For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எதை சாப்பிட்டாலும் ரொம்ப உப்பா இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்குன்னு அர்த்தம்...

சிலருக்கு வாய் மிகவும் உப்பு சுவையுடன் இருக்கும். எதை சாப்பிட்டாலும் உப்பாக இருப்பது போன்றே இருக்கும். இப்படி ஒருவருக்கு வாய் உப்பாக இருப்பதற்கு பல காரணங்களால் இருக்கலாம்.

|

சிலருக்கு வாய் மிகவும் உப்பு சுவையுடன் இருக்கும். எதை சாப்பிட்டாலும் உப்பாக இருப்பது போன்றே இருக்கும். இப்படி ஒருவருக்கு வாய் உப்பாக இருப்பதற்கு பல காரணங்களால் இருக்கலாம். அதில், அதிகப்படியான உப்பை உட்கொள்வது, உடல் வறட்சி, ஊமிழ்நீர் சுரப்பியில் தொற்று, சளி அல்லது காய்ச்சல், சைனஸ் பிரச்சனை, அதிகப்படியான மது அல்லது காப்ஃபைன் உட்கொள்வது, தைராய்டு எதிர்ப்பு மருந்துகள், ஹீமோதெரபி மற்றும் அலர்ஜிகள் போன்ற பல இம்மாதிரியான பிரச்சனையை சந்திக்க வைக்கலாம்.

Salty Taste In Mouth: Causes And Home Remedies In Tamil

அதோடு மற்ற காரணங்களான வைட்டமின் பி12 மற்றும் ஜிங்க் போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டினாலும் ஒருவருக்கு வாய் மிகவும் உப்பாக இருக்கலாம். இப்படி உப்புச் சுவையுடன் இருக்கும் வாயை ஒருசில இயற்கை வழிகள் மற்றும் ஆயுர்வேத வழிகளின் மூலம் சரிசெய்ய முடியும். இப்போது அவற்றை விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிகிச்சை

சிகிச்சை

எந்த ஒரு பிரச்சனையை சந்தித்தாலும், முதலில் அதற்கான அடிப்படை காரணத்தை அறிந்து சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். அதோடு ஒரு பிரச்சனைக்கான சிகிச்சையும் அதன் அடிப்படை காரணத்தை சரிசெய்வதாகும். வாயில் உப்புச் சுவையை பல்வேறு நோய்கள் தூண்டுகின்றன. ஆகவே காரணத்தைக் கண்டறிவது சிகிச்சை அளிப்பதற்கான முதல் படியாகும்.

பொட்டாசியம் நிறைந்த உணவுகள் நல்லது

பொட்டாசியம் நிறைந்த உணவுகள் நல்லது

பெரும்பாலும் அதிகப்படியான உப்பு உட்கொள்வது இதன் பொதுவான காரணமாக இருப்பதால், உணவில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும் மற்றும் உணவில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். உலர்ந்த ஆப்ரிகாட், கொடி முந்திரி, உலர் திராட்சை, அத்திப் பழம், அவகேடோ, வாழ்ப்பழம், கிவி, பீச், பசலைக்கீரை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேல் கீரை, முளைக்கட்டிய பிரஸல்ஸ், சீமைச் சுரைக்காய், பச்சை பீன்ஸ், யோகர்ட், ப்ராக்கோலி, ஸ்குவாஷ், வெள்ளை பீன்ஸ், கேண்டலூப், பருப்பு வகைகள், பிஸ்தா போன்றவற்றில் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளன. இந்த உணவுகளை அதிகம் உண்பது நல்லது.

அதோடு உடல் வறட்சியும், போதுமான நீர் அருந்தாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருப்பதால், தினமும் குறைந்தது 3 லிட்டர் நீரை அருந்த வேண்டும்.

வாயில் உள்ள உப்புச் சுவையை அகற்றுவது எப்படி?

வாயில் உள்ள உப்புச் சுவையை அகற்றுவது எப்படி?

பின்வரும் வழிகள் மற்றும் குறிப்புகள் வாயில் உள்ள உப்புச் சுவையை அகற்ற உதவுபவைகள். இந்த வழிகளை தவறாமல் பின்பற்றினால், உடனடி தீர்வைப் பெறலாம்.

* மது அருந்துவதைக் குறைக்கவும். உங்களால் மது அருந்தாமல் இருக்க முடியும் என்றால், இது இன்னும் விரைவில் தீர்வு அளிக்கும்.

* உணவில் உப்பைக் குறைத்து, குடிக்கும் நீரின் அளவை அதிகரிப்பது.

* மல்டிவைட்டமின் சப்ளிமெண்டுகளை குறைந்தது 3 மாதம் தொடர்ந்து உட்கொள்ளவும்.

* புகையிலைப் பொருட்களைத் தவிர்க்கவும்.

* காரமான மற்றும் சூடான உணவுகளைத் தவிர்க்கவும்.

* குளிர்ந்த நீரால் அடிக்கடி வாயைக் கொப்பளிக்கவும்.

* உப்புள்ள பலகாரங்களைத் தவிர்க்கவும்.

* ஒருவேளை டூத் பேஸ்ட்டால் இந்நிலை ஏற்படுவது போன்று உணர்ந்தால், உங்களின் டூத் பிரஷ் மற்றும் டூத் பேஸ்ட்டை மாற்றவும்.

