For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா? அப்ப இத தெரிஞ்சிக்கோங்க...!

பால் ஒரு ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. இது அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.

|

பால் தூய்மையானது, வெண்மையானது, ஆரோக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மிகவும் சத்தான மற்றும் நீண்ட காலமாக ஒரு ஆரோக்கியமான உணவாக கருதப்படுவது பால். இதில், கால்சியம், புரதம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிரம்பியுள்ளது. பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக, பால் குளிர்ச்சிக்கு சிகிச்சையளிப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் ஒரு சிறந்த வீட்டு மருந்தாக கருதப்படுகிறது.

Should you drink milk before going to bed?

தூக்கமின்மை பிரச்சினையை சந்திக்கும் நபர்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு பால் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செய்வது உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு மன அழுத்தத்திலிருந்து நிவாரணத்தையும் அளிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த கூற்று உண்மையில் எவ்வளவு உண்மை? இதைப் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது என்று இக்கட்டுரையில் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூங்குவதற்கு பால் உண்மையில் உதவுமா?

தூங்குவதற்கு பால் உண்மையில் உதவுமா?

மனிதர்கள் மற்றும் விலங்குகள் என ஒரு சிறிய குழுவில் மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளின்படி, சீஸ் மற்றும் பால் போன்ற எந்தவொரு பால் உற்பத்தி பொருட்களையும் சாப்பிடுவது உங்கள் தூக்கத்திற்கு சில சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் காட்டுகிறது. படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு பால் குடிப்பவர்கள் இரவில் நிம்மதியாக தூங்கலாம். ஆராய்ச்சிகளின்படி, பாலில் இரண்டு முக்கியமான சேர்மங்கள் உள்ளன. அவை டிரிப்டோபான் மற்றும் மெலடோனின். இவை தூக்க தூண்டியாக செயல்படக்கூடும்.

MOST READ: பெண்களே இந்த வயதிற்கு மேல் உங்கள் பிறப்புறுப்பில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

இரண்டு கலவைகள்

இரண்டு கலவைகள்

டிரிப்டோபன் செரோடோனின் என்ற நரம்பியக்கடத்தி தயாரிக்க உதவுகிறது. இது மனநிலையை மேம்படுத்தவும், உங்கள் மனதை நிதானப்படுத்தவும் உதவுகிறது. மறுபுறம், மெலடோனின் உங்கள் சர்க்காடியன் தாளத்தைக் கட்டுப்படுத்தவும், நீங்கள் தூங்கச் செல்லவும் உதவுகிறது. தூக்கக் கோளாறின் சிக்கலைக் கையாளும் போது இந்த இரண்டு சேர்மங்களும் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

 எந்த ஆய்வும் இல்லை

எந்த ஆய்வும் இல்லை

தூக்கமின்மையைக் கையாளும் போது இந்த கலவையின் கூடுதல் பொருட்களை கூட மக்கள் எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும், இந்த இரண்டு சேர்மங்களைக் கொண்ட ஒரு கிளாஸ் பால் குடிப்பதன் மூலம் சப்ளிமெண்ட்ஸ் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்பது இன்னும் எந்த ஆய்வும் நிரூபிக்கப்படவில்லை.

உளவியல் அம்சம்

உளவியல் அம்சம்

ஆதாரங்கள் இல்லாதது மற்றும் மக்களின் வலுவான நம்பிக்கை காரணமாக, பெரும்பாலான வல்லுநர்கள் பால் தூக்கத்தை ஊக்குவிக்கும் திறன் உளவியல் விளைவுகளுடன் தொடர்புடையது என்று கருதுகின்றனர். படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு இனிமையான எதையும் அருந்துவது நல்ல இரவு தூக்கத்தை ஊக்குவிக்கும் என்றும் அது பால்தான் என்றும் கூறப்படுகிறது.

MOST READ: இரவு நேரத்தில் அதிகப்படியான வாயு வெளியேறுகிறதா? அதற்கு உங்களோட இந்த செயல்தான் காரணமாம்...!

இரவில் பால் குடிப்பது நல்லதா?

இரவில் பால் குடிப்பது நல்லதா?

இரவில் பால் குடிப்பது எடை அதிகரிப்போடு இணைக்கப்பட்டுள்ளது. மலச்சிக்கல் மற்றும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு இது கூட தீங்கு விளைவிக்கும். இது மலச்சிக்கலின் அறிகுறிகளை மோசமாக்கும் மற்றும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கத்தைக் கொண்டவர்களுக்கு செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த நபர்கள் இரவில் பால் தவிர்ப்பது நல்லது.

எந்த நேரம் அருந்துவது நல்லது?

எந்த நேரம் அருந்துவது நல்லது?

பால் ஒரு ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. இது அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. எனவே, இதை தனியாக உட்கொள்வது நல்லது. பாலை உட்கொள்வதற்கு சிறந்த நேரம் காலை மற்றும் மாலையாக இருக்க முடியும்.

இறுதிகுறிப்பு

இறுதிகுறிப்பு

படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு பால் குடிப்பது, நீங்கள் தூக்கத்தை பெற உதவுகிறது என்பதை நிரூபிக்கும் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. சிறந்த தூக்கத்திற்கு நீங்கள் ஒரு கப் சூடான மூலிகை தேநீரைப் பருகலாம். இருப்பினும், நீங்கள் இன்னும் முயற்சிக்க விரும்பினால், எந்தத் தீங்கும் இல்லை. படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்பே எப்போதும் சூடான பால் குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Should you drink milk before going to bed?

Learn how melatonin in milk works and should you make a glass of milk before bedtime a habit.
Desktop Bottom Promotion