For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஷச்செடி என்று ஒதுக்கப்படும் அரளிச்செடி ஏன் நெடுஞ்சாலை முழுக்க அரசாங்காத்தாலேயே வளர்க்கப்படுகிறது தெரியுமா?

நமது இந்திய கலாச்சாரத்தில் பூக்கள் என்பது அனைவரின் வீட்டிலும் பயன்படுத்துவதாகும். எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பூக்கள் என்பது அவர்களின் வீட்டில் அத்தியாவசியமான ஒன்றாகும்.

|

நமது இந்திய கலாச்சாரத்தில் பூக்கள் என்பது அனைவரின் வீட்டிலும் பயன்படுத்துவதாகும். எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பூக்கள் என்பது அவர்களின் வீட்டில் அத்தியாவசியமான ஒன்றாகும். எந்தவொரு கடவுள் வழிபாடாக இருந்தாலும் பூக்கள் இல்லாமல் நிறைவுபெறாது. ஆனால் அனைத்து பூக்களும் கடவுள் வழிபாட்டுக்கோ, அன்றாடத் தேவைகளுக்கோ உகந்ததாக இருப்பதில்லை.

Why Oleander Is Planted in Highways in Tamil

அரளிப் பூக்கள் விநாயகர் மற்றும் சிவபெருமானுக்கு மிகவும் பிரியமான மலராக இருக்கிறது. பல சிவத்தலங்களில் அரளிச்செடிகளை நாம் பார்க்கலாம். ஆனால் அரளிப்பூக்களை பெண்கள் தலைக்கு வைக்க முடியாது. ஆன்மீகத்துடன் தொடர்புடைய மலராக இருந்தாலும் அதன் நச்சுத்தன்மை காரணமாக பலரும் அதனை புறக்கணிக்கிறார்கள். விஷச்செடியாகவே இருந்தாலும் அதனால் பல நன்மைகள் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெடுஞ்சாலைகளில் அரளிப்பூக்கள்

நெடுஞ்சாலைகளில் அரளிப்பூக்கள்

அரளிப்பூக்களில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது, ஆனால் நெடுஞ்சாலைகளின் நடுவில் அரளிப்பூக்கள் இருப்பது ஏன் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? நெடுஞ்சாலைகளில் பயணம் மேற்கொள்ளும் போது பச்சை பசேலென்ற செடிகள் வழிநெடுக இருப்பதை பார்த்திருக்கலாம், அதனை இன்னும் கவனித்துப் பார்த்தால் அவை செவ்வரளியாக இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். செவ்வரளிச் செடிகள் நெடுஞ்சாலைகளில் வைத்திருப்பதற்கு பின் பல விஞஞான காரணங்கள் உள்ளது.

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு

தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் நெடுஞ்சாலைகளில் காற்றின் தரம் மோசமாக இருக்கும். வாகனங்களால் ஏற்படும் புகைநச்சு, கார்பன் மாசுக்கள் போன்றவை, காற்றை அசுத்தமாக்குவதுடன், சாலையில் பயணிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்தும். அரளிச் செடிகளின் இலைகள் மற்றும் மலர்கள், காற்றின் மாசுக்களை, கார்பன் துகள்களை காற்றிலிருந்து நீக்கி, காற்றை சுத்தப்படுத்தும் சக்தி கொண்டவை.அதனால் காற்று மாசுக்கள் நீங்கிய சுத்தமான காற்றை பயணிப்பவர்கள் சுவாசிக்க முடிகிறது.

மண் அரிப்பைத் தடுக்கும்

மண் அரிப்பைத் தடுக்கும்

காற்றையும் சுத்திகரிப்பதுடன் அரளிச்செடிகள் மண் அரிப்பைத் தடுக்கும் ஆற்றல் மிக்கவை. எனவேதான், சாலைகளின் இருபுறமும், இந்தச் செடிகளை வளர்த்து வருகின்றனர். அதிக இரைச்சல் தரும் தொழிற்சாலைகளின் இயந்திர சத்தங்களை கிரகித்துக் கொண்டு, அவற்றின் சத்தத்தை குறைக்கும் ஆற்றல்மிக்கவை அரளிச்செடிகள். நெடுஞ்சாலைகளில் ஏற்படும் வாகன சத்தத்தையும், குறைக்கும் இயல்புமிக்கவை இவை.

எப்படி வளர்க்க வேண்டும்?

எப்படி வளர்க்க வேண்டும்?

அரளிச் செடியின் இலைகளும், பூக்களும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால் வீடுகளில் குழந்தைகள் கையில் கிடைக்காதபடி வளர்க்க வேண்டும். வீட்டின் முன்புறமோ அல்லது பின்புறமோ அரளிச் செடிகளை வளர்த்துவந்தால் காற்று மாசு நீங்கி காற்று சுத்தமாகும். மேலும், அதிக இரைச்சலை கிரகித்து, ஒலி அளவையும் கட்டுப்படுத்தும். எல்லா சீதோஷ்ண நிலைகளிலும், எல்லா காலங்களிலும் வளரக்கூடிய இது தானாகவே வளரக்கூடியது. இதில் பல வண்ணங்கள் இருந்தாலும் செவ்வரளி மலர்களே அதிக ஆற்றல் வாய்ந்தவை. அரளி செடியின் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இதன் வேரின் பட்டையை தூளாக்கி 100-200 மி.கி அளவில் உணவிற்குப் பிறகு கொடுத்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் அதிக அளவிலான சிறுநீரை வெளியேற்றுவதன் மூலம் சிறுநீரக பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. இது இதயம் தொடர்பான பிற கோளாறுகளையும் குணப்படுத்துகிறது.

பல் துலக்கப் பயன்படுகிறது

பல் துலக்கப் பயன்படுகிறது

இந்தியாவில், சில தாவரங்களின் வேர்கள் மற்றும் மெல்லிய கிளைகளை பல் துலக்குவதற்கு பலர் விரும்புகிறார்கள். வெள்ளை ஓலியாண்டரின் கிளையை பல் துலக்க பயன்படுத்தலாம்.

இது தளர்வான பற்களைக் கூட பலப்படுத்துகிறது.

மூலத்தை குணப்படுத்துகிறது

மூலத்தை குணப்படுத்துகிறது

அரளிச்செடியின் வேரை நன்கு அரைத்து அதனை குளிர்ந்த நீரில் கலந்து புண்கள் மீது தேய்க்கலாம். காயங்கள் தளர்ந்து இருக்கும்போது தடவ வேண்டும். இது பைல்ஸ் புண்களை குணப்படுத்துகிறது.

மூட்டுவலி

மூட்டுவலி

அரளிச்செடியின் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவவும். புண்கள் மற்றும் காயங்களைக் குணப்படுத்த அரளி இலைகளை கொதிக்க வைத்த தண்ணீரை பயன்படுத்தினால் விரைவில் குணமடையும்.

பேன்களை விரட்ட

பேன்களை விரட்ட

தலையில் பேன் இருப்பது கடுமையான தலை அரிப்புக்கு வழிவகுக்கும். இதனை குணப்படுத்த செவ்வரளி பூக்களை பயன்படுத்தலாம். உறங்கும்போது, தலையில் செவ்வரளிப்பூக்களை வைத்துக்கொண்டு தூங்கினால் விரைவில் பேன் தொல்லையிலிந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Oleander Is Planted in Highways in Tamil

Read to know why red oleander mostly in the road dividers.
Desktop Bottom Promotion