For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் இருந்தே வேலை செய்கிறீர்களா? டென்சன் ஆகாம இருக்க இத செய்யுங்க...

கொரோனா கால கட்டத்தில் தியானம் செய்வது உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றை அமைதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சில நேரங்களில் வாழ்க்கை மாற்றங்களில் உண்டாகும் இடையூறுகள் தியான நேரங்களை சற்று சவாலாக மாற்று

|

சமீபத்திய கோவிட் 19 தொற்று பரவும் காலம் மற்றும் அதனை ஒட்டிய ஊரடங்கு ஆகியவை தனிமனித வாழ்வில் ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. மனஅழுத்தம் மற்றும் பயம் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. இந்த கால கட்டத்தில் தியானம் செய்வது உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றை அமைதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சில நேரங்களில் வாழ்க்கை மாற்றங்களில் உண்டாகும் இடையூறுகள் தியான நேரங்களை சற்று சவாலாக மாற்றுகிறது. இந்த நேரத்தில் அரோமாதெரபி உங்களுக்கு உதவும்.

Working From Home? Meditate Your Mind And Body Through Essential Oils

அரோமாதெரபி அதாவது அத்தியாவசிய எண்ணெய்கள் கொண்டு செய்யப்படும் ஒருவித சிகிச்சை பல காலமாக தியானத்திற்கு உதவி வருகிறது. அரோமாதெரபி என்ற சிகிச்சையின் அடிப்படைத் தேவை அத்தியாவசிய எண்ணெயாகும். இந்த அத்தியாவசிய எண்ணெய்கள் பல்வேறு சிகிச்சை வழியாக உடலுக்குள் செலுத்தப்பட்டு இரத்த ஓட்டத்தில் கலந்து நமது உடலை, மனதை ஆன்மீக வழியில் பல்வேறு பாதிப்பில் இருந்து குணப்படுத்துகிறது. தியானம் மனதிற்கு அமைதியைத் தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தியானம்

தியானம்

தியானத்தில் ஈடுபடும் போது அவருடைய மூச்சுக்காற்று உள்ளே செல்வது மற்றும் வெளியில் வருவது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தியானம் செய்வதை பழகிக் கொள்வதற்காக ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். நிரந்தரமாக அதனை பின்பற்ற வேண்டும். எவ்வளவு நேரம் தியானம் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் கூட தியானம் செய்யலாம் ஆனால் அமைதியாக இருந்து தியானத்தை தொடர வேண்டும். மற்ற திறமைகளை போலவே தியானம் செய்யவும் நேரம் மற்றும் முயற்சி வேண்டும்.

மூச்சுப்பயிற்சி

மூச்சுப்பயிற்சி

தொடக்கத்தில் தியானம் செய்வதால் உங்கள் வாழ்க்கையில் சில இடையூறுகள் வந்தாலும், காலப்போக்கில் உங்கள் வாழ்க்கை சிறப்பாகவும் சந்தோஷமாகவும் மாறும் என்பது உண்மை. ஒரு மனிதன் தன்னையும் தன்னை சுற்றி இருப்பவர்களையும் அமைதியாகவும், நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ள தியானம் ஒரு சிறந்த கருவியாகும். தியானத்தின் அடிப்படை மூச்சுப்பயிற்சி. மேலும், அத்தியாவசிய எண்ணெய்களின் தேர்வு தியான அனுபவத்தை மேலும் சிறப்பானதாக மாற்றும். உங்கள் மனதையும் உடலையும் தியானத்திற்கு பழக்க சிறந்த அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்துங்கள்.

அத்தியாவசிய எண்ணெய்கள் மூலம் தியானம் செய்வதன் நன்மைகள்:

அத்தியாவசிய எண்ணெய்கள் மூலம் தியானம் செய்வதன் நன்மைகள்:

* மன அழுத்தத்தைப் போக்குகிறது. அமைதியை அதிகரிக்கிறது.

* பதட்டத்தைக் குறைகிறது. ஆற்றலை அதிகரிக்கிறது.

* மனதின் கவனத்தை ஊக்குவிக்கிறது.

