For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு புத்திசாலியா மாறணும்னு ஆசையா? அப்ப இந்த சாதாரண பயிற்சிய உங்க மூளைக்கு கொடுங்க போதும்...!

உங்கள் மூளையின் செயல்திறனை அதிகரிக்க அதற்கு சில பயிற்சிகள் கொடுக்கலாம். மூளைக்கு உடற்பயிற்சி என்றவுடன் கடுமையானதாக இருக்குமோ என்று பயப்பட வேண்டாம்

|

புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஒருவரின் புத்திக்கூர்மைதான் அவருக்கு அடையாளமாக இருக்கிறது, ஒருவரின் அழகிய தோற்றத்தை விட அவர்களின் புத்திக்கூர்மையே மற்றவர்களை ஈர்க்கும் ஆயுதமாக இருக்கிறது. அனைவருக்குமே மூளையின் அளவும், ஆற்றலும் ஒரே அளவுதான் இருக்கும். அதனை நாம் எவ்வளவு உபயோகிக்கிறோம் என்பதை பொறுத்துதான் ஒருவரின் புத்திக்கூர்மை அதிகரிக்கிறது.

brain exercises that help you get smarter

உங்கள் மூளையின் செயல்திறனை அதிகரிக்க அதற்கு சில பயிற்சிகள் கொடுக்கலாம். மூளைக்கு உடற்பயிற்சி என்றவுடன் கடுமையானதாக இருக்குமோ என்று பயப்பட வேண்டாம், நீங்கள் அன்றாடம் செய்யும் வேலைகளையே சிறிது மாற்றங்களுடன் உங்கள் மூளைக்கான பயிற்சியாக மாற்றலாம். இந்த பதிவில் உங்களின் புத்திக்கூர்மையை அதிகரிக்கும் எளிய பயிற்சிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாற்றுக் கையால் பல் துலக்குங்கள்

மாற்றுக் கையால் பல் துலக்குங்கள்

உங்கள் மூளையின் எதிர் பக்கத்தைப் பயன்படுத்துவதால் கார்டெக்ஸின் பகுதிகளில் விரைவான மற்றும் கணிசமான விரிவாக்கம் ஏற்படக்கூடும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. நீங்கள் வலது கையை உபயோகிப்பவராக இருந்தால் இடது கையால் பல் துலக்குங்கள்.

குளிக்கும் போது கண்களை மூடிக் கொள்ளுங்கள்

குளிக்கும் போது கண்களை மூடிக் கொள்ளுங்கள்

நீங்கள் பார்க்காத உங்கள் சொந்த உடலின் மாறுபட்ட அமைப்புகளை உங்கள் கைகள் கவனிக்கும், மேலும் அதைத் தொடர்ந்து உஙகளின் மூளைக்கு சிக்னல் அனுப்பும். உங்களின் தொடு உணர்வுகளை முடிந்தளவு பயன்படுத்த முயற்சிக்கவும். குளிக்கும் போது கண்களை மூடிக்கொண்டு குளிப்பது உங்களின் மூளையை சுறுசுறுப்பாக்கும்.

உங்கள் காலை நடவடிக்கைகளை மாற்றவும்

உங்கள் காலை நடவடிக்கைகளை மாற்றவும்

உங்களின் மூளையை ஒரே வகையான செயல்களுக்கு பழக்காதீர்கள். எனேவே முடிந்தளவு உங்களின் அன்றாட செயல்களில் மாற்றங்களை கடைபிடியுங்கள். காலை எழுந்து அலுவகம் செல்லும்போது வழக்கமான பாதையில் செல்லாதீர்கள், வழக்கமான டிவி நிகழ்ச்சிகளையே பார்க்காதீர்கள். இரு மாற்றத்திற்காக குழந்தைகள் நிகழ்ச்சிகளை கூட பார்க்கலாம்.

MOST READ: பெண்கள் அவர்களின் ராசிப்படி எப்படிப்பட்ட கணவன் தனக்கு வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள் தெரியுமா?

பழக்கமான பொருட்களை தலைகீழாக பார்க்கவும்

பழக்கமான பொருட்களை தலைகீழாக பார்க்கவும்

நீங்கள் பொருட்களை வலது பக்கமாக பார்க்கும் போது அது உங்கள் இடது மூளை வேகமாக செயல்பட்டு அந்த பொருளை அடையாளம் காண உதவும். அதுவே அந்த பொருளை தலைகீழாக பார்க்கும் போது உங்கள் மூளை அதில் பதிந்திருக்கும் உருவங்கள், வண்ணங்கள் மற்றும் வடிவங்களை உங்கள் உங்களுக்கு விளக்க முயலும். எனவே நீங்கள் அடிக்கடி பார்த்த பொருட்களை தலைகீழாக பார்க்க முயலுங்கள்.

