Latest Updates
-
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்!
நீங்கள் சீஸ் அதிகம் சாப்பிடுகிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!
சீஸ் ஒரு முழு உணவாக கருதப்படுகிறது. பொதுவாக முழு உணவுகள் பொதுவாக ஆரோக்கியமானவை. ஆனால் அது அவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாத வரை மட்டும் தான். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
பெரும்பாலா மக்கள் சீஸை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் சீஸ் அனைத்து வகையான உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடக்கூடியவாறான உணவுப் பொருள். சீஸை பர்கருடன் சேர்த்துக் கொள்வதோடு மட்டுமின்றி, சீஸ் கேக் கூட செய்து சாப்பிடலாம். ஏனெனில் அந்த அளவில் சீஸ் பலவிதமான உணவுகளில் சுவைக்காக பயன்படுத்தப்படும் முக்கியமான உணவுப் பொருள். பால் பொருட்களில் பிரபலமான சீஸ், யாராலும் வேண்டாம் என்று கூறமுடியாத அளவில் மிகவும் சுவையானது.

இப்படிப்பட்ட சீஸ், இதய நோய் அல்லது உடல் பருமன் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும் என்பது தெரியுமா? உண்மையில் சீஸ் ஒரு முழு உணவாக கருதப்படுகிறது. பொதுவாக முழு உணவுகள் பொதுவாக ஆரோக்கியமானவை. ஆனால் அது அவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாத வரை மட்டும் தான். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த வகையில் சீஸை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சந்திக்கும் பிரச்சனைகள் அல்லது நீங்கள் அளவுக்கு அதிகமாக சீஸ் சாப்பிடுகிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் குறித்து இப்போது காண்போம்.

சீஸ் இயற்கையானது அல்ல
சீஸ் சாப்பிடுவதால் சந்திக்கும் மிகவும் தீவிரமான பக்கவிளைவுகளில் ஒன்று, சீஸ் இயற்கையானது என்று நாம் தவறாக நினைப்பது தான். சீஸ் நாம் நினைப்பதைப் போல் இயற்கையானது அல்ல. சீஸ் போன்ற பால் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் போவின் வளர்ச்சி ஹார்மோன் போன்ற செயற்கை பொருட்களைக் கொண்டிருக்கின்றன. இவற்றை தினமும் உட்கொண்டு வந்தால், அது ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

உடல் வறட்சி
போதுமான அளவு நீரைக் குடிக்காமல் போனால் உடல் விரைவில் வறட்சி அடைந்துவிடும். அதேப் போல் அதிகளவிலான சோடியம் நிறைந்த உணவுகளான க்ரீமி கேசரோல்கள் மற்றும் சீஸ் பர்கர் போன்றவற்றை உண்பதன் மூலமும் உடல் வறட்சி அடையும். ஏனெனில் சீஸ் அதிக சோடியம் நிறைந்த உணவுப் பொருள். எனவே சீஸ் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகளவில் உட்கொள்ளும் போது, அது உடலை வறட்சியடையச் செய்தவிடும்.

இரைப்பை பிரச்சனைகள்
லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராக இருந்து, அதிகளவிலான சீஸ் உட்கொண்டால், அதில் உள்ள லாக்டோஸ் அனைத்தும் ஜீரணிக்கப்பட்டு உடலால் உறிஞ்சப்படுவதற்கு பதிலாக பெருங்குடலில் அப்படியே தங்கிவிடும். உங்கள் உடலுக்கு சீஸ் செட் ஆகவில்லை என்றால் சீஸ் உணவுகளை அதிகம் உட்கொண்ட பின்னர் வாய்வு தொல்லை பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

கொலஸ்ட்ரால்
சீஸில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது. எனவே சீஸ் சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்பதில்லை சந்தேகமில்லை. ஆனால் அளவாக சீஸ் சாப்பிட்டால், அதனால் எவ்வித மோசமான பாதிப்பும் இருக்காது. இருப்பினும், இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், சீஸ் உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

உடல் பருமன்
பலரும் சீஸ் கார்போஹைட்ரேட் குறைவான அல்லது புரோட்டீன் அதிகமான உணவுப் பொருள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இவற்றை சாலட், சாண்விட்ச், ஆம்லெ போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுகிறார்கள். ஆனால் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், சீஸை உணவில் சேர்த்து வந்தால், எடை இழப்பிற்கு எதிர்மாறான முடிவையே பெறக்கூடும். ஆகவே எடையைக் குறைக்க நினைத்தால், சீஸை உங்கள் உணவில் இருந்து நீக்குங்கள்.



Click it and Unblock the Notifications
