Latest Updates
-
எச்சரிக்கை! இந்த 5 பழங்களை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா முகப்பரு அதிகமா வந்துடும்.. -
இந்தியாவில் மது விற்பனையில் முன்னணியில் உள்ள டாப் 5 மாநிலங்கள் - தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லையாம் தெரியுமா? -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
கோவக்காய் வாங்குனா இந்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் பொரியல் பண்ணுங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
வெண்டைக்காயை இப்படி மசாலா அரைச்சு பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு சாப்பிடுவாங்க.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
International Yoga Day 2026: தொப்பையை குறைக்கணுமா? அப்ப தினமும் இந்த 6 யோகாவை செய்யுங்க போதும்! -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க..
ஈஸியாக கிடைக்கும் இந்த காய்கறிகள் உங்கள் மலச்சிக்கல் பிரச்சனையை விரைவில் போக்குமாம்…!
நீடித்த மலச்சிக்கல் வயிற்று வீக்கம், மூல நோய், குத பிளவு, மலக்குடல் நீடித்தது போன்ற பல உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உங்கள் வழக்கமான குடல் இயக்கம் முறைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிப்பது மிக ம
மலத்தை வெளியேற்றுவதை கடினம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இது உங்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறதா? மற்றும் உங்கள் அன்றாட நடவடிக்கைகளை செய்வதிலிருந்து உங்களை கட்டுப்படுத்துகிறதா? என்ற கேள்விகளுக்கு ஆம் எனில், உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கலாம். ஒரு நபரின் குடல் இயக்கம் சரியில்லாதபோது மலச்சிக்கல் ஏற்படுகிறது. மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற பல வழிகள் உள்ளன. உடற்பயிற்சி, யோகா மற்றும் பல்வேறு வகையான உணவுகள் உடனடி நிவாரணம் அளிக்க உதவுகின்றன. மலச்சிக்கல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் மட்டுமே நீங்கள் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

நீடித்த மலச்சிக்கல் வயிற்று வீக்கம், மூல நோய், குத பிளவு, மலக்குடல் நீடித்தது போன்ற பல உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உங்கள் வழக்கமான குடல் இயக்கம் முறைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிப்பது மிக முக்கியம். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற பல மக்கள் வலுவான மலமிளக்கியை எடுத்துக்கொள்வதை நாடுகிறார்கள். இருப்பினும், மலமிளக்கியானது உங்கள் குடலுக்கு நீண்ட காலத்திற்கு தீங்கு விளைவிக்கும். எளிய முறையில் உங்களுக்கு கிடைக்கும் பின்வரும் காய்கறிகள் உங்கள் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும்.

ப்ரோக்கோலி
மலச்சிக்கலால் பாதிக்கப்படும்போது இந்த பச்சை நிற ப்ரோக்கோலி காய்கறியை சாப்பிடுவது உதவியாக இருக்கும். ப்ரோக்கோலியில் சல்போராபேன் உள்ளது. இது செரிமானத்தை ஊக்குவிக்கவும், உங்கள் குடலைப் பாதுகாக்கவும் உதவும். ஆரோக்கியமான செரிமானத்தில் குறுக்கிடக்கூடிய சில குடல் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுக்கவும் இந்த காய் உதவுகிறது. ப்ரோக்கோலி சாப்பிட்டுவந்தால் விரைவான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கும்.

இனிப்பு உருளைக்கிழங்கு
நீங்கள் மலச்சிக்கலால் பாதிக்கப்படுகையில் உங்கள் உணவில் இனிப்பு உருளைக்கிழங்கை சேர்த்துக்கொள்ளுங்கள். மிகவும் நன்மை பயக்கும் இனிப்பு உருளைக்கிழங்கில் நீர், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை இயற்கை மலமிளக்கியாக செயல்படுகின்றன. உங்கள் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் இவை உங்கள் குடல் இயக்கத்தையும் மேம்படுத்துகின்றன.

