For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காபியில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

ஒரு ஸ்பூன் நெய்யை காபியுடன் சேர்த்து கலந்து ஒருவர் குடித்து வந்தால், அது உடல் எடையைக் குறைக்க உதவுவது முதல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.

|

உலகளவில் பல மில்லியன் மக்கள் விரும்பி குடிக்கும் ஓர் புத்துணர்ச்சியூட்டும் பிரபலமான பானம் தான் காபி. இத்தகைய காபியை பலவாறு குடிக்கலாம். மேலும் காபியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் வித்தியாசமான ஓர் காபி வகை தான் நெய் காபி. இத்தகைய காபி இன்று உடல் எடையைக் குறைக்க நினைக்கும் ஏராளமானோர் பின்பற்றும் மிகவும் பிரபலமான கீட்டோ டயட்டினருக்கு ஏற்றது.

What Is Ghee Coffee And Its Health Benefits

நெய் என்பது பண்டைய காலங்களிலிருந்து இந்திய உணவு மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை தெளிவான வெண்ணெய் ஆகும். ஒரு ஸ்பூன் நெய்யை காபியுடன் சேர்த்து கலந்து ஒருவர் குடித்து வந்தால், அது உடல் எடையைக் குறைக்க உதவுவது முதல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். வெண்ணெய் காபியை விட நெய் காபி மிகவும் சத்தானது மற்றும் இனிமையானது.

MOST READ: ஏன் குளிர்காலத்தில் அவசியம் கமலா ஆரஞ்சு சாப்பிடணும் தெரியுமா?

சரி, இப்போது நெய் காபியை ஒருவர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம். அதைப் படித்து தெரிந்து, இனிமேல் நெய் காபியை உங்களது டயட்டிலும் சேர்த்து பயன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அசிடிட்டியைக் குறைக்கும்

அசிடிட்டியைக் குறைக்கும்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபியைக் குடிக்கும் பலருக்கு அசிடிட்டி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் காபியுடன் சிறிது நெய் சேர்த்துக் கொள்வதால், அசிடிட்டி குறைவதோடு, உட்காயங்களும் குறையும். ஏனெனில் இந்த காபியில் புடைரிக் அமிலம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் ஆரோக்கியமான மெட்டபாலிசத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

எடையைக் குறைக்கும்

எடையைக் குறைக்கும்

காலையில் ஒரு கப் நெய் கலந்த காபியைக் குடிப்பதால், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, உடல் எடையைக் குறைக்கும் வேகம் அதிகரிக்கப்படும். அதிலும் கீட்டோ டயட்டை மேற்கொள்பவராயின், எடை இழப்பு வேகமாக ஏற்படும். ஒருவேளை நீங்கள் கீட்டோ டயட்டை மேற்கொள்ளாமல், நெய் காபியைக் குடித்தால், உடல் எடை அதிகரிக்கும். காபி திருப்தியை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் நெய்யில் கார்போஹைட்ரேட்டுகள் இல்லை மற்றும் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை எடை இழக்க பயனுள்ளதாக இருக்கும்.

மனநிலையை மேம்படுத்தும்

மனநிலையை மேம்படுத்தும்

நெய்யில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நரம்பு திசுக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு நல்லது மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியை மேம்படுத்தும். ஆகுவே காபியுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடித்தால், அது மனநிலையை நிலையாகவும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ளும்.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு நல்லது

லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு நல்லது

நெய் லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு மிகவும் சிறப்பான உணவுப் பொருள். ஏனெனில் நெய்யில் பால் திடப்பொருட்கள் மற்றும் புரோட்டீன்கள் இல்லை. மேலும் வெண்ணெயை விட நெய் வேகமாக வயிற்றில் செரிமானமாகும்.

ஆற்றலை அதிகரிக்கும்

ஆற்றலை அதிகரிக்கும்

காபி உடலின் ஆற்றல் மற்றும் ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிக்கும். அந்த காபியுடன் நெய்யை சேர்த்துக் குடித்தால், உடலின் ஆற்றல் இரட்டிப்பாக அதிகரிக்கும். காபியில் காப்ஃபைன் அதிகம் உள்ளது. இது உடலின் ஆற்றலை அதிகரிக்கத் தூண்டக்கூடியவை. எனவே நீங்கள் சுறுசுறுப்புடன் இருக்க நினைத்தால், காபியுடன் நெய் சேர்த்து கலந்து குடியுங்கள்.

நெய் காபியை தயாரிக்கும் முறை:

நெய் காபியை தயாரிக்கும் முறை:

* ஒரு டம்ளரில் காபியைத் தயாரித்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.

* பின் தயாரித்த காபியின் அளவிற்கு ஏற்ப அதில் 1 அல்லது 2 டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து கொண்டால், நெய் காபி தயார்.

குறிப்பு

குறிப்பு

நெய் காபி கீட்டோ டயட்டில் இருப்போருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. முக்கியமாக கீட்டோ டயட்டை மேற்கொள்ளும் போது முக்கியமான ஊட்டச்சத்துக்களைப் பெற தவறாதீர்கள் மற்றும் நெய் காபியில் இருந்து முழுமையான சத்துக்களையும், நன்மைகளையும் பெற நினைத்தால், ஆரோக்கியமான உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is Ghee Coffee And Its Health Benefits

Health benefits of ghee coffee include reducing acidity, helping in weight loss, increasing energy, improving mood, etc.
Story first published: Monday, October 28, 2019, 17:36 [IST]
Desktop Bottom Promotion