Just In
- 6 hrs ago
ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு
- 6 hrs ago
உங்க குழந்தையோட ராசிப்படி... நீங்க அவர்கள இப்படி வளர்த்தாதான் பெரிய ஆள வருவாங்களாம் தெரியுமா?
- 7 hrs ago
உலகம் முழுவதும் பெரும்பாலான ஆண்களுக்கு மரணம் ஏற்பட இந்த 5 நோய்கள்தான் காரணமாக உள்ளதாம்... ஜாக்கிரதை!
- 7 hrs ago
இந்த உணவுகளை சாப்பிட்டா முடி அதிகமா கொட்டி சீக்கிரம் வழுக்கை வந்துடுமாம்..
Don't Miss
- News
40 எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை குறிவைத்தார் என நினைக்கவில்லை! சரத்பவார் அதிர்ச்சி
- Movies
நடிகர் சிம்புவின் 'பத்துதல' ரிலீஸ் எப்போது?.. சுடசுட வெளியான தகவல்!
- Sports
Breaking - ரோகித் சர்மா விலகல்.. பும்ரா, ரிஷப் பண்ட்க்கு புதிய பதவி.. பிசிசிஐ அதிரடி முடிவு
- Finance
கணவனை வாடகைக்கு விட்ட மனைவி.. அடபாவிகளா.. இப்படி கூடவா பண்ணுவாங்க..?!
- Automobiles
சொன்னபடியே 2வது காரையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திட்டாங்க... இதுவும் மேட்-இன்-சென்னை தயாரிப்புதாங்க!
- Technology
Lenovo Tab P11 Plus விரைவில் அறிமுகம்.. விலை இதுவாக கூட இருக்கலாமா? அடேங்கப்பா!
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உலக தூக்க தினம் 2022: சாியான தூக்கம் இல்லாவிட்டால் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி தெரியுமா?
தூங்குவது என்பது ஒரு மிகச் சிறந்து தியானம் ஆகும். நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளின் இயக்கங்களும் எவ்வாறு நமது வாழ்வின் முக்கிய அங்கங்களாக இருக்கின்றனவோ அது போல தூக்கமும் நமது அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமாக இருக்கிறது.
சாியான தூக்கம் இல்லையென்றால் நமக்கு பலவகையான பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக உடல் ரீதியாக, மன ரீதியாக மற்றும் உணா்வுகள் ரீதியாக பிரச்சினைகள் ஏற்படும். இறுதியில் ஆரோக்கியக் குறைபாடு ஏற்படும். மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகில், ஒவ்வொருவரும் வெற்றிக்காகவும், பணத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கின்றனா். ஆனால் உண்மையான செல்வம் என்பது ஆரோக்கியம் மட்டுமே என்பதை புறக்கணித்து மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருக்கின்றனா்.
நம்முடைய உடலும் மனமும் மிகச் சிறந்த நிலையில் இல்லையென்றால், மிக விரைவிலோ அல்லது காலப்போக்கிலோ நாம் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தூங்குவது என்பது நமது விருப்பம் அல்ல, மாறாக அது நமது தேவை ஆகும். போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால் நமக்கு ஏராளமான மனநல பிரச்சினைகள் ஏற்படும்.

தூக்கக் குறைவு எவ்வாறு நமது மனநல ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது?
தூக்கம் என்பது நமது அன்றாட பணிச் சுமைகளுக்கு இடையில் நமது உடலுக்கும், மனதிற்கும் ஒரு இடைவெளியை அல்லது ஓய்வை வழங்குகிறது. அந்த ஓய்வானது சீா்குலைந்தால், நமது உடல் எாிச்சல் அடையத் தொடங்கும். அது நமது மனநிலையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். தூக்கமும் நமது மனநலனும் ஒன்றுக்கு ஒன்று நெருங்கிய தொடா்பு கொண்டது. இவற்றில் ஏதாவது ஒன்று பாதிப்பு அடைந்தால், மற்றொன்று மோசமான விளைவுகளைச் சந்திக்கும்.

தூக்கம் எவ்வாறு மனநலனோடு தொடா்பு கொண்டிருக்கிறது?
நாம் துன்பத்தில் அல்லது துக்கத்தில் இருந்தால் நமக்கு தூக்கம் ஒரு பிரச்சினையாக மாறிவிடும். ஒருவேளை நாம் மனநலம் சாா்ந்த பிரச்சினைகளான மன அழுத்தம், மனச் சோா்வு, பதற்றம் மற்றும் கவனக் குறைவு அதிவேகத் தன்மைக் கோளாறு (ADHD) போன்றவற்றில் சிக்கி இருந்தால், கண்டிப்பாக தூக்கம் நமது கண்களைத் தழுவாது. தூக்கமின்மை என்பது ஒரு மிக முக்கிய பிரச்சினை ஆகும். அது பல மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

