For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போகி கொண்டாட்டத்தின்போது நீங்க சாப்பிடும் இந்த ஸ்வீட்கள்... உங்களுக்கு என்ன தருகிறது தெரியுமா?

எள்ளில் தாமிரம், மாங்கனீசு மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், மாலிப்டினம், வைட்டமின் பி1, செலினியம் மற்றும் நார்ச்சத்து போன்ற பல சத்துக்கள் உள்ளன.

|

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை நாம் கொண்டாடும்போது, நம்மை சுற்றி சொந்தபந்தகளின் அரவணைப்பு அதிகமாக இருக்கும். பொங்கல் பண்டிகை மகிழ்ச்சி பெருவெள்ளத்தின் திருவிழா. நான்கு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையில் முதல் நாள் போகி பண்டிகை. இத்தினத்தன்று மக்கள் தங்கள் வீடுகளின் முன் தீ மூட்டுகிறார்கள். போகி பண்டிகையை மறக்க முடியாததாகவும், இனிமை சேர்க்கும் வகையிலும் பல்வேறு வகையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பண்டிகையின்போது, வெல்லம் மற்றும் வேர்க்கடலை கொண்டு தயாரிக்கப்பட்டும் கடலை மிட்டாய், சோள லாவா (பாப்கார்ன்), எள் லட்டு போன்ற பல உணவுகள் தயாரிக்கப்பட்டு, சொந்தபந்தங்களுக்கு வழங்கப்படுகின்றன.

traditional-foods-eaten-on-bhogi-and-their-benefits-in-tamil

எனவே, இன்று இந்த கட்டுரையில் போகியில் சாப்பிடப்படும் பாரம்பரிய இனிப்பு உணவுகளை பற்றியும், அதை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடலை மிட்டாய்

கடலை மிட்டாய்

எள், வெல்லம், வேர்க்கடலை கலந்து தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் குளிர்காலத்தில் அதிகளவில் உண்ணப்படுகிறது. மூளை வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் கொண்டைக்கடலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோபெனால்கள் காணப்படுகின்றன. கடலை மிட்டாய் சாப்பிடுவது அல்சைமர் போன்ற நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மூளையின் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் இது உதவுகிறது.

எள் உருண்டை

எள் உருண்டை

எள்ளில் தாமிரம், மாங்கனீசு மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், மாலிப்டினம், வைட்டமின் பி1, செலினியம் மற்றும் நார்ச்சத்து போன்ற பல சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் குளிர்காலத்தில் உடலுக்கு ஆற்றலை அளிக்கும். குளிர்காலத்தில் எள் உருண்டை சாப்பிடுவது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது, இதய நோய்களைத் தடுக்கிறது, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது.

வேர்க்கடலை

வேர்க்கடலை

குளிர்காலத்தில் வேர்க்கடலை உட்கொள்வது உடலை உள்ளே இருந்து சூடாக வைத்திருக்க உதவுகிறது. இரும்பு, கால்சியம், துத்தநாகம், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி6 போன்ற பல ஊட்டச்சத்துக்கள் வேர்க்கடலையில் காணப்படுகின்றன. இது உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. நிலக்கடலை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குறிப்பிட்ட அளவில் இதனை உட்கொள்வதால் இதயக் கோளாறுகள் நீங்கும் எனத் தெரியவந்துள்ளது.

பாப்கார்ன்

பாப்கார்ன்

பாப்கார்ன் என்பது போகி பண்டிகையின் போது செய்யப்படும் ஒரு பிரபலமான சிற்றுண்டி. பல ஊட்டச்சத்துக்கள் பாப்கார்னில் காணப்படுகின்றன, இது செரிமானத்தை வலுப்படுத்தவும், கொழுப்பைக் கட்டுப்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது. குளிர்காலத்தில் பாப்கார்னை உட்கொண்டால், அது உடலில் வெப்பத்தை உண்டாக்கும். மக்காசோளத்தை தீயில் சுட்டு சாப்பிடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Traditional foods eaten on bhogi and their benefits in tamil

Traditional foods eaten on bhogi and their benefits in tamil
Story first published: Saturday, January 14, 2023, 18:39 [IST]
Desktop Bottom Promotion