For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவிலிருந்து உங்களை பாதுகாக்க உதவும் வைட்டமின் சி சத்தை அதிகளவு எப்படி பெறலாம் தெரியுமா?

|

கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கிறது. அனைவரும் இந்த வைரஸ் குறித்து அச்சத்தில் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று நம் உடல்நலம் குறித்து கூடுதல் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வைரஸுக்கு இன்னும் உறுதியான சிகிச்சை இல்லாததால், நம் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பதே நம்மைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான ஒரே வழி.

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான பொதுவான வழிகளில் ஒன்று வைட்டமின் சி. வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் திசுக்களின் வளர்ச்சி மற்றும் சரியாக இருப்பது அவசியம். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி ஊட்டசத்தை அதிகரிக்க உதவும் வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் சி பற்றாக்குறை

வைட்டமின் சி பற்றாக்குறை

வைட்டமின் சி பற்றாக்குறையால் நமது உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். எலும்புகள் மற்றும் தசைகளும் பலவீனம் அடைந்துவிடும், அதிக இரத்த அழுத்தம், பித்தப்பை பிரச்சினைகள், பக்கவாதம், சில வகை புற்றுநோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சினைகளும் நம் உடலில் ஏற்படுகின்றன. எனவே போதுமான அளவு வைட்டமின் சி சத்தை பெற நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

MOST READ: நீங்க அதிகம் பயன்படுத்தும் இந்த பொருள் இரத்த அழுத்தத்தை குறைத்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்..!

வைட்டமின் சி தினசரி பரிந்துரைக்கப்பட்ட மதிப்பு

வைட்டமின் சி தினசரி பரிந்துரைக்கப்பட்ட மதிப்பு

வைட்டமின் சி-யை உங்கள் உடல் உற்பத்தி செய்ய முடியாததால், உணவு மூலங்களிலிருந்தோ அல்லது கூடுதல் பொருட்களிலிருந்தோ வைட்டமின் சி பெறுவது முக்கியம். பெரும்பாலான மக்களுக்கு, ஒரு கப் ஆரஞ்சு, ப்ரோக்கோலி, சிவப்பு மிளகாய் ஒரு நாளைக்கு போதுமான வைட்டமின் சி அளிக்கிறது. வைட்டமின் சி தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவு 65 முதல் 90 மில்லிகிராம் வரை எடுத்துக்கொள்வது நல்லது. மேல் வரம்பு 2,000 மில்லிகிராம்.

வைட்டமின் சி சப்ளிமெண்ட்

வைட்டமின் சி சப்ளிமெண்ட்

வைட்டமின் சி உணவு எந்த தீங்கு விளைவிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸின் மெகாடோஸ்கள் குமட்டல், வயிற்றுப்போக்கு, தலைவலி, நெஞ்செரிச்சல், வாந்தி, தூக்கமின்மை மற்றும் பிடிப்பை ஏற்படுத்தும். தினசரி பரிந்துரைக்கப்பட்ட உட்கொள்ளலைச் சந்திக்க உதவும் பல்வேறு உணவுகள் இருக்கும்போது, ​​உங்கள் வைட்டமின் சி அளவை அதிகரிக்க முயற்சிக்கக்கூடிய ஒரு எளிய தந்திரமும் உள்ளது.

யுக்தி

யுக்தி

ஒரு எலுமிச்சையை நறுக்கி, உங்கள் பருப்புகள், சப்ஸி, போஹா, சூப், சாலட்கள் அல்லது வேறு எந்த டிஷிலும் பிழிந்து விடுங்கள். ஸ்கர்வியைத் தடுக்க நீண்ட காலத்திற்கு முன்பே எலுமிச்சை உணவுகளில் சேர்க்கப்பட்டு உண்ணப்படுகிறது. ஒரு முழு எலுமிச்சையில் வைட்டமின் சி சுமார் 83 மி.கி உள்ளது. இது தினசரி பரிந்துரைக்கப்பட்ட மதிப்பில் 92 சதவீதமாகும்.

MOST READ: பாலில் தேன் கலந்து குடிப்பது உண்மையில் நல்லதா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?

வைட்டமின் சி நன்மைகள்

வைட்டமின் சி நன்மைகள்

இதய நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், மகப்பேறு காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள், கண் நோய்கள், சரும சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்க வைட்டமின் சி உதவுகிறது. மேலும், வைட்டமின் சி சளி, தொடர் மூக்கு ஒழுகுதல், காய்ச்சலை குணப்படுத்தவும், குறிப்பாக நுரையீரலை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் இது மிக அவசியம்.

வைட்டமின் சி நிறைந்த பிற உணவுகள்

வைட்டமின் சி நிறைந்த பிற உணவுகள்

வைட்டமின் சி நிறைந்த உணவுகளின் பட்டியல் ஒரு நீளமான ஒன்றாகும். பட்டியலில் குவாஸ், தைம், முட்டை கோஸ், காலே, கிவி, ப்ரோக்கோலி, லிச்சி, பப்பாளி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி மற்றும் குடைமிளகாய் ஆகியவை அடங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The easiest diet trick to boost your vitamin C levels

Here we are talking about the easiest diet trick to boost your vitamin C levels