* உங்கள் நடத்தையை மேம்படுத்துகிறது.

* இரத்த ஓட்டத்தை அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அத்தியாவசிய எண்ணெய்களின் சிறப்பு

அத்தியாவசிய எண்ணெய்களின் சிறப்பு

அத்தியாவசிய எண்ணெய்கள் சிறப்பானவை மற்றும் இவற்றில் ஒரு இயற்கை நறுமணம் உள்ளது. இவற்றில் அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினி, ஆன்டி-ஆக்ஸிடன்ட் , ஹைப்பர் டென்சன் எதிர்ப்பு போன்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த எண்ணெய் தியானத்தின் ஆற்றலை அதிகரிக்கிறது.

பிரகின்சென்ஸ் எண்ணெய்

பிரகின்சென்ஸ் எண்ணெய்

இந்த எண்ணெயின் ஊக்குவிக்கும் நறுமணம் மிகவும் இனிப்பாகவும், தேன் போலவும் இருக்கும். இது உடலுக்கு ரிலாக்ஸ் உணர்வைத் தரும் , சருமத்தை ஆரோக்கியமாக மாற்ற உதவும்.

சந்தன எண்ணெய்

சந்தன எண்ணெய்

உணர்வு ரீதியாக மற்றும் ஆன்மீக ரீதியாக காயங்களை குணப்படுத்த இந்த சந்தன எண்ணெய் பெரிதும் உதவும்.

வெட்டிவேர் எண்ணெய்

வெட்டிவேர் எண்ணெய்

தியானத்தின் மீது கவனம் இல்லாமல் இருப்பவர்களை கவனம் சிதறாமல் தடுக்க இந்த வெட்டிவேர் எண்ணெய் உதவும்.

லாவெண்டர் எண்ணெய்

லாவெண்டர் எண்ணெய்

அரோமாதெரபி சிகிச்சையில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் எண்ணெய் தான் லாவெண்டர் எண்ணெய். மனதை ரிலாக்ஸ் செய்ய இந்த எண்ணெய் உதவுகிறது.

மனோரஞ்சிதம் (Ylang Ylang) எண்ணெய்

மனோரஞ்சிதம் (Ylang Ylang) எண்ணெய்

தியானத்திற்கு மிகுந்த நன்மை தரும் ஒரு வகை எண்ணெய் இது. மனஅழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளித்து, எரிச்சல் உணர்வைக் குறைக்கும் தன்மை இந்த எண்ணெய்க்கு உண்டு.

கோவிட் -19 காலத்தில் சுயபராமரிப்பு நடத்தைகளைப் பின்பற்றுவது எப்படி?

கோவிட் -19 காலத்தில் சுயபராமரிப்பு நடத்தைகளைப் பின்பற்றுவது எப்படி?

இந்த அளவிற்கு நாளை என்ன நடக்கும் என்று அறிய முடியாத காலகட்டத்தில் மனஅழுத்தம் ஏற்படுவது இயற்கை. ஒரு சில குறிப்புகளை முயற்சித்து பின்பற்றுவதால் அவற்றை தடுக்க முடியும்.

* குறைவாக ஆனால் ஊட்டச்சத்து மிக்க சமச்சீர் உணவை உட்கொள்ளவும்.

* நிறைய தண்ணீர் பருகவும்

* குறைந்தது ஒருமணி நேரம் தியானம் செய்யவும்.

* அவ்வப்போது ஆழமாக மூச்சை இழுத்து வெளியில் விடவும்.

* உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளவும்.

* வீட்டில் இருக்கும்போது ஒரு வழக்கமான அட்டவணையை பின்பற்றவும்.

* உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும், அவ்வப்போது எதாவது ஒரு விளையாட்டு விளையாடுங்கள்.

* வீட்டில் இருந்தபடியே உங்கள் முகத்தையும் , கூந்தலையும் அழகு செய்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Working From Home? Meditate Your Mind And Body Through Essential Oils

Essential Oils, through different modes of administration or entering into the bloodstream, heal our body spiritually, mentally and physically.
Desktop Bottom Promotion