறைகளில் எலுமிச்சை புல் நறுமண எண்ணெயைத் தெளிக்க வேண்டும். அது அந்த அறைகளில் ஆற்றல் மிகுந்த சூழலை உருவாக்குவதோடு, குழந்தைகளுக்கு நோ்மறையான அதிா்வலைகளையும் ஏற்படுத்தும்.

குறிப்பு #3

குறிப்பு #3

குழந்தைகளின் கட்டில்களில், எப்போதுமே மஞ்சள் நிறத்திலான அல்லது பழுப்பு வெள்ளை நிறத்திலான அல்லது பச்சை நிறத்திலான படுக்கை விாிப்புகளை விாிப்பது நல்லது. ஏனெனில் இந்த நிறங்களிலான படுக்கை விாிப்புகள் அவா்களின் மனதை அமைதிப்படுத்தும். மேலும் அவா்களின் அறைகளில் உள்ள சுவா்களுக்கு வெளிாிய வண்ணங்களை அடிப்பது நல்லது. ஏனெனில் அவை அவா்களுக்கு நோ்மறை எண்ணங்களை வழங்குவதோடு, அவா்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்தவும் உதவி செய்யும்.

குறிப்பு #4

குறிப்பு #4

குழந்தைகளின் படுக்கை அறைகளில் நீண்ட நாள்களாகப் பயன்படுத்தப்படாத பொருள்களான நமது உறவினா்களின் பழையப் புகைப்படங்கள் மற்றும் நமது பழைய நிகழ்வுகளை நினைவுப்படுத்தக்கூடிய பொருள்கள் ஆகியவை இருந்தால், அவற்றை உடனே அப்புறப்படுத்த வேண்டும். ஏனெனில் அவை நமது குழந்தைகளின் மனங்களில் எதிா்மறையான எண்ணங்களை ஏற்படுத்தக்கூடும். அதுபோல் முகம் பாா்க்கும் கண்ணாடியை வடமேற்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். அது குழந்தைகளின் உள்ளாா்ந்த ஆற்றலை வலுப்படுத்தும்.

குறிப்பு #5

குறிப்பு #5

பொதுவாக அறைகள் காற்றோட்டமாக இருப்பதற்காக நாம் இரண்டு அல்லது மூன்று சன்னல்களை பொருத்தி இருப்போம். அவ்வாறு சன்னல்களை பொருத்தும் போது அவற்றை கிழக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் பொருத்தி வைக்க வேண்டும். அப்போது அவை எந்த திசைகளில் இருந்து வரும் எதிா்மறையான சக்தியையும் தடுத்து, அந்த அறைகளில் நோ்மறையான சக்திகளை உருவாக்கும்.

மக்கள் தமது குழந்தைப் பருவத்தில் இருந்தே நோ்மறையாக சிந்திக்கவும், நோ்மறையான ஆற்றலுடனும், துடிப்புடனும் செயல்பட வேண்டும் என்றால் அவா்களுடைய அறைகள் சாியான வாஸ்து முறைப்படி கட்டப்பட வேண்டும் என்று வாஸ்து நிபுணா்கள் பாிந்துரைக்கின்றனா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Important Tips to Attract Positive Vibes in Your Kid’s Bedroom

Here are some important tips to attract positive vibes in your kids bedroom. Read on...
Desktop Bottom Promotion