இடங்களை மாற்றி அமருங்கள்

இடங்களை மாற்றி அமருங்கள்

ஒவ்வொருவருக்கும் அவர்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அவர்களுக்கு என தனி இருக்கைகள் இருக்கும். ஆனால் உங்கள் மூளைக்கு புதிய அனுபவங்களில் இருந்து அதிக பலன்கள் கிடைக்கும். எனவே உங்களின் இருக்கைகள், நீங்கள் அமரும் இடம் போன்றவற்றை அடிக்கடி மாற்ற முயற்சிக்கவும்.

உங்கள் மூக்கிற்கு புதிய அனுபவங்களை கொடுங்கள்

உங்கள் மூக்கிற்கு புதிய அனுபவங்களை கொடுங்கள்

ஒரு நாளின் தொடக்கத்தை காபியின் வாசனையுடன் தொடங்க கற்றுக் கொண்டது எப்பொழுது என்று உங்களுக்கு நினைவிருக்காது. புதிய வாசனைகளை நுகர்வதன் மூலம் நீங்கள் புதிய நரம்பியல் பாதைகளை தூண்டலாம். உங்களுக்கு பிடித்தமான வாசனை திரவியத்தை உங்கள் படுக்கைக்கு அருகில் வையுங்கள். தினமும் காலையில் எழுந்தவுடன் அதனை நுகருங்கள்.

MOST READ: இன்று எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா? உங்கள் ராசிக்கு என்ன நடக்கப் போகுது

கார் கதவுகளை திறந்து வையுங்கள்

கார் கதவுகளை திறந்து வையுங்கள்

உங்கள் நினைவுகளை படமாக்கும் மூளையின் பகுதி ஹிப்போகேம்பஸ் ஆகும். குறிப்பாக வாசனைகள், சத்தங்கள், காட்சிகளை படமாக்க உதவுவது இதுதான். எனவே பயணங்களின் போது ஜன்னலை திறந்து வையுங்கள், இது புதிய ஒலிகள், படங்கள், வாசனைகள் போன்றவற்றை உங்கள் மூளைக்கு அறிமுகப்படுத்தும்.

பொருட்களில் இருக்கும் அனைத்தையும் பாருங்கள்

பொருட்களில் இருக்கும் அனைத்தையும் பாருங்கள்

கடைகளை பொறுத்த வரையில் நம் கண்கள் மட்டத்தில்தான் நமக்கு தேவையான அனைத்து பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும். அதனால் நாம் அனைத்து பொருட்களையும் பார்ப்பதில்லை. இனிமேல் கடைகளுக்கு செல்லும் போது அனைத்து அலமாரிகளையும் நன்றாக பாருங்கள், நீங்கள் பார்க்காத புதிய பொருட்கள் உங்கள் கண்களில் தென்பட்டால் அவற்றை எடுத்து அவற்றின் விவரங்கள் அனைத்தையும் படியுங்கள். இது உங்களின் மூளைக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

வித்தியாசமாக படியுங்கள்

வித்தியாசமாக படியுங்கள்

நாம் சத்தமாக படிக்கும் போதும் அல்லது வாசிப்பதை கேட்கும்போதும் நம் மூளை அமைதியாக படிக்கும்போது உபயோகிக்கும் மூளை சுற்றுக்கு பதிலாக வேறு வகை மூளை சுற்றுகளை பயன்படுத்துகிறது. எனவே உங்கள் நண்பர்களுடன் சத்தம் போட்டு படிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள், நீங்களும் படியுங்கள், அவர்கள் படிப்பதையும் கேளுங்கள்.

MOST READ: புராணங்களில் கூறியுள்ளபடி இந்த கிழமைகளில் தலைக்கு குளிப்பது உங்களுக்கு பல ஆபத்தை ஏற்படுத்துமாம்...!

புதிய உணவுகளை உண்ணுங்கள்

புதிய உணவுகளை உண்ணுங்கள்

உங்கள் மூக்கில் உள்ள ஏற்பிகளின் தனித்துவமான சேர்க்கைகளை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் ஆல்ஃபாக்டரி அமைப்பு மில்லியன் கணக்கான வாசனைகளை வேறுபடுத்தி அறிய முடியும். இதற்கு உங்கள் மூளையின் உணர்ச்சி மையத்துடன் நேரடி தொடர்புடையது. எனவே புதிய வாசனைகளும், சுவைகளும் புதிய அனுபவங்களை ஏற்படுத்தக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weird Brain Exercises That Help You Get Smarter

These weird brain exercises that help you get smarter.
Story first published: Thursday, August 8, 2019, 15:06 [IST]
Desktop Bottom Promotion