Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
தினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூளை நெய்யுடன் சேர்த்து கலந்து சாப்பிடும் போது, அதனால் உடலினுள் நிகழும் மாயங்களோ ஏராளம்.
உங்கள் வீட்டுச் சமையலறையில் பல மாயாஜாலப் பொருட்கள் நிறைந்திருக்கும் போது, வேறு என்ன வேண்டும்! இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுச் சமையலறையிலும் இருக்கும் பொருட்கள், உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் திறன் கொண்டவைகளாகும். நம் அனைவருக்குமே மஞ்சள், மிளகு போன்ற மசாலாப் பொருட்கள் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது தெரியும்.

ஆனால் அந்த மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூளை நெய்யுடன் சேர்த்து கலந்து சாப்பிடும் போது, அதனால் உடலினுள் நிகழும் மாயங்களோ ஏராளம். அக்காலத்தில் நம் முன்னோர்கள் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய எடுத்துக் கொண்ட ஒரு அருமருந்து என்றால், அது இந்த கலவைகள் தான்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களுடன், வாழ்க்கை முறையையும் வாழ்ந்து, இந்த மருந்து கலவையை உட்கொண்டு வந்தால், அன்றாடம் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். சரி, இப்போது நெய்யுடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

செரிமானம் மேம்படும்
செரிமானம் மோசமாக இருந்தால், பல பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். ஒருவரது குடல் மோசமான ஆரோக்கியத்துடன் இருந்தால், ஒட்டுமொத்த உடலின் செயல்பாடும் பாதிக்கப்படும். இதன் விளைவாக அஜீரண கோளாறு அடிக்கடி ஏற்படும். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும், நெய்யில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் மிளகில் உள்ள சுத்தப்படுத்தும் பண்புகள் உள்ளன. இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து உட்கொண்டால், உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, செரிமான பிரச்சனைகள் நீங்கி, வயிற்று ஆரோக்கியம் மேம்படும்.

உட்காயங்கள் சரியாகும்
நாள்பட்ட உட்காயங்கள் தான் சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் மற்றும் எலும்பு பிரச்சனைகளான மூட்டு வலி, முழங்கால் வலி போன்றவற்றால் அவஸ்தைப்படச் செய்கின்றன. ஆனால் நெய், மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூளை ஒன்றாக கலந்து உண்பதன் மூலம், இந்த பிரச்சனைல் இருந்து விடுபடலாம்.

இதய அரோக்கியம் மேம்படும்
நெய், மஞ்சள், மிளகு கலவை உடலில் ஆன்ஜியோஜெனிசிஸை ஊக்குவித்து, உடலில் புதிய இரத்த நாளங்கள் உருவாக அனுமதிக்கிறது. இந்த செயல்பாட்டினால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இந்த கலவை தூக்க சுழற்சியை சீராக்க உதவும் மற்றும் உறுப்புக்கள் சேதமடையும் அபாயத்தைத் தடுக்கும்.

அறிவாற்றல் மேம்படும்
மஞ்சள், நெய் மற்றும் மிளகுத் தூள் ஆகிய மூன்றுமே மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மிளகுத் தூள் மஞ்சளில் உள்ள குர்குமினை எளிதில் உறிஞ்சுவதற்கு மட்டுமின்றி, நல்ல கொழுப்புக்களையும் உறிஞ்ச உதவி புரியும். இது மூளையின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் மற்றும் அறிவாற்றல் பாதிக்கப்படும் அபாயம் குறையும்.

டி.என்.ஏ சேதத்தைத் தடுக்கும்
அதிகப்படியான மாசு, மருந்துகள், புறஊதா கதிர்வீச்சுக்களின் வெளிப்பாடு போன்றவற்றால் நமது டி.என்.ஏ-க்கள் சேதமடைகின்றன. ஆனால் ஒருவர் நெய்யுடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூளை சேர்த்து சாப்பிடும் போது, டி.என்.ஏ-வில் ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.

தயாரிக்கும் முறை:
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் நெய், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இது ஒருமுறை சாப்பிடுவதற்கு தேவையான அளவாகும். ஆனால் விருப்பமுள்ளவர்கள் அதிகளவு தயாரித்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேமித்து வைத்து, உட்கொள்ளலாம்.

எப்போது சாப்பிடுவது நல்லது?
இந்த கலவையை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். இருப்பினும், இந்த கலவையை ஒரு நாளைக்கு எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். அதிகமாக உட்கொண்டால், பக்க விளைவை சந்திக்கக்கூடும்.

இதர முக்கிய நன்மைகள்
ஒருவர் தினமும் இந்த கலவையை உட்கொண்டு வந்தால், குடலியக்கம் சிறப்பாக இருக்கும் மற்றும் செரிமான திறன் மேம்படும். அதுமட்டுமின்றி, நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைந்து, காலநிலை மாற்றத்தால் உடல்நிலை சரியில்லாமல் போவது தடுக்கப்படும். மேலும் இது இரத்த சர்க்கரை அளவை சீராக்கி, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனையைத் தடுக்கும்.



Click it and Unblock the Notifications