பசலைக்கீரை
ஃபைபர் மற்றும் மெக்னீசியம் இரண்டிலும் அதிகமாக இருக்கும் உணவு பசலைக்கீரை. இது உங்கள் உடலில் இருந்து பெருங்குடல் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் இது மலச்சிக்கல் நிவாரணத்தை வழங்குவதுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பிரஸ்ஸல்ஸ் முளைகள்
ப்ரோக்கோலியைப் போலவே, பிரஸ்ஸல்ஸ் முளைகளும் ஃபைபர் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் வளமான மூலமாகும். இவை மலமிளக்கியாக பயன்படுகின்றன. இது குடல் வழியாக உணவு செல்ல எளிதாக்குகிறது. குடல் இயக்கங்களுக்கு உதவுகிறது. மேலும் இது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் வழங்க உதவுகிறது.

கூனைப்பூக்கள்
கூனைப்பூவில் வைட்டமின் ஏ, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், இது கரையாத ஃபைபர் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் மூலமாக இருக்கின்றன. இது தண்ணீரை உறிஞ்சாது, உங்கள் மலத்தில் மொத்தமாக சேர்க்கின்றன. கூனைப்பூ, உட்கொள்ளும்போது, குடல் இயக்கம் நன்றாக செயல்படுகிறது. செரிமான உணவை அதனுடன் எடுத்துச் சென்று தேவையற்ற விஷயங்களை மலமாக வெளியேற்ற உதவுகிறது.

ருபார்ப் இலைகள்
மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய காய்கறி ருபார்ப். இது ஒரு மலமிளக்கிய விளைவைக் கொண்டுள்ளது. பிரபலமான மூலிகை மலமிளக்கியான சென்னோசைடு என்ற கலவை இருப்பதால், இந்த ருபார்ப் இலைகள் குடல் தூண்டுதல் பண்புகளுக்கு நன்கு அறியப்பட்டதாகும்.

பீன்ஸ் பயன்கள்
குறைந்த விலையில் கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று பீன்ஸ். இது நார்ச்சத்துக்கான ஒரு நல்ல ஆதாரமாகவும் இருக்கிறது. மேலும், இதில், இரும்புச்சத்து, கால்சியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. பீன்ஸ் உட்கொள்வது சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கவும், உங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவும். பீனில் உள்ள நார்ச்சத்து உங்களின் மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது.

வெள்ளரிக்காய்
உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், நீங்கள் கண்டிப்பாக வெள்ளரிக்காயை சாப்பிடலாம். உங்கள் குடலை ஆற்றவும், குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும் வெள்ளரி சாலட் தினமும் சாப்பிடுங்கள். வெள்ளரிக்காயில் 95% நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த பச்சை காய்கறியில் அதிக நீர் உள்ளடக்கம் இருப்பதால், இது மலச்சிக்கலுக்கு உதவும் சிறந்த உணவுகளில் ஒன்றாகும்.

முட்டைக்கோஸ்
நார்ச்சத்து அதிகம் உள்ள, முட்டைக்கோஸ் மலச்சிக்கல் நிவாரணத்திற்கு சிறந்தது. உடலுக்கு பல நன்மைகளைப் பெறவும், உங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் நீங்கள் முட்டைக்கோஸை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம்.

வெண்டைக்காய்
வெண்டைக்காயை உங்கள் உணவில் சேர்ப்பது உங்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவும். இதில், மியூசிலாஜினஸ் ஃபைபர் உள்ளது (இது கரையக்கூடிய நார்ச்சத்து, அதில் நீர் உள்ளடக்கம் உள்ளது). இது மலச்சிக்கலை போக்க உதவும். மியூசிலாஜினஸ் ஃபைபர் மலத்தை மென்மையாக்குகிறது, இது மலச்சிக்கலை அகற்றும்.

மற்ற உணவுகள்
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் பிற வகை உணவுகள் பாப்கார்ன், காபி, ஓட்மீல், பருப்பு வகைகள், அரிசி தவிடு, சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் ஆகும். மலச்சிக்கலை போக்க பல உணவுகள் உதவும். இதில், ஃபைபர் நிறைந்த உணவுகள் குடல் இயக்கங்களைத் தூண்டுகிறது. இதனால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நீங்கள் வெளியேறலாம்.



Click it and Unblock the Notifications