* தினமும் குறைந்தது 4 முறையாவது வாயைக் கழுவுங்கள்.

அதிகப்படியான யூரிக் அமிலம் வாயில் உப்பு சுவையைத் தூண்டுமா?

அதிகப்படியான யூரிக் அமிலம் வாயில் உப்பு சுவையைத் தூண்டுமா?

ஆம், ஒருவரது உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தால், அது வாயில் உப்புச் சுவையைத் தூண்டும். ஒருவேளை இன்னும் உப்பை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது சீரம் யூரிக் அமில அளவை அதிகரிப்பது, முடி உதிர்வது, இளமையிலேயே நரைமுடியை உண்டாக்குவது போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் அதிகப்படியான யூரிக் அமிலம் கீல்வாதத்தை உண்டாக்கும். எனவே இதை சரிசெய்வதற்கு உட்கொள்ளும் உப்பின் அளவைக் குறைப்பதுடன், கீல்வாதத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளவும் மற்றும் தினமும் குறைந்தது 3 லிட்டர் நீரைக் குடிக்கவும்.

ஆயுர்வேதம் கூறுவது என்ன?

ஆயுர்வேதம் கூறுவது என்ன?

ஆயுர்வேதத்தின் படி, உடலில் கப மூலக்கூறுகளின் அளவு அதிகரிப்பதால் வாயில் அதிகப்படியான உப்பு சுவை தூண்டப்படுகிறது. பொதுவாக இது வாயில் இரண்டு வகையான சுவைகளைத் தூண்டும். அவையாவன:

* இனிப்பு சுவை

* உப்பு சுவை

இப்போது உப்பு சுவை பற்றி விரிவாக காண்போம். கபம் மற்றும் பித்த ஆதிக்கம் செலுத்தும் உணவுகளால் வாயில் உப்பு சுவை ஏற்படுகிறது என்று ஆயுர்வேதம் நம்புகிறது. ஆகையால் ஆயுர்வேதம் முதல் சிகிச்சையாக உப்பு மற்றம் உப்பு நிறைந்த உணவுகளைக் குறைக்கக் கூறுகிறது. கபம் மற்றும் பித்த தோஷம் கொண்டவர்களுக்கான சிகிச்சைகளாவன:

* உப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகளைக் குறைக்கவும்.

* செரிமான நெருப்பை அதிகரிக்க கசப்பான மற்றும் கடுமையான மூலிகைகளை உட்கொள்ளவும்.

* கல்லீரலை சரிசெய்யும் மருந்துகள்

* பித்தம் மற்றும் கபத்தை சமாதானப்படுத்தும் மருந்துகள்

வாயில் உள்ள உப்பு சுவைக்கு சிகிச்சை அளிக்கும் மூலிகைகள்:

வாயில் உள்ள உப்பு சுவைக்கு சிகிச்சை அளிக்கும் மூலிகைகள்:

* ஏலக்காய்

* பட்டை

* வால் மிளகு

* நெல்லிக்காய்

வாயில் தூண்டப்படும் உப்புச் சுவைக்கான இயற்கை தீர்வுகள்:

வாயில் தூண்டப்படும் உப்புச் சுவைக்கான இயற்கை தீர்வுகள்:

மேலே கொடுக்கப்பட்டுள்ள மூலிகைகளைப் பல்வேறு வழிகளில் தயாரித்து உட்கொள்வதன் மூலம் வாயில் தூண்டப்படும் உப்புச் சுவையில் இருந்து விடுபடலாம். இப்போது அந்த ஒவ்வொரு மூலிகை பொருட்களையும் எப்படி உட்கொள்வது என்பதைக் காண்போம்.

பட்டை டீ

பட்டை டீ

* 2 கிராம் பட்டைத் தூளை எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் பட்டைத் தூளை சேர்த்துக் கொள்ளவும்.

* இந்த நீரை நன்கு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டவும்.

* அதன் பின் வெதுவெதுப்பான நிலையில் அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்கவும்.

இந்த பானத்தை குறைந்தது 10 நாட்கள் தொடர்ந்து குடித்து வருவதன் மூலம், வாயில் தூண்டப்படும் உப்புச் சுவை பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.

ஏலக்காய்

ஏலக்காய்

ஏலக்காய் நல்ல மணம் நிறைந்த மசாலாப் பொருள். இதை வாயில் போட்டு மெல்லுவது, வாயின் சுவையை மாற்ற உதவுகிறது. குறிப்பாக இது வாயில் உப்புத்தன்மையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

வாயில் தூண்டப்படும் உப்புச் சுவையில் இருந்து விடுபட உதவும் மிகச்சிறப்பான ஒரு பொருள் தான் நெல்லிக்காய். அதற்கு நெல்லிக்காயை ஜூஸ் தயாரித்தோ அல்லது அப்படியேவோ சாப்பிடலாம். ஆனால் அதற்கு நெல்லிக்காயை தினமும் இரண்டு முறை என 30 நாட்கள் தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Salty Taste In Mouth: Causes And Home Remedies In Tamil

Salty taste in mouth can be due to a number of underlying factors or causes. Here are some home remedies for salty taste in mouth in tamil. Read on...
Desktop Bottom Promotion