For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளியலறையை அலங்கரிக்க ஈஸியான சூப்பர் ஐடியா!!!

By Maha
|

Decor Bathroom.
வீட்டை அலங்கரிக்கும் போது வீட்டில் இருக்கும் குளியலறையையும் அலங்கரிப்போம். அதுவும் நமக்கு பிடித்தவாறு, குளியலறையில் இருக்கும் பொருட்களான துண்டு, சோப்பு மற்றும் மற்ற பொருட்களான கண்ணாடி, மேட் போன்றவற்றை பிடித்தவாறு வைத்தால், குளிக்க செல்லும் நமக்கு ஆசையாக இருப்பதோடு, ஒவ்வொரு முறையும் உள்ளே செல்லும் போதும் நிம்மதியான ஒரு சந்தோஷமும் இருக்கும். மேலும் அவ்வாறு அலங்கரிக்கும் போது, யார் வந்து பார்த்தாலும் உங்களது சுத்தமும், ரசனையும், ஆரோக்கியமும் தெரியுமளவு அலங்கரிக்க வேண்டும். அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

1. குளியலறையில் புதிய துண்டு மற்றும் திரைச்சீலைகளை வாங்கி அலங்கரிக்கலாம். அவ்வாறு வாங்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சியான கலரை பார்த்து வாங்க வேண்டும். அதுவும் அவை குளியலறையில் அடித்திருக்கும் பெயிண்ட் கலரில் இருந்தால் இன்னும் அழகாக இருக்கும். மேலும் அந்த துண்டுகளை கைக்கழுவும் இடத்திற்கு பக்கத்தில் ஒரு கம்பியை அமைத்து அதில் தொங்க விடலாம்.

2. கண்ணாடியானது கண்டிப்பாக குளியலறையில் இருக்கும். அந்த கண்ணாடியானது அழகாக இருக்க, கடைகளில் விற்கும் க்ளே வாங்கி, அதனை பூக்கள் போல செய்து, காய வைத்து, பின் அதில் பெயிண்ட் அடித்து அதன் முன் வைக்கலாம். மேலும் கண்ணாடியின் முனைகளில் க்ளேகளை நன்கு தடிமனாக சுருட்டி ஒட்டலாம். இது குளியலறையில் இருக்கும் கண்ணாடியை அலங்கரிக்க ஒரு சிறந்த ஈஸியான வழியாகும்.

3. கடைகளில் விற்கும் கலர் கலரான ஸ்டாண்டுகள் விற்கும். உதாரணமாக, பொம்மை, பூ போட்டவை என்று விற்கும். அது மிகவும் விலைக் குறைவாக தான் இருக்கும். வேண்டுமென்றால் கண்ணாடியால் ஆன ஸ்டாண்ட்-களை கூட வாங்கி, பெயிண்டிங் தெரிந்தால், அதில் கிளாஸ் பெயிண்டிங் செய்து கூட வைக்கலாம். முக்கியமாக கடைகளில் இருந்து வாங்கும் போது குளியலறையில் அடித்திருக்கும் பெயிண்டிற்கு ஏற்றவாறு வாங்க வேண்டும்.

4. சுத்தமான குளியலறையில் எப்போதும் ஒரு நல்ல வாசனை வந்தால் சந்தோஷமாக இருக்கும். ஆகவே அங்கு பூ ஜாடியை வைக்கலாம். அதுவும் அந்த ஜாடியை கைக்கழுவும் வாஷ் பேஷன் பக்கத்தில் வைத்து, தினமும் நல்ல வாசனையுள்ள அழகான மலர்களை வைத்து பராமரிக்கலாம். அவ்வாறு செய்வது கொஞ்சம் அல்ல, நிறையவே கடினம் தான், ஆகவே அதில் கடைகளில் விற்கும் பிளாஸ்டிக் மலர்களை வைக்கலாம். இதனால் குளியலறை அழகாக காட்சியளிக்கும்.

5. முக்கியமாக வாசனை சோப்புகள் அல்லது மெழுகுவர்த்தியை வாங்கி வைக்கலாம். இது மிகவும் எளிமையான ஐடியா. ஆகவே கடைகளில் விற்கும் வாசனை சோப்புகள் அல்லது மெழுகுவர்த்தியை வாங்கி வாஷ் பேஷின் பக்கத்தில் வைக்கலாம். இதனால் குளியலறை எப்போதுமே அழகாக இருப்பதோடு, நல்ல மணத்துடனும் இருக்கும்.

English summary

cheap ideas to decorate bathroom | குளியலறையை அலங்கரிக்க ஈஸியான சூப்பர் ஐடியா!!!

When it comes to bathroom, people only consider decorating it with essential items such as towels, mirror, multipurpose stand and mats to name a few. A neat and clean bathroom makes every visit comfortable. However, a well decorated bathroom can explain a lot about your personal choice, cleanliness and hygiene. If you have a big spacious bathroom, you can use these cheap ideas to decorate it.
Story first published: Thursday, July 12, 2012, 16:35 [IST]
Desktop Bottom Promotion