Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
நம் முன்னோர்கள் பாலியல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த இலையை தான் சாப்பிட்டாங்களாம்..
கொய்யாப்பழத்தின் இலைகளாது பல நன்மைகளை வழங்கும். இப்போது கொய்யா இலைகளை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
நிறைய பேருக்கு கொய்யாப்பழம் ரொம்ப பிடிக்கும். கொய்யாப்பழம் மிகவும் சுவையானது மட்டுமின்றி, ஏராளமான சத்துக்களை உள்ளடக்கிய ஆரோக்கியமான பழமும் கூட. சொல்லப்போனால் இந்த கொய்யாப்பழம் ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது. மேலும் ஆப்பிளை விட விலை குறைவானது என்பதால், ஏழை எளியோரும் எளிதில் வாங்கி சாப்பிடலாம். இந்த கொய்யாப்பழம் மட்டுமின்றி, அதன் இலைகளும் எண்ணற்ற நன்மைகளை வழங்குகின்றன என்பது தெரியுமா?

முன்பெல்லாம் நம் முன்னோர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருந்ததற்கு முக்கிய காரணம், இம்மாதிரியான இலைகளை அவ்வப்போது உட்கொண்டு வந்ததும் தான். கொய்யாப்பழத்தின் இலைகள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பெரிதும் உதவும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் கொய்யாப்பழத்தின் இலைகளாது கொலஸ்ட்ராலைக் குறைப்பது முதல் உடல் எடையைக் குறைப்பது வரை பல நன்மைகளை வழங்கும். இப்போது கொய்யா இலைகளை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

எடை இழப்பிற்கு உதவும்
உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு சிறந்த பழம் என்றால் அது கொய்யாப்பழம். ஒரு மிதமான அளவிலான கொய்யாப்பழத்தில் 37 கலோரிகளே உள்ளன. மேலும் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகிறது. முக்கியமாக இந்த பழம் பசியுணர்வைக் குறைக்க உதவுவதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இதை ஸ்நாக்ஸ் வேளையில் உட்கொள்ளலாம். அதுவும் ஒரு கப் கொய்யா இலை டீயைக் குடித்து வந்தால், உடல் எடையை குறைக்கும் இலக்கை மிக விரைவாக அடையலாம்.

செரிமான பிரச்சனைகள் நீங்கும்
கொய்யா இலைகளில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், செரிமான மண்டலத்தில் உள்ள தேவையற்ற நுண்ணுயிர்களை கொல்ல உதவுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இலைகள் குடலியக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி பிரச்சனையைக் கொண்டவர்கள் கொய்யா இலைகளை தினமும் உட்கொண்டால், அதிலிருந்து விடுபடலாம். அதுமட்டுமின்றி, கொய்யா இலையைக் கொண்டு தயாரிக்கப்படும் டீ வயிற்றில் உள்ள வாயுவை முழுமையாக வெளியேற்றிவிடும்.

சருமம் மற்றும் தலைமுடி பிரச்சனைகள் நீங்கும்
உங்களின் சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியாமக இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு கொய்யா இலையை மென்று சாப்பிடுங்கள். அதுவும் கொய்யா இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால், சருமத்திற்கு வேண்டிய வைட்டமின் சி மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைக்கும். இவை சருமத்தில் ப்ரீ ராடிக்கல்களால் முடியின் வேர்க்கால்கள் பலவீனமாவதைத் தடுப்பதோடு, கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் மற்றும் பிம்பிள் ஆகியவற்றையும் தடுக்கிறது. முக்கியமாக கொய்யா இலை முதுமையின் அறிகுறிகளைத் தடுக்கிறது.

கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது
சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது அதிகமான கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவாகும். எனவே இவை இரண்டையும் எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை இரத்த சர்க்கரை அளவு அதிகம் இருந்தால், தினமும் கொய்யா இலையைக் கொண்டு டீ தயாரித்துக் குடியுங்கள். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. அதோடு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவி புரிந்து, இதயம் மற்றும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
நோயெதிர்ப்பு சக்தியை இயற்கை வழியில் அதிகரிக்க வேண்டுமானால், கொய்யா இலைகளை தினமும் மென்று சாப்பிடுங்கள் அல்லது கொய்யா இலையைக் கொண்டு டீ தயாரித்து குடியுங்கள். இப்படி செய்வதன் மூலம், அந்த இலைகளில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸின்ட்டுகள் உடலுக்கு கிடைத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதுடன், தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அழிக்கிறது.

இனப்பெருக்க ஆரோக்கியம் மேம்படும்
கொய்யா இலைகள் பாலியல் ஆரோக்கியம் மற்றும் கருவுறுதலை மேம்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இருவரின் இனப்பெருக்க ஆரேக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அதில் ஆண்கள் கொய்யா இலைகளை உண்பதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கையும், தரமும் அதிகரித்து, கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும். குழந்தை பிறப்பதில் சிரமத்தை சந்திப்பவர்கள், தினமும் கொய்யா இலைகளை உண்பதன் மூலம் நற்பலனைப் பெற வாய்ப்புள்ளது. பெண்கள் கொய்யா இலைகளை உண்பதன் மூலம், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் கடுமையான வயிற்று வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். எனவே பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கொய்யா இலைகளை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.

கொய்யா இலையைக் கொண்டு டீ தயாரிப்பது எப்படி?
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீரை ஊற்றி, அதில் 5-6 கொய்யா இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீரானது 1/3 பங்கு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, ஒரு நாளைக்கு 2 முறை குடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications