Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
தினமும் நீரில் ஊற வைத்த 2 வால்நட்ஸை சாப்பிடுவதால் என்னென்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?
பாதாமை விட அதிகளவில் முக்கியமான சத்துக்களை மூளையின் தோற்றத்தைக் கொண்ட வால்நட்ஸ் கொண்டுள்ளது. இந்த வால்நட்ஸையும் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதே நல்லது.
Soaked Walnuts Benefits: பொதுவாக நட்ஸ்கள் மிகவும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களாகும். மேலும் இது அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடியதும் கூட. தினமும் சிறிது நட்ஸ் சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் நட்ஸ்களை அப்படியே சாப்பிடுவதை விட, நீரில் ஊற வைத்து சாப்பிடுவது தான் நல்லது என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஏனெனில் நட்ஸ்களை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது, அவை உடலால் எளிதில் ஜீரணிக்கப்படுகின்றன.

பெரும்பாலானோர் பாதாமை தான் அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால் பாதாமை விட அதிகளவில் முக்கியமான சத்துக்களை மூளையின் தோற்றத்தைக் கொண்ட வால்நட்ஸ் கொண்டுள்ளது. இந்த வால்நட்ஸையும் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதே நல்லது. இதனால் அதில் உள்ள பைடிக் அமிலத்தின் அளவு குறைந்து, எளிதில் உடலால் உறிஞ்சப்படும். பலவீனமான குடலைக் கொண்டவர்கள் வால்நட்ஸை ஊற வைக்காமல் சாப்பிட்டால், இன்னும் அதிகளவு செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது நீரில் ஊற வைத்த வால்நட்ஸை தினமும் சாப்பிடுவதால் பெறும் நன்மைகளைக் காண்போம்.

சர்க்கரை நோய்க்கு நல்லது
சர்க்கரை நோயாளிகள் நீரில் ஊற வைத்த வால்நட்ஸை தினமும் சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக டைப்-2 சர்க்கரை நோயாளிகள் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடுவது மிகவும் நல்லது.

புற்றுநோயை தடுக்கும்
வால்நட்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் சில கலவைகள், உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. குறிப்பாக நீரில் ஊற வைத்த வால்நட்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால், குடல் புற்றுநோயின் அபாயம் தடுக்கப்படும்.

மன அழுத்தம் குறையும்
வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வளமான அளவில் உள்ளது. எனவே தினமும் நீரில் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடும் போது, அது மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் நீரில் ஊற வைத்த வால்நட்ஸ் ஒரு நல்ல மனநிலையை மேம்படுத்தும் உணவுப் பொருளாகவும் கூறப்படுகிது.

எடை இழப்பிற்கு உதவும்
வால்நட்ஸை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பதை தெரியுமா? வால்நட்ஸில் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, காப்பர் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இவை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது மற்றும் உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைக்க உதவுகிறது. மேலும் வால்நட்ஸை சாப்பிடும் போது, அது நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். முக்கியமாக அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும்.

நல்ல தூக்கத்திற்கு உதவும்
உங்களால் இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லையா? அப்படியானால் தினமும் 2 நீரில் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடுங்கள். இதனால் வால்நட்ஸில் உள்ள மெலடோனின் என்னும் பொருள், நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவி புரியும். அதுவும் இந்த வால்நட்ஸை காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிட்டால், நல்ல தூக்கம் கிடைக்கும்.

எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகும்
வால்நட்ஸில் உள்ள சில உட்பொருட்கள், எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்க உதவுகிறது. எனவே நீங்கள் எலும்பு தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், தினமும் 2 நீரில் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிட்டு வாருங்கள்.

கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்
நீரில் ஊற வைத்த வால்நட்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவி புரியும். மேலும் இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீராக பராமரித்து, இதய நோயின் அபாயத்தைத் தடுக்கும். இது தவிர இதய ஆரோக்கியம் மேம்படும்.



Click it and Unblock the Notifications
