For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நகர்ப்புற வீடுகளுக்கான சில தோட்டக்கலை இரகசியங்கள்!!!

By Ashok CR
|

தோட்டக்கலையின் மீது பல பேருக்கு ஈடுபாடு உள்ளது. தங்கள் வீட்டை அலங்கரிக்க பூச்செடி தொட்டிகளை வாங்கி குவிப்பார்கள். அவர்களை பொறுத்த வரை தோட்டக்கலை என்பது ஓய்வில் செய்யக்கூடிய ஒரு பொழுது போக்காகும். சில நேரம் ஈடுபாட்டையும் தாண்டி உயிராக அதன் மீது நாட்டம் கொண்டுள்ளனர் சிலர்.

நீங்கள் உண்ணுவதற்கு ஆரோக்கியமான காய்கள் மற்றும் பழங்களை கூட வளர்க்கலாம். ஆனால் நகர்ப்புற வீடு என்றால் அவைகளில் சில வேற்றுமைகள் இருக்கும். சில பேரின் வீட்டில் தோட்டத்திற்கென தனி முற்றம் என்பதே இருப்பதில்லை. உங்களுக்கு இந்த கலையின் மீது ஆர்வம் இருந்தும் கூட வீட்டில் இடம் இல்லாத போது ஏமாற்றம் அடைவார்கள் சிலர்.

சுவாரஸ்யமான வேறு: உங்களுக்கேற்ற ராசியான செடி இங்க இருக்கு பாருங்க...

ஆனால் வருத்தப்படுவதற்கு எதுவுமே இல்லை. தோட்டம் வைப்பதற்கு இடம் இல்லை என்றால் தான் என்ன? அழகிய தொட்டிகளில் சிகளை வைத்து, அவைகளை ஜன்னலின் மீது அல்லது சமையலறை ஜன்னலின் மீது அழகாக அடுக்கி, தோட்டக்கலையின் மீது இருக்கும் உங்கள் ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

ஆர்வம் தான் முக்கியம், அது இருந்தால் அதை எந்த வடிவில் வேண்டுமானாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம். எந்த காலமாகட்டும் அல்லது எந்த இடமாகாட்டும், நாங்கள் கூறும் ரகசியங்களை தெரிந்து கொண்டால், இந்த கலையின் மீதுள்ள ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். உங்களுக்கு தேவையானது எல்லாம் சில தொட்டிகள் மற்றும் என்ன வளர்க்க வேண்டும் என்பது மட்டுமே. மற்றது எல்லாம் பெரிய விஷயம் அல்ல.

இதுப்போன்று வேறு: வீட்டில் உள்ள தூசிகளை நீக்கும் அலங்கார செடிகள்!!!

சரி, நகர்ப்புற வீட்டில் இருக்கும் நீங்கள் தோட்டக்கலையை மேற்கொள்ள உங்களுக்காக சில ரகசியங்களை கூறப் போகிறோம். ஆர்கானிக் வகை செடிகளை உங்கள் வீட்டில் வளர்க்கலாம். அதனால் இந்த அழகு ரகசியங்களை கவனமாக படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிடைக்கும் இடத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும்

கிடைக்கும் இடத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும்

உங்கள் வீட்டிற்கு வெளியே அழகிய முற்றம் ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது எவ்வளவு பெரியது என்பதை கவனியுங்கள். அங்கே போதிய சூரிய வெளிச்சம் விழுகிறதா என்பதை முதலில் கவனியுங்கள். ஒரு வேளை, அங்கே மண் இருந்தால், மண்ணின் வகையை சோதனை செய்யுங்கள். ஆர்கானிக் செடி அல்லது பூ வகையை தேர்ந்தெடுப்பதற்கு முன், முதலில் முற்றத்தின் அனைத்து நிலைகளையும் சோதனை செய்து கொள்ள வேண்டும். ஆம், உங்களுக்கு முழுமையான தோற்றத்தை உண்டாக்கும் ஆசை இருக்கலாம். ஆனால் போதிய இடம் இல்லையென்றால், இருக்கும் இடத்தை எப்படி அழகாக்குவது என்று யோசியுங்கள். ஒரு வேளை, பக்கத்து வீட்டுக்காரருடன் அந்த இடத்தை பகிரும் நிலை ஏற்பட்டால், அவர்களுடன் பேசி அவர்களின் இடத்தை கொஞ்சம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். யோசித்துப் பாருங்கள்.

