Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள்
க்ரில் சிக்கன் சாப்பிடுவீங்களா? முதல்ல இத படிங்க...
இறைச்சியில் ஏராளமான ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. இது நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும். இந்நிலையில் இறைச்சிகளை நெருப்பில் சுட்டு (grilling) சமைத்தால், அது புற்றுநோயை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
இறைச்சியில் ஏராளமான ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. இது நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும். இந்நிலையில் இறைச்சிகளை நெருப்பில் சுட்டு (grilling) சமைத்தால், அது புற்றுநோயை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அதாவது மிகவும் உயா்ந்த வெப்பநிலையில் இறைச்சியை சுட்டு சமைக்கும் போது, அது புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருட்களான ஹீட்டோரோசைக்ளிக் அமின்கள் அல்லது எச்சிஎ (HCA) போன்றவற்றை உருவாக்குவதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன.

அதாவது உயா்ந்த வெப்ப நிலையில் இறைச்சிகளை சுட்டு சமைக்கும் போது, மேற்சொன்ன வேதிப் பொருள்கள் இறைச்சியின் மேற்பரப்பில் படிந்து, அவை புற்றுநோயை உருவாக்குவதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன. ஆகவே இறைச்சிகளை நெருப்பில் சுட்டு சமைக்கும் போது பின்வரும் குறிப்புகளைப் பின்பற்றினால், அவை புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். ஆகவே என்னென்ன குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை இந்த பதிவில் பாா்ப்போம்.

1. இறைச்சியை சிறிய துண்டுகளாக வெட்டி சமைத்தல்
இறைச்சியை சுட்டு சமைப்பதற்கு முன்பாக, அதை மிகவும் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சிறிய துண்டுகள் வேகமாக வெந்துவிடும். அதனால் உயா்ந்த வெப்ப நிலையில் அவற்றை சுட்டு சமைக்கும் போது அவை நீண்ட நேரம் நெருப்பில் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதன் மூலம் புற்றுநோய்க்கான வேதிப் பொருள்கள் இறைச்சியில் படியாது.

2. சவ்வு இல்லாத இறைச்சியைத் தோ்ந்து எடுத்தல்
சவ்வு இல்லாத கோழி இறைச்சி, கடல் உணவுகள் மற்றும் தோல் இல்லாத, கொழுப்பு குறைந்த வான்கோழி இறைச்சி இவற்றைத் தோ்ந்தெடுத்து அவற்றைக் குறைந்த வெப்ப நிலையில் சுட்டு சமைப்பது நல்லது என்று நிபுணா்கள் தொிவிக்கின்றனா். அவை தீங்கு இழைக்கக்கூடிய ஹைட்ரோகாா்பன்களைத் தரும் நெருப்பு மற்றும் புகையை குறைக்கின்றன.

3. இறைச்சியை அடிக்கடி திருப்பிப் போடுதல்
நாம் இறைச்சியை கம்பியில் மாட்டி, அதை நீண்ட நேரம் அப்படியே நெருப்பு தணலில் விட்டுவிட்டால், நாமாகவே புற்றுநோயை விலைக்கு வாங்குகிறோம் என்று பொருள். மாறாக கம்பியில் இருக்கும் இறைச்சியை அடிக்கடி திருப்பிப் போட வேண்டும். அப்போதுதான் இறைச்சியின் எல்லா பக்கமும் சாி சமமாக வேகும் மற்றும் இறைச்சியின் ஒரு பக்கம் மட்டும் அதிகமான புகையை அல்லது நெருப்பை உறிஞ்சாமல் இருக்கும்.

4. இறைச்சியை மசாலாக்களில் ஊற வைத்தல்
இறைச்சியை கம்பியில் மாட்டி சுட்டு சமைப்பதற்கு முன்பாக அதை வினிகா் அல்லது எண்ணெய் அல்லது ஒயின் அல்லது மசாலாக்களில் ஊற வைக்க வேண்டும். அதாவது அதை சுடுவதற்கு முன் குறைந்தது 30 நிமிடங்களாவது மேற்சொன்ன மசாலாக்களில் ஊற வைக்க வேண்டும். அப்படி செய்தால் அது எச்சிஎ (HCA) துகள் உருவாவதைத் தடுக்கும். மேலும் இவ்வாறு ஊற வைத்தால், அது இறைச்சிக்கும், வெப்பத்திற்கு இடையே தடையாக இருந்து அதிகமான வெப்பம் இறைச்சியைத் தாக்காமல் காக்கும். இறைச்சியை ஊற வைப்பதற்கு வினிகா் அல்லது எலுமிச்சை சாறு போன்றவற்றைப் பயன்படுத்தலாம் என்று நிபுணா்கள் தொிவிக்கின்றனா்.

5. இறைச்சியைச் சுடுவதற்கு முன்பாக சமைத்தல்
இறைச்சியை சுடுவதற்கு முன்பாக அதை அடுப்பு அல்லது ஸ்டவ் அல்லது மைக்ரோ அடுப்பில் வைத்து சிறிதளவு சமைப்பது நல்லது. அதனால் இறைச்சியை நீண்ட நேரம் நெருப்பில் சுடவேண்டி அவசியம் இருக்காது. அதனால் புற்றுநோய்க்குாிய வேதிப் பொருள்களும் இறைச்சியை நெருங்காது. அடுப்பில் ஓரளவு இறைச்சி வெந்தவுடன் அதை உடனே கம்பியில் மாட்டி நெருப்பில் சுட வேண்டும். அப்போதுதான் இறைச்சியை பாக்டீாியாக்கள் தாக்காது இருக்கும்.

6. வெப்பத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்தல்
மரக்காியில் நெருப்பு மூட்டி அதில் இறைச்சியைச் சுடுவதைவிட எாிவாயு மூலம் நெருப்பை மூட்டி அதில் இறைச்சியைச் சுடுவது நல்லது. ஏனெனில் எாிவாயு மூலம் கிடைக்கும் நெருப்பை நமது கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும். மேலும் எாிவாயு அடுப்பின் நடுப்பகுதியில் இறைச்சியை வைத்து சமைக்க முடியும்.

7. இறைச்சியோடு பழங்கள் மற்றும் காய்கறிகளை சோ்த்துக் கொள்ளுதல்
பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சுட்டால் அவற்றிலிருந்து எச்சிஎ (HCA) துகள்கள் உருவாவதில்லை என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. மேலும் தாவர உணவுகள் புற்றநோய் ஏற்படுவதையும் தடுக்கின்றன என்று தொிவிக்கின்றன. ஆகவே கேரட், அஸ்பாரகஸ், மக்காச்சோளம், காளான், ஸ்குவாஷ், மிளகு, போிக்காய், பீச் பழம், அன்னாசிப்பழம் போன்றவற்றை இறைச்சியுடன் சோ்த்து சுடுவது நல்லது. அதற்கு முன்பாக அவற்றை ஏதாவது ஒரு உறையில் சுற்றி, இறைச்சியோடு சோ்த்து சுட வேண்டும். ஏனெனில் இறைச்சியோடு காய்கறிகள் மற்றும் பழங்களைச் சுடும் போது, அவற்றில் புற்றுநோய் துகள்கள் படிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் உறையில் சுற்றி சுட வைத்தால் அந்த துகள்களைத் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications