For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பி.சி.ஓ.டி மற்றும் பி.சி.ஓ.எஸ் இருப்பவர்கள் எந்த மாதிரியான உடற்பயிற்சியை செய்யணும்?

பி.சி.ஓ.எஸ் பிரச்சனைகளுக்கு இடையே இருக்கக்கூடிய நல்ல செய்தி என்னவென்றால், சரியான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சியைப் பின்பற்றுவதன் மூலம் இந்த அறிகுறிகளை எளிதில் மிக சுலபமாக நிர்வகித்திட முடியும்.

|

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசிஸ் (பி.சி.ஓ.டி) என்பவை, எப்போதும் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான பல அறிகுறிகளை கொண்டிருக்கும். முடி உதிர்தல், முகப்பரு, எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, கருவுறுதலில் பிரச்சனைகள் என பெண்களை உடல் ரீதியாக பாதிப்பது மட்டுமல்லாது அவர்களின் மன நலனுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடும். ஆனால் இத்தகைய பிரச்சனைகளுக்கும் இடையேயும் இருக்கக்கூடிய நல்ல செய்தி என்னவென்றால், சரியான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சியைப் பின்பற்றுவதன் மூலம் இந்த அறிகுறிகளை எளிதில் மிக சுலபமாக நிர்வகித்திட முடியும் என்பது தான்.

Why Women Suffering From PCOS And PCOD Should Exercise

உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டின் ஒருங்கிணைந்த கலவையானது நோயின் பக்க விளைவுகளை மட்டுமே குறைத்திடும். இருந்தாலும், அவை ஒட்டுமொத்த உடலின் சுகாதார நிலையை மேம்பட செய்திடும். பி.சி.ஓ.டி மற்றும் பி.சி.ஓ.எஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடற்பயிற்சி ஏன் முக்கியம் என்பதை தான் இந்த கட்டுரையில் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

MOST READ: ஆரோக்கியமான வழியில் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இத தினமும் செய்யுங்க போதும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் எடையை குறைக்க உதவும்

உடல் எடையை குறைக்க உதவும்

பெண்களின் எடை அதிகரிக்க ஹார்மோன் ஏற்றத்தாழ்வு தான் முக்கிய காரணமாக அமைந்திடுகிறது. பெரும்பாலும் வயிற்றுப் பகுதியைச் சுற்றி தான் கொழுப்பு சேரக்கூடும். இது டைப் 2 நீரிழிவு மற்றும் இதய பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்க செய்திடும். ஆரோக்கியமான உணவை உண்ணுதல் மற்றும் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதன் மூலம், ஒருவர் உடல் எடையை சுலபமாக குறைத்து, சீராக பராமரித்திட முடியும்.

மனநிலையை சீராக்க உதவும்

மனநிலையை சீராக்க உதவும்

பி.சி.ஓ.டி மற்றும் பி.சி.ஓ.எஸ் என்பது பெரும்பாலும் ஒரு நபரின் உணர்ச்சியை பாதித்து, அவர்களது நல்வாழ்வை பாதிக்கச் செய்யும். இந்த சீரற்ற ஹார்மோன் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், மனச்சோர்வு போன்ற மனநல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மனநிலைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதோடு, எதிர்மறை எண்ணங்களை முறையாக நிர்வகித்திட உதவும்.

கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்

கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்

உடற்பயிற்சி செய்வது உங்கள் அறிகுறிகளை எளிதாக்கவும், நல்ல தரமான தூக்கத்தை ஊக்குவிக்கவும், மன அழுத்தத்தின் அளவைக் குறைக்கவும் உதவிடும். இவை அனைத்தும் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவும். எந்தவொரு உடல் செயல்பாடுகளிலும் ஈடுபடுவது உடலில் ஆண்ட்ரோஜன் அளவைக் குறைத்து, கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

எந்தெந்த உடற்பயிற்சிகளை செய்யலாம்?

எந்தெந்த உடற்பயிற்சிகளை செய்யலாம்?

தினமும் 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமாக இருக்கவும், ஆயுளை நீட்டிக்கவும் உதவக்கூடிய எளிதான வழிகளில் ஒன்று. இது நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும், உடல்நிலையை மேம்படுத்தவும் உதவுகிறது. பி.சி.ஓ.எஸ் மற்றும் பி.சி.ஓ.டி போன்ற பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய குறிப்பிட்ட உடற்பயிற்சி உள்ளது. நீங்கள் சலிப்படையாமல், ஒவ்வொரு நாளும் செய்யக்கூடிய பயிற்சி அல்லது உடல் செயல்பாடுகளை முறையாக கவனித்து கண்டுபிடிக்க வேண்டும். அந்த வகையில், உங்களுக்கு உதவக்கூடிய மூன்று சிறந்த செயல்பாடுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

நடை பயிற்சி

நடை பயிற்சி

உங்கள் உடற்பயிற்சி செய்வதிலோ அல்லது எடை உயர்வதில் அதிக பிரச்சனை இல்லை என்றால், ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்களுக்கு நடக்கலாமே. நிச்சயம் இது உதவும். நீங்கள் பூங்காவில் நடக்கலாம் அல்லது டிரெட்மில்லில் கூட முயற்சி செய்யலாம். சிறப்பான முடிவுகளை பெற வேண்டுமென்றால், நடை பயிற்சியில் சிறு மாற்றங்களை கொண்டு வந்தால் போதுமானது. அதாவது, 5 நிமிட வேகமான நடைபயிற்சி அல்லது ஜாக்கிங்கைத் தொடர்ந்து, 5 நிமிடங்கள் மிதமான வேகத்தில் நடக்கவும். மலைகள் மற்றும் தட்டையான மேற்பரப்புகள் போன்ற இடங்களுக்கு உங்கள் நடைபயிற்சியை மாற்றுவதன் மூலமும் சிறந்த மாற்றத்தை உணரலாம்.

யோகா

யோகா

ஹார்மோன் சுகாதார நிலைமைகளால் அவதிப்படும்போது ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், யோகா பயிற்சி செய்வது மற்றொரு சிறந்த வழியாகும். அனைத்து வகையான நாள்பட்ட நோய்களின் அறிகுறிகளை நிர்வகிக்க யோகா சிறந்ததாக கருதப்படுகிறது. யோகாவுடன் தியானத்தையும் சேர்ப்பது மனதை அமைதிப்படுத்த பெரிதும் உதவும்.

பளு தூக்குதல்

பளு தூக்குதல்

பளு தூக்குதல் உடலில் கூடுதல் கலோரிகளை எரிக்கவும், கிலோவை வேகமாக குறைக்கவும் ஒரு சிறந்த வழியாகும். ஒரு வாரத்தில் இரண்டு முறை அயர்ன் பம்ப் செய்வது உடலில் இருந்து கொழுப்பைக் குறைக்க போதுமானதாக கருதப்படுகிறது. இந்த பயிற்சியை மெதுவாக செய்ய தொடங்கலாம். இதன் மூலம் சரியான நேரத்தில் உடல் எடையை அதிகரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Women Suffering From PCOS And PCOD Should Exercise

Why women suffering from PCOS and PCOD should exercise? Read on to know more...
Desktop Bottom Promotion