Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சமைக்கும் போது அதிக உப்பு அல்லது காரத்தை போட்டுடீங்களா? இதில் ஒன்றை சேருங்க... டேஸ்ட்டா மாறிடும்...!
சுவையான உணவுகள் கொடுக்கும் இன்பமே அலாதிதான். ஹோட்டல்களில் எவ்வளவுதான் சுவையான உணவுகள் கிடைத்தாலும் அது வீட்டில் கிடைக்கும் உணவிற்கு ஈடாகாது. ஆனால் வீட்டில் சமைக்கும் போது நாம் செய்யும் சில தவறுகள் உணவின் ஒட்டுமொத்த சுவையையும் கெடுத்துவிடும்.
வீட்டில் சமைக்கும் போது நாம் செய்யும் பொதுவான தவறுகளில் ஒன்று அதிகளவு காரம் அல்லது மசாலாப்பொருட்களை சேர்ப்பது. இது உணவின் சுவையைக் கெடுப்பதுடன் நம் நாக்கையும் பதம் பார்த்து விடுகிறது.

இதுபோன்ற சூழ்நிலைகளில் சில பொருட்களை உணவில் சேர்ப்பதன் மூலம் மசாலாவின் அளவை சமப்படுத்தி சுவையான உணவைப் பெறலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பால் பொருட்கள்
தயிர், பால் அல்லது மோர் சேர்ப்பது கறி மற்றும் குழம்புகளில் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கும் மசாலாவை நீர்த்துப்போகச் செய்வதற்கான ஒரு சிறந்த வழியாகும். இது கறிகளுக்கு செழுமையான அமைப்பையும் தனித்துவமான சுவையையும் சேர்க்க உதவுகிறது. நீங்கள் சேர்க்கும் தயிர் புளிப்பு சுவையுடையதாக இருக்கக்கூடாது.
மாவுச்சத்துள்ள உணவுகள்
அரிசி, ரொட்டி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்துள்ள உணவுகள் கறியின் காரம் மற்றும் அதிகளவு உப்பின் அளவை குறைக்க உதவும். ஒரு சிறிய பிரட் உருண்டை அல்லது உருளைக்கிழங்கை சேர்க்கவும், இது கறிகளின் கார சுவையை குறைக்க உதவும்.
தக்காளி
தக்காளி உங்களின் அதிக மசாலா சேர்க்கப்பட்ட உணவுகளுக்கு சிறிது இனிப்பு மற்றும் அமிலத்தன்மையை சேர்க்கலாம், இது கறியின் காரத்தை சமன் செய்ய உதவும். தக்காளியை அரைத்து குழம்பில் சேர்ப்பது கறியின் சுவைகள் மற்றும் அமைப்புகளை சமநிலைப்படுத்த உதவுகிறது.
சர்க்கரை
இது கேட்பதற்கு மிகவும் வினோதமாக இருக்கலாம், ஆனால் சர்க்கரை உங்கள் உணவின் சுவையை மீட்டெடுக்கும். ஒரு சிறிய அளவு சர்க்கரை சேர்ப்பது உங்கள் கறி அல்லது குழம்பில் இருக்கும் உள்ள காரத்தை மென்மையாக்க பயன்படுத்தலாம். இது கறியின் சுவையை மாற்றும், ஆனால் இது உணவிற்கு இனிப்பான சுவையை அதிகரிக்கும் என்பதால் அதனை குறைவாக பயன்படுத்த வேண்டும்.
எலுமிச்சைச்சாறு
எலுமிச்சை சாறு போன்ற சிட்ரஸ் பழச்சாறுகள் கறி மற்றும் குழம்பு வகைகளுக்கு நறுமணத்தை அளிக்கும் மற்றும் கறியின் காரத்தை வெகுவாகக் குறைக்கும். இது கறியின் சுவை மற்றும் அமைப்பையும் மென்மையாக்குகிறது மற்றும் சுவையை சமநிலைப்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications
