For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வினிகரைப் பயன்படுத்தி பெயின்ட் அடித்த சுவர்களை சுத்தமாக்கலாம்னு உங்களூக்குத் தெரியுமா?

By Super Admin
|

சுத்தமான மற்றும் அழகான சுவர்கள் உங்களின் வீட்டுப் பராமரிப்பைப் பற்றிய அனுகுமுறையின் நேரடி பிரதிபலிப்பு என்றால் அது மிகையல்ல. அதிலும் வீட்டில் குழந்தைகள் இருந்தால் சுவர்களை சுத்தமான வைத்துக்கொள்வது சற்று கடினமான சவால் தான்.

பென்சில் கிறுக்கல்கள், க்ரையான் வண்ணங்கள், ஒவிய வண்ணங்கள் என குழந்தைகள் பயன்படுத்தும் பல பொருட்களுடன் நீங்கள் போராட வேண்டியிருக்கும். அறைகளின் உபயோகத்திற்கு ஏற்றவாறு அறை சுவர்கள் இந்த குறும்புத் தாக்குதல்களிலிருந்து தப்புவது கடினம்.

சமையலறைச் சுவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். புகை, சமைக்கும்போது தெரிக்கும் உணவு அல்லது திரவக்கறைகள் என பலவகைகளில் சுவர்கள் மங்கிவிடும். அழுக்குப் படிந்த கை சுவற்றில் படுவதும் சுத்தம் செய்ய ஒரு கடினமான விசயம்தான்.

இந்தக் காரணங்களுக்காக இவற்றையெல்லாம் சுலபமாக துடைத்தெறிய ஒரு வழியைத் தேடுரீங்களா? இதோ நாங்க உங்களுக்காக சில ஐடியாக்களைத் தருகிறோம். சுவர்களை சுத்தம் செய்ய வினிகரைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த மற்றும் எளிய வழியாகும்.

இது கடினமான வேதிப் பொருட்களைக் கொண்டு உடம்பைக் கெடுத்துக் கொள்வதை விட மிகவும் சிறந்தது, பாதுகாப்பானது மற்றும் குழந்தைகள் புழங்கும் வீட்டில் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுத்தாது.

வால் பேப்பர்களை சுத்தம் செய்வதற்கு பெரும்பாலான சுத்தம் செய்யும் பொருட்கள் உதவுவதில்லை. ஆனால் வினிகர் அதற்கும் கூட ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அதனால் இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி வீட்டிலேயே உடனடியாகத் தயாரிக்கக் கூடிய வினிகரைக் கொண்டு உங்கள் வீட்டுச் சுவர்களை எவ்வாறு சுத்தமாகவும் மினுமினுப்புடனும் வைத்துக் கொள்வது எனத் தெரிந்து கொள்ளுங்கள்.

வினிகரும் தண்ணீரும்

தண்ணீர் கலந்த வினிகர் நம் சருமத்திற்குப் பாதுகாப்பாக இருக்கும் அதே நேரம் சுவற்றில் படும் ஏறக்குறைய அனைத்துக் கறைகளையும் நீக்கவல்லது.

How To Clean Painted Walls With Vinegar

ஏறக்குறைய ஒரு லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீரில் கால் கப் அளவிற்கு வினிகர் நன்கு கலந்து அதில் துணியை முக்கி சுவர்களைத் துடைக்கப் பயன்படுத்தலாம்.

வினிகரும் டிடெர்ஜென்டும்

உங்களுக்குக் கடினமான கறைகளை போக்க வேண்டியிருப்பின் சிறிது டிடெர்ஜென்ட், வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீர் கலந்த கலவை நன்கு வேலை செய்யும்.

இந்த கலவை சிறிது நேரம் கறைமீது இருக்கும்படி வைத்துவிட்டு குறைந்தபட்சம் ஒரு 10 நிமிடம் கழித்துத் துடைத்து சுத்தம் செய்யலாம்.

வினிகர் ஸ்ப்ரே

தண்ணீரும் வினிகரும் கலந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். அழுக்குள்ள இட்த்தில் அதை ஸ்ப்ரே செய்வது வேலையை சுலபமாக்கும். பின்னர் அந்த இடத்தை ஒரு சிறிது ஈரமான துணியால் துடைத்து விடுங்கள். இது சுவற்றில் உள்ள விடாப்பிடிக் கறைகளுக்கு ஒரு கச்சிதமான வழியாக இருக்கும்.

வினிகர் மற்றும் சமையல் சோடா

வினிகரும் சமையல் சோடாவும் ஒரு சிறந்த சுத்தப்படுத்திகள் என்பது நாமறிந்த்தே. இதை கலவையாக செய்யும்போது ஒரு சிறந்த சுத்தத்தை தந்து வேலையை எளிதாக்கும்.

இரண்டு பங்கு வினிகரும் ஒரு பங்கு சமையல் சோடாவும் சேர்த்து அதனோடு 3 பங்கு தண்ணீர் கலந்து ஒரு நல்ல கலவையை உருவாக்கி சுத்தப் படுத்தப் பயன்படுத்தலாம்.

வளைவுகள் மற்றும் இடுக்குகள்

மூலை முடுக்குகள், வளைவுகள் அல்லது வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சுவர்களில் சுத்தம் செய்ய ஸ்ப்ரே பாட்டில்கள் மிகவும் உதவும். அதனை ஸ்ப்ரே செய்த பிறகு அது வேலை செய்ய சற்று நேரம் காத்திருங்கள்.

தெளிக்கப்பட்ட பகுதிகளில் துணியைக் கொண்டு துடைத்து சுத்தப்படுத்துங்கள். தேவைப் பட்டால் துணியால் மூடிய துடைப்பமோ அல்லது மாப்-பையோ பயன் படுத்துங்கள்.

மரவேலை செய்த சுவர்கள்

மரவேலை செய்த சுவர்களில் எப்படி சுத்தம் செய்வது என்ற யோசனையா? தண்ணீர் கலந்த வினிகரை இதற்குப் பயன்படுத்துங்கள். அதில் சிறிது எண்ணை சேர்ப்பதன் மூலம் மரப் பகுதிகள் மினுமினுப்பாக அழகாகத் தெரிய உதவும்.

ஆயில் பெயின்ட்

ஆயில் பெயிண்ட் கொண்ட சுவர்களை சுத்தப்படுத்த வினிகர் மிக்ச் சிறந்த வழி. டெக்ச்சர் பெயின்ட் செய்யப்பட்ட சுவர்கள் அழுக்கு அதிகம் சேர இடமளிக்கும். இதற்கு நல்ல ஆழ்ந்து சுத்தம் செய்யக்கூடிய வழி தேவை. அதற்கு வினிகர் மிகவும் சிறந்த்து.

பெயின்ட் செய்யப்பட்ட சுவர்களை வினிகர் கொண்டு எவ்வாறு சுத்தம் செய்வது என்ற குழப்பம் இருந்தால், மேலிருந்து கீழாக சுத்தம் செய்வதால் அழுக்குத் திட்டுகள் தோன்றாமல் இருக்கும் என்பது ஒரு கூடுதல் குறிப்பு.

என்ன இப்ப இது ஈசியான வேலைதானே...

Read more about: home improvement வீடு
English summary

How To Clean Painted Walls With Vinegar

Take a look at how you can clean painted walls with vinegar. These are the best methods to clean your walls with vinegar and other related combinations.
Story first published: Monday, September 26, 2016, 17:27 [IST]
Desktop Bottom Promotion