Latest Updates
-
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க
ஏன் நமக்கு மதிய நேரத்துல தூக்கம் வருதுன்னு தெரியுமா?
நம்மில் பெரும்பாலானோர் நாளின் முதல் பாதி நன்கு சுறுசுறுப்பாக வேலை செய்வோம். ஆனால் மதிய உணவு முடிந்த பின், அதுவும் 2 முதல் 4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், நம்மை அறியாமல் தூக்கத்தால் சொக்கி விழுவோம்.
மதிய வேளையில் தூக்கமா வருதா? அதுவும் மதிய சாப்பாடு முடிஞ்சதுன்னா தூக்கத்தை கட்டுப்படுத்தவே முடியலையா? அது ஏன்னு எப்பயாவது யோசிச்சுருக்கீங்களா? நம்மில் பெரும்பாலானோர் நாளின் முதல் பாதி நன்கு சுறுசுறுப்பாக வேலை செய்வோம். ஆனால் மதிய உணவு முடிந்த பின், அதுவும் 2 முதல் 4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், நம்மை அறியாமல் தூக்கத்தால் சொக்கி விழுவோம்.

அதிலும் அலுவலகத்தில் பார்த்தால், மதிய வேளையில் பலரது தலையும் குனிந்த நிலையில் தான் இருக்கும். சிலர் ஏதாவது பொய் காரணங்களை சொல்லியாவது குட்டி தூக்கத்தைப் போட்டுவிடுவார்கள். மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவது நல்லது தான். ஆனால் இரவு நேரத்தில் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் அளவால், நம்மால் மதிய தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. குறிப்பாக ஆண்களால் குட்டித் தூக்கம் போடாமல் இருக்க முடியாது. அது ஏன் என்று தெரியுமா? காரணத்தை அறிய இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

மதிய வேளையில் தூக்கம் வருகிறதா?
ஆராய்ச்சியாளர்கள் பகல் வேளையில் ஒரு குழு ஆண்களின் மூளையை பல முறை ஸ்கேன் செய்தனர். அப்போது ஆண்கள் பொதுவாக மதியம் 2 மணிக்கு பிறகு சோர்வடைவதை உணர்கிறார்கள் என்ற உண்மையைக் கண்டறிந்தனர்.

என்ன காரணமாக இருக்கும்?
வெகுமதி செயலாக்கத்துடன் தொடர்புடைய மூளையின் பகுதிகளில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களினால் மனநிலைகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். பொதுவாக மூளையின் வெகுமதி-செயலாக்க பகுதிகளின் செயல்பாடு காலையிலும், மாலையிலும் உச்சத்தில் இருக்கும். ஆனால் மதியம் 2 மணிக்கு பிறகு அது குறைகிறது.

ஆய்வாளர்கள் என்ன செய்தனர்?
ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்களின் மூளை ஸ்கேன் தரவை ஒப்பிட்டுப் பார்த்தனர். அதோடு அவர்கள் அனைவருக்கும் சூதாட்டம் தொடர்பான வேலைகள் வழங்கப்பட்டது. இதே வேலையை காலையில் 10 மணியளவில் ஒருமுறையும், மதிய வேளையில் 2 மணியளவில் ஒரு முறையும், மீண்டும் மாலையில் 7 மணிக்கும் கொடுக்கப்பட்டது.

கண்டுபிடித்தது என்ன?
இந்த ஆய்வின் முடிவில், மூளையில் இடது புட்டமென் செயல்பாடு பிற்பகல் 2 மணியளவில் கணிசமாகக் குறைந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதனால் தான் மதிய வேளையில் ஆண்கள் மிகவும் சோம்பேறியாகவும், தூக்கம் வருவது போன்ற உணர்வையும் பெறுகிறார்கள்.

இந்த ஆய்வு எவ்வாறு உதவுகிறது?
இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களின் நோக்கமே தூக்க கலக்கம் மற்றும் மனச்சோர்வு உள்ளவர்களுக்கு உதவுவதற்கு பல்வேறு வழிகளை தெரிந்து கொள்வதற்கு தான். ஆனால் இந்த ஆய்வு பல ஆண்களுக்கும் உதவியாக இருந்திருக்கும். ஏனெனில் இந்த ஆய்வால் பல ஆண்கள் தங்களின் முக்கிய பணிகளை மதியம் 1 மணிக்கு முன் அல்லது பிற்பகல் 3 மணிக்கு பிறகு சிறப்பாக செய்ய முடியும் என்பதை தெரிந்திருப்பார்கள். என்ன நண்பர்களே! சொன்னது சரிதானே?

மதியம் குட்டித் தூக்கம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
* மதிய வேளையில் குட்டித் தூக்கம் போதுவதால் இதய ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அல்லது இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் மதிய நேரத்தில் தூங்குவது நல்லது.
* சர்க்கரை நோய், பிசிஓடி, தைராய்டு போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்கள், மதிய வேளையில் குட்டித் தூக்கம் போடுவதால் ஹார்மோன்கள் சமநிலையில் இருக்க உதவி புரியும்.
* செரிமானம் மேம்பட்டு, மலச்சிக்கல், குடல் சம்பந்தமான பிரச்சனைகள் தடுக்கப்படும்.
* தினமும் ஜிம் செல்பவர்கள் மதியம் குட்டித் தூக்கம் போடுவதால், தசைகளில் ஏற்பட்ட காயங்கள் விரைவில் குணமாகும்.

குறிப்பு
* குட்டித் தூக்கம் என்பது 10-30 நிமிட தூக்கம் தான். குழந்தைகள், வயதானவர்கள், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுமானால் 90 நிமிடம் தூங்கலாம்.
* படுக்கையில் தூங்குவதாக இருந்தால், இடது பக்கமாக திரும்பியே தூங்க வேண்டும். அலுவலகத்தில் இருந்தால், மேஜையின் மீது தலையை வைத்து குனிந்து தூங்கலாம்.
* குட்டித் தூக்கத்தை மதியம் 1-3 மணிக்குள் மேற்கொள்வதே நல்லது.



Click it and Unblock the Notifications