For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிபி, சர்க்கரை நோய் வராம இருக்க, இந்த பூவை தினமும் சாப்பிடுங்க...

இந்தியாவில் எளிதில் கிடைக்கக்கூடிய மலர்களான ரோஜா, மல்லிகை, தாமரை மற்றும் செம்பருத்தி ஆகியவை அழகாகவும் மற்றும் மணமாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கும் ஏற்றவையாகவும் இருக்கின்றன.

|

பூக்கள் என்றாலே அவற்றின் அழகும், மணமும் தான் நமது ஞாபகத்திற்கு வரும். ஆனால் அதையும் தாண்டி மலர்களை உட்கொண்டால் அவை உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

Reasons Why You Must Include Hibiscus Flower To Your Diet

இந்தியாவில் எளிதில் கிடைக்கக்கூடிய மலர்களான ரோஜா, மல்லிகை, தாமரை மற்றும் செம்பருத்தி ஆகியவை அழகாகவும் மற்றும் மணமாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கும் ஏற்றவையாகவும் இருக்கின்றன. இந்த கட்டுரையில் செம்பருத்திப் பூவை உண்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.

MOST READ: நம் முன்னோர்கள் சர்க்கரை நோய் வராமலிருக்க சாப்பிட்டது இத தானாம்...

செம்பருத்திப் பூவிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகைத் தேனீரைப் பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். கீழே செம்பருத்தி பூவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் செம்பருத்தி

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் செம்பருத்தி

செம்பருத்தியில் தாயாரிக்கப்படும் தேநீரை தினமும் அருந்தி வந்தால், இரத்த அழுத்தம் அல்லது அதிக இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

எத்னோஃபார்மகாலஜி என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று, செம்பருத்தியை சாப்பிட்டு வந்தால், அது இதயம் துடித்துக் கொண்டிருக்கும் போது இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை 11 விழுக்காடு குறைக்கிறது என்றும் அதே நேரத்தில் இதயம் ஓய்வில் இருக்கும் போது இரத்தக் கூழாய்களில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை 7 விழுக்காடு குறைக்கிறது என்றும் கூறுகிறது.

செம்பருத்தி தேநீர் தயாரிக்கும் முறை

செம்பருத்தி தேநீர் தயாரிக்கும் முறை

முதலில் 2 குவளை தண்ணீரை சூடுபடுத்தி, அதில் ஒரு செம்பருத்திப் பூவை இட்டு அதை மேலும் 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பின் அதில் ஒரு தேக்கரண்டி தேன் அல்லது அரை தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். இப்போது செம்பருத்தி தேனீர் தயாராகிவிட்டது. தினமும் 2 வேளைகள் செம்பருத்தி தேநீரை பருகி வந்தால் இரத்த அழுத்தத்திற்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

அதோடு, ஒரு ஜாடியில் 2 செம்பருத்திப் பூக்களை இட்டு, அதில் நறுக்கப்பட்ட அரை தேக்கரண்டி புதினா இலைகளை சேர்த்து, அவற்றோடு 1 தேக்கரண்டி சர்க்கரையைக் கலந்து ஊற வைத்தால் செம்பருத்தி பானம் கிடைக்கும். அது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் நாள் ஒன்றுக்கு அரைக் குவளை பானத்தை மட்டுமே அருந்த வேண்டும்.

அதே நேரத்தில் செம்பருத்திப் பூவில் இருக்கும் புளிப்புத் தன்மை, பற்களில் இருக்கும் எனாமலை அழித்துவிடும் அல்லது வலுவிழக்கச் செய்துவிடும். ஆகவே செம்பருத்தி தேநீரை அருந்தியவுடன் வாயைக் கழுவ வேண்டும். அதுபோல் குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால் செம்பருத்தித் தேநீரை அருந்தக்கூடாது. மேலும் புதிதாக செம்பருத்தித் தேநீரை அருந்துபவர்கள் ஒரு நாளைக்கு 2 குவளைகள் மட்டுமே அருந்த வேண்டும். மேலும் அடிக்கடி இரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செம்பருத்தி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செம்பருத்தி

இரத்த அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்கும் செம்பருத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது செம்பருத்திப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது உடலில் பாதிப்பு அடைந்திருக்கும் பி மற்றும் டி செல்களைத் தூண்டி அவற்றை வலுப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பை அமைப்பையும் வலுப்படுத்துகிறது.

இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் செம்பருத்தி

இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் செம்பருத்தி

இரத்தச் சர்க்கரை அதிகமாகும் போது அது உயிருக்கு ஆபத்தான ஒன்றாக மாறிவிடும். இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகும் போது அது இதயத்தை மட்டும் பாதிப்பதில்லை மாறாக சிறுநீரகத்திலும் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. எனவே தினமும் செம்பருத்தியை எடுத்து வந்தால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அதே நேரத்தில் செம்பருத்திப் பூவை மட்டும் சாப்பிடுவதோடு நின்று விடாமல் முறையான உணவுப் பழக்கத்தையும் மற்றும் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தலைமுடி உதிர்வைத் தடுக்கும் செம்பருத்தி

தலைமுடி உதிர்வைத் தடுக்கும் செம்பருத்தி

தலைமுடியைப் பாராமரிக்கப் பயன்படும் மருத்துவ பொருட்களைத் தயாரிப்பதில் செம்பருத்திப் பூவும் ஒரு முக்கியப் பொருளாக இருக்கிறது. குறிப்பாக பொடுகுகளை அழிப்பது, முடி உதிர்வைத் தடுப்பது மற்றும் பிற தலைமுடிப் பிரச்சனைகளைக் களைவதில் செம்பருத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து, அந்த பசையை உச்சந்தலை மற்றும் தலைமுடியிலும் பூசி வந்தால் அது தலைமுடியை நீளமாக வளர்ப்பதோடு மட்டும் அல்லாமல் தலைமுடிக்கு ஒரு பளபளப்பையும் கொடுக்கும்.

கொழுப்பைக் கட்டுப்படுத்தும் செம்பருத்தி

கொழுப்பைக் கட்டுப்படுத்தும் செம்பருத்தி

செம்பருத்தி பூ இரத்த அழுத்தத்தை மட்டுமல்லாமல் கொழுப்பைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது செம்பருத்திப் பூவைத் தவறாது சாப்பிட்டு வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை 22 விழுக்காடு வரை குறைக்கிறது.

மேலும் செம்பருத்தியில் பல மருத்துவக் குணங்கள் இருக்கின்றன. எனவே செம்பருத்தி தேநீர் அல்லது செம்பருத்திப் பூவை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அது உடலில் நல்ல பலன்களைத் தரும் என்பதில் ஐயமில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why You Must Include Hibiscus Flower To Your Diet

Here Are Some Reasons Why You Must Include Hibiscus Flower To Your Diet. Read on...
Desktop Bottom Promotion