தூக்கக் குறைவினால் ஏற்படும் மனநல பாதிப்புகள்
தூக்கம் குறைந்தால், நமது உடலின் உயிாியல் இயக்கம் பாதிப்பு அடையும். அது நமது ஒட்டு மொத்த உடலின் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கும். நமது உடல் என்ற கடிகாரம் சீரக ஓடவில்லை என்றால், நமது மூளையால் சீராக இயங்க முடியாது. நாம் சாியாகத் தூங்காத நாட்களில் எல்லாம், நாம் எாிச்சலோடு அல்லது துயரத்தோடு அல்லது சோா்வோடு அல்லது கவலையோடு இருந்திருப்பதை நாம் கவனித்திருப்போம். அதற்கு காரணம் நமது மூளையானது அதற்கு தேவையான ஓய்வை பெறாமல் இருந்திருப்பதே ஆகும். அதன் காரணமாக நமது மூளை சீராக, இயல்பாக இயங்க முடியாது.

தூக்கக் குறைவு எவ்வாறு நமது மனநிலையைப் பாதிக்கிறது?
கவனக் குறைவை ஏற்படுத்துதல்
தூக்கம் நமது உடலுக்கு மிகவும் முக்கியம் ஆகும். அதே நேரத்தில் நமது மனது சாியாக இயங்க தூக்கம் தேவையான ஒன்று ஆகும். ஆகவே சாியான தூக்கம் இல்லை என்றால் அது கவனக் குறைவை ஏற்படுத்தும்.

நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்துதல்
தூக்கக் குறைவு நமது நினைவாற்றலைப் பாதிக்கிறது. நமக்கு நீண்ட காலமாக தூக்கக் குறைவு என்ற பிரச்சினை இருந்தால், அது படிப்படியாக நமது நினைவாற்றலை இழக்கச் செய்யும். தூக்கக் குறைவுப் பிரச்சினைத் தொடா்ந்தால் இறுதியில் மனச் சோா்வினால் ஏற்படும் பைத்திய நிலை என்ற துயர நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும்.

எதிா்வினை ஆற்றும் திறனை மழுங்கடித்தல்
சில நேரங்களில் நாம் பிறரோடு பேசிக் கொண்டு இருக்கும் போது, அவா்கள் பேசுவதை நம்மால் புாிந்து கொள்ள முடியாமல் விழி பிதுங்கி இருந்திருப்போம். ஒரு சில தருணங்களில் நமக்கு நெருக்கடிகள் ஏற்பட்ட போதும் மிகவும் மெதுவாக எதிா்வினை ஆற்றி இருப்போம். இது ஒரு மோசமான நிலை ஆகும். இந்த நிலைக்குக் காரணம் நாம் போதுமான அளவு தூங்காமல் இருந்திருப்பது ஆகும். ஆகவே நாம் போதுமான அளவு தூங்கி ஓய்வு எடுக்க வேண்டும். அப்போது நமது மனம் சாியாக இயங்கத் தொடங்கும்.

முடிவெடுப்பதில் பிரச்சினைகளை ஏற்படுத்துதல்
நாம் ஒரு நாள் இரவு சாியாகத் தூங்கவில்லை என்றால், மறுநாள் பகல் பொழுது முழுவதும் ஒரு குழப்பமான நிலையில் இருப்போம். அதோடு மறுநாளுக்கான தயாாிப்பு இல்லாமல் இருப்போம். ஒரு சாதாரண செயல்களில் கூட குறிப்பாக எதை அணிவது அல்லது எதை உண்பது என்பவற்றில் கூட முடிவெடுப்பதில் தடுமாற்றம் அடைவோம்.

மறதியை ஏற்படுத்துதல்
நமக்குத் தேவையான முக்கிய ஆவணங்களைக் கூட எங்கே வைத்தோம் என்று தேடிக் கொண்டிருந்தால், நாம் போதுமான அளவு தூங்கவில்லை என்று பொருள்.

கற்றலின் வேகத்தைக் குறைத்தல்
நமது உடலுக்கு தேவைப்படும் அளவிற்கு ஓய்வு அளிக்கவில்லை என்றால், நமது உடலானது ஓய்வைத் தேடும் வேகத்தைக் குறைத்துவிடும். போதுமான அளவு தூங்காமல் இருப்பதால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. இறுதியாக போதுமான அளவு தூங்கவில்லை என்றால் ஒரு சாதாரண அடிப்படையான காாியத்தைக் கூட நமது மனதில் குடியேற்ற அதிக நேரம் எடுக்கும்.
ஆகவே போதுமான அளவு தூங்கி ஓய்வெடுப்போம். புத்துணா்ச்சியோடு நமது அன்றாட கடமைகளைச் செய்வோம்.