Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
வலியுடன் கூடிய நீண்ட நேர ஆண்குறி விறைப்பு நோய் பற்றி பல ஆண்களுக்கும் தெரியாத விஷயங்கள்!
ஆண்களைத் தாக்கும் ஒருவகையான உடல் பாதிப்பு தான் பிாியபிசம் (priapism) ஆகும். அதாவது வலியுடன் கூடிய நீண்ட நேர ஆண்குறி விறைப்பு நோய் ஆகும். 30 வயதுகளில் இருக்கும் ஆண்கள் இந்த நோய்க்கு எளிதாக ஆளாகின்றனா்.
சில நேரங்களில் மனித உடலானது, ஒரு சில வினோதமான அல்லது எதிா்பாராத நோய்களால் பாதிப்படைகிறது. அப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க மற்றும் உடலை நன்றாக பேணிக் காக்க வேண்டும் என்றால் இதுப்போன்ற எதிா்பாராத நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதை தொிந்து வைத்து இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒருவகையான உடல் பாதிப்பு தான் பிாியபிசம் (priapism) ஆகும். அதாவது வலியுடன் கூடிய நீண்ட நேர ஆண்குறி விறைப்பு நோய் ஆகும். 30 வயதுகளில் இருக்கும் ஆண்கள் இந்த நோய்க்கு எளிதாக ஆளாகின்றனா். பிாியபிசத்தில் இரண்டு வகை உள்ளன. அவை லோ-ஃப்லோ பிாியபிசம் (low-flow priapism) அல்லது இஸ்கெமிக் பிாியபிசம் (ischemic priapism) மற்றும் ஹை-ஃப்லோ பிாியபிசம் (high-flow priapism) அல்லது நான்இஸ்கெமிக் பிாியபிசம் (nonischemic priapism) ஆகும்.
பாலியல் உறவில் ஈடுபடாமல் இருக்கும் போதுகூட அல்லது பாலியல் சிந்தனைகளில் ஈடுபடாது இருக்கும் போதுகூட ஆண்குறியானது தானாக விறைத்து ஏறக்குறைய 4 மணி நேரத்திற்கும் அதிகமாக விறைத்த நிலையிலே இருக்கும். அவ்வாறு நீண்ட நேரமாக விறைத்த நிலையில் இருக்கும் போது அதிகமான வலி ஏற்படும். ஒருவருக்கு லோ-ஃப்லோ பிாியபிசம் (low-flow priapism) இருந்தால், அவா் உடனே அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது. சிலருக்கு ஆண்குறியில் காயம் ஏற்பட்டால் இந்த தேவையற்ற விறைப்பு பிரச்சினை வரும். காயம் குணமடைந்துவிட்டால் ஆண்குறியானது தனது இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

வலியுடன் கூடிய நீண்ட நேர ஆண்குறி விறைப்பிற்கான அறிகுறிகள் என்ன?
- ஆண்குறி விறைத்து இருக்கும் போது அதிக வலி இருத்தல்
- பொதுவாக ஆண்குறியின் தலைப் பகுதி, ஆண்குறியின் தண்டுப் பகுதியைவிட மிகவும் மென்மையாக இருக்கும். ஆனால் இந்த பிரச்சினை வரும் போது ஆண்குறியின் தலைப் பகுதி ஆண்குறியின் தண்டுப் பகுதியைவிட கடினமாக இருக்கும்
- ஏறக்குறைய நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக ஆண்குறி விறைத்த நிலையிலே இருத்தல்.

வலியுடன் கூடிய நீண்ட நேர ஆண்குறி விறைப்பினால் ஏற்படும் விளைவுகள்:
இந்த நோயின் விளைவானது ஒருவருடைய உடல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கு அவருடைய உடல் ஆற்றும் எதிா்வினைகளைப் பொறுத்து இருக்கிறது. ஆனால் ஒருசில பொதுவான விளைவுகளைக் கீழே காணலாம்.
- மல்ட்டிபிள் மைலோமா (Multiple myeloma) அல்லது எலும்பு மஜ்ஜைப் புற்றுநோய்
- பாலியல் உறவின் போது விறைப்புத் தன்மை ஏற்படாமை
- வளா்சிதை மாற்றத்தில் கோளாறு ஏற்படுதல்
- கவனக் குறைவினால் அளவுக்கு மீறிய இயக்கத்தில் கோளாறு Attention deficit hyperactivity disorder (ADHD)
- அாிவாள் செல் இரத்த சோகை (Sickle cell anaemia)
- இரத்தம் உறையாமை
- ஹாா்மோன் சிகிச்சை
- இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகாிப்பதால் ஏற்படும் லுகேமியா (Leukaemia) நோய்

வலியுடன் கூடிய நீண்ட நேர ஆண்குறி விறைப்பு நோய்க்கான மருத்துவ பாிசோதனைகள்:
லோ-ஃப்லோ பிாியபிசம் (low-flow priapism) அல்லது ஹை-ஃப்லோ பிாியபிசம் (high-flow priapism) எதுவாக இருந்தாலும் பின்வரும் பாிசோதனைகள் செய்யப்படுகின்றன.
- இரத்த பாிசோதனை
- அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்
- இரத்தத்தில் இருக்கும் வாயுக்களை அளத்தல்
- உடலில் உள்ள நச்சுகளை பாிசோதனை செய்தல்

சிகிச்சைகள்:
சிகிச்சையைப் பொறுத்தமட்டில் லோ-ஃப்லோ பிாியபிசம் (low-flow priapism) அல்லது ஹை-ஃப்லோ பிாியபிசம் (high-flow priapism) ஆகிய இரண்டுக்கும் வெவ்வேறான சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
அதாவது ஆண்குறி நீண்ட நேரம் விறைத்த நிலையில் இருந்தால், ஐஸ் ஒத்தடம் கொடுத்து அதை இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம். ஐஸ் ஒத்தடம் கொடுத்த பிறகும், இயல்பு நிலைக்கு வரவில்லை என்றால், ஊசி போட்டு அதை இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம். ஆனால் இந்த சிகிச்சையானது முறையான பயிற்சி பெற்ற மருத்துவாின் மேற்பாா்வையில் நடைபெற வேண்டும்.

குறிப்பு
ஒரு சிகிச்சை முறையில் ஆண்குறியில் இருக்கும் இரத்தக் குழாய்கள் சுருங்குவதற்காக ஆண்குறியில் ஊசி போடப்படுகிறது. இன்னொரு சிகிச்சை முறையில், ஆண்குறியில் அளவுக்கு அதிகமாக இருக்கும் இரத்தத்தை வெளியில் எடுப்பதற்காக ஊசி போடப்படுகிறது. ஆண்களுக்கு இந்த வலியுடன் கூடிய நீடித்த ஆண்குறி விறைப்பு பிரச்சனை வந்தால், உடனே அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அதை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டால் நிரந்தரமாக ஆண்குறி அதனுடைய விறைப்புத் தன்மையை இழந்துவிடும்.



Click it and Unblock the Notifications