தண்ணீர் வரத்தை சோதனை செய்து கொள்ளுங்கள்

தண்ணீர் வரத்தை சோதனை செய்து கொள்ளுங்கள்

முற்றம் ஏதும் இல்லாமல் தோட்டம் போட விரும்புபவர்கள், மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று இது. எங்கிருந்து தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ளீர்கள்? ஹோஸ் பைப் வைத்து தண்ணீர் எடுத்து வர வேண்டுமா அல்லது வாளியில் தண்ணீர் நிறைத்து தூக்கி கொண்டு வர வேண்டுமா? ஒரு வேளை, வாளியில் பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்றால் அது கஷ்டமாக இருக்கும். அதனால் தான் சொன்னோம், தோட்டம் அமைக்கும் முன்பு, போதிய திட்டமிடுதல் தேவை என்று. மேலும் தண்ணீருக்கான கட்டுப்பாட்டின் மீதும் கவனம் தேவை. உங்கள் வீட்டில் கோடைக்காலத்தில் தண்ணீர் பிரச்சனை இருந்தால், அதற்காக உங்கள் செடிகள் வாடக்கூடாது அல்லவா?

தோட்டம் அமைப்பதை பற்றிய திட்டமிடுதல்

தோட்டம் அமைப்பதை பற்றிய திட்டமிடுதல்

தோட்டத்தை அமைப்பதற்கு முன்பு என்ன செடிகள் வளர்க்கப் போகிறீர்கள் என்பதை திட்டமிடுவது அவசியம். என்ன வளர்க்க போகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்: சிறு செடி, உணவு, செடிகள், பூக்கள் போன்றவைகள்.ஒரு வகை செடி தான் வளர்க்க போகிறீர்களா அல்லது அனைத்து வகையிலும் ஒவ்வொன்று வளர்க்க போகிறீர்களா? உங்கள் முதன்மை எதன் மீது என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பிய செடிகளை வளர்க்க இந்த பதில்கள் உங்களுக்கு இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். எவ்வகை செடிகளுக்கு அதிக சூரிய வெளிச்சம் தேவை, தேவையில்லை என்பதையும் தெரிந்து கொள்வீர்கள். போதிய இடம் இல்லாத போது, திட்டமிடுதல் மிகவும் முக்கியம்.

புதுமையான தோட்டம்

புதுமையான தோட்டம்

போதிய இடம் இல்லாத போது, உங்கள் ஆக்கப்படைப்பை வெளிக்கொண்டு வாருங்கள். எப்போதும் வளர்க்கிற காயையும் பழங்களையும் தான் வளர்க்க வேண்டும் என்றில்லை. நீங்களே ஆராய்ச்சி செய்து, புதுமையான ஒன்றை திட்டமிடுங்கள். இவ்வகை சூழ்நிலைகள் உங்களின் ஆக்கப்படைப்பு உங்களுக்கு பெரிதும் உதவும்.

தலைகீழ் தோட்டம்

தலைகீழ் தோட்டம்

தற்போது, இவ்வகை தோட்டத்தை தான், நகர்ப்புற வாசிகள் பலரும் பின்பற்றுகிறார்கள். உண்மையிலேயே இது ஒரு சுவாரஸ்யமான போக்காகும். இந்த முறையால், உங்கள் தோட்டத்தின் அளவு பெரிதாகி, கிடைத்த சிறு இடத்தை நன்றாக பயன்படுத்தலாம். உயரமான தொட்டிகளை பயன்படுத்தி அதில் செடிகளை வையுங்கள். ஜன்னல் பெட்டிகளை பயன்படுத்தினால் இடத்தை அடைக்காமலும் இருக்கும். இந்த ஐடியாவால் கிடைத்த சிறு இடத்தில், அதிகமாக வளர்க்கலாம். கிடைத்த சின்ன இடத்தை பயன்படுத்த கிராதி பெட்டிகளை பயன்படுத்துங்கள்.

வீட்டினுள் தோட்டம்

வீட்டினுள் தோட்டம்

சிறு செடிகளை வீட்டினுள்ளேயே வளர்க்கலாம். வீட்டினுள்ளேயே பல செடிகளை வளர்க்கலாம். அவைகள் நன்றாக வளர, அதன் மீது சூரிய ஒளி படும் வகையில் ஜன்னல் இருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் தேவைப்படும் செடிகளை வீட்டிற்கு வெளியே வளர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Gardening Secrets For Urban Homes

These garden secrets for urban homes are a must-read for all gardening lovers. Our urban gardening tips can add that green touch to your home. Read on to know more urban gardening tips and tricks. 
Desktop Bottom Promotion