For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேலியோ டயட்டினால் உயிரிழந்த பிரபல நடிகரின் மனைவி: பேலியோ டயட்டால் சந்திக்கும் ஆபத்துக்கள் என்னென்ன தெரியுமா?

பிரபல தமிழ் நடிகரான பரத் கல்யாணின் 43 வயது மனைவியான பிரியதர்ஷினி சமீபத்தில் பேலியோ டயட்டை மேற்கொண்டதன் காரணமாக மரணமடைந்தார்.

|

பிரபல தமிழ் நடிகரான பரத் கல்யாணின் 43 வயது மனைவியான பிரியதர்ஷினி சமீபத்தில் பேலியோ டயட்டை மேற்கொண்டதன் காரணமாக மரணமடைந்தார். இவர் பேலியோ டயட்டை சில மாதங்களுக்கு முன்பிருந்து முயற்சித்ததாகவும், அந்த திடீர் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், அவரது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்ந்ததாகவும், அதுவே அவரது மரணத்திற்கு காரணமாகவும் கூறப்படுகிறது.

Tamil Actor Bharath Kalyan Wife Priyadarshini Dies Due To Paleo Diet; Know About Paleo Diet Risks

உலகம் முழுவதும் பெரும்பாலானோரால் பின்பற்றப்பட்டு வரும் பிரபலமான டயட் தான் பேலியோ டயட். இது 21 ஆம் நூற்றாண்டின் பிரபலமான டயட் ஆகும். பேலியோ டயட் 1970-களில் தான் நடைமுறைக்கு வந்தது. இந்த டயட் உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. ஆனால், ஒருவர் ஒரு டயட்டை மேற்கொள்ளும் முன் அதன் ஆபத்துக்களையும் அறிந்து கொள்ள வேண்டும். சரி, இந்த பேலியோ டயட் எந்த மாதிரியான உணவுகளை உள்ளடக்கியது மற்றும் அந்த டயட்டால் சந்திக்கும் ஆபத்துக்கள் என்னவென்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேலியோ டயட் என்றால் என்ன?

பேலியோ டயட் என்றால் என்ன?

பேலியோ டயட் என்பது கற்கால மனிதன் வேட்டையாடி உட்கொண்ட உணவுகளை ஒத்தது. கற்கால மனிதர்கள் உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றம் இதய நோய் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருந்தனர். இதற்கு காரணமாக இருந்தது அவர்களின் உணவுகளும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையும் தான். பல்வேறு ஆய்வுகளில் பேலியோ டயட் உடல் எடையைக் குறைப்பதாக நிரூபிக்கின்றன. அதற்காக பேலியோ டயட்டை அனைவருமே பின்பற்றலாம் என்பதில்லை. எந்த ஒரு டயட் மேற்கொள்வதாக இருந்தாலும், மருத்துவரின் அனுமதியைப் பெற்ற பின்னரே மேற்கொள்ள வேண்டும்.

பேலியோ டயட்டில் நன்மைகள் இருந்தாலும், ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. இப்போது பேலியோ டயட்டின் சில பக்க விளைவுகளைக் காண்போம்.

குறைந்த இரத்த சர்க்கரை அளவு

குறைந்த இரத்த சர்க்கரை அளவு

இன்சுலின் எடுப்பவர்கள் பேலியோ டயட்டை மேற்கொள்ளும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏனெனில் இன்சுலின் எடுக்கும் போது பேலியோ டயட்டை முயற்சித்தால், ஹைப்போகிளைசீமியா அல்லது இரத்த சர்க்கரை குறைவால் பாதிக்கப்படலாம். பேலியோ டயட்டில் கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை உண்பதால், குறைவான மருந்து எடுக்க வேண்டியிருக்கும். எனவே இந்த டயட்டை மேற்கொள்ளும் முன் தவறாமல் மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

லோ கார்ப் ப்ளூ

லோ கார்ப் ப்ளூ

ஒருவர் தங்களது உணவில் இருந்து ஸ்டார்ச், பருப்பு வகைகள் மற்றும் தானியங்களை அகற்றும் போது, அது உடல் சோர்வு, எரிச்சல் மற்றும் களைப்பிற்கு வழிவகுக்கும். பேலியோ டயட்டில் தாவரங்களில் இருந்து போதுமான கார்போஹைட்ரேட் கிடைத்தாலும், திடீரென்று கார்போஹைட்ரேட் நுகர்வில் மாற்றம் ஏற்படும் போது, அது உடலை சற்று பாதிக்கும். அதுவும் நீங்கள் பிரட், பீன்ஸ் மற்றும் பாஸ்தா போன்ற ஹெவியான உணவுகளை சாப்பிட்டு, திடீரென்று பேலியோ டயட் மேற்கொள்ளும் போது, லோ கார்ப் ப்ளூ நிகழலாம். இதன் அறிகுறிகளாவது 3-4 வாரங்கள் வரை நீடித்திருக்கும். இக்காலத்தில் உடலானது எரிபொருளுக்காக கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை எரிக்கும்.

ஹைப்போ தைராய்டிசம்

ஹைப்போ தைராய்டிசம்

நீண்ட காலமாக கார்போஹைட்ரேட் குறைவான டயட்டை மேற்கொண்டவர்களிடையே உடல் சோர்வு, மந்தம் மற்றும் குளிர்ச்சியின் உணர்திறன் போன்ற ஹைப்போதைராய்டிசத்தின் அறிகுறிகள் தெரிவதாக கூறப்படுகிறது. கூடுதலாக, லோ கார்ப் டயட்டானது பசி உணர்வை அடக்கி, எப்போதும் பட்டினியுடன் இருக்க வழிவகுக்கும். ஒருவரது உடல் எடை வேகமாக குறையத் தொடங்கினால், ஆற்றலை சேமிப்பதற்கு உடலானது தைராய்டு செயல்பாட்டைக் குறைக்கிறது.

அதிகமான புரோட்டீன்

அதிகமான புரோட்டீன்

பேலியோ டயட்டானது விலங்கு புரோட்டீனை அதிகம் எடுக்க அறிவுறுத்துகிறது. அதில் மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்றவை அடங்கும். ஆனால் இவற்றில் மீனைத் தவிர மற்ற உணவுகளில் சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது. அதிகப்படியான விலங்கு புரோட்டீனை உட்கொண்டால், அது இரத்தத்தில் நல்ல கொலஸ்ட்ராலைக் குறைத்து, கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் மற்றும் இதய நோயின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

சிறுநீரக பிரச்சனைகள்

சிறுநீரக பிரச்சனைகள்

பேலியோ டயட்டில் விலங்கு புரோட்டீனை அதிகம் உகொள்ள வேண்டியிருக்கும். அதிக விலங்கு புரோட்டீன்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, சிறுநீரகங்களானது கூடுதல் கழிவுப் பொருட்களை வெளியேற்ற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதன் விளைவாக சிறுநீரக பிரச்சனைகள் வருவதற்கான ஆபத்து உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tamil Actor Bharath Kalyan Wife Priyadarshini Dies Due To Paleo Diet; Know About Paleo Diet Risks

Tamil actor Bharath Kalyan wife Priyadarshini dies due to Paleo Diet; Know About Paleo Diet Risks.
Story first published: Thursday, November 3, 2022, 17:37 [IST]
Desktop Bottom